.

2011-11-18

  தேசத்தின் இணையற்ற தலைவரே உங்களது வெற்றிப் பயணத்திற்கு எனது நல்லாசிகள்

தேசத்தின் இணையற்ற தலைவரே உங்களது வெற்றிப் பயணத்திற்கு எனது நல்லாசிகள்

யிக்கிய இலங்கையின் இணையற்ற தலைவராகிய அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பதவியேற்பையும் பிறந்த தினத்தையும் முன்னிட்டு ஆசிச்செய்தியினை வெளியிடுவதற்கு கிடைத்தமை எனது பாக்கியம் என்றே கருதுகின்றேன்.

பாட்டாளி மக்களின் நண்பனான பாட்டாளி மக்களின் உரிமைகளை வென்றெடுக்க போராடிய உழைக்கும் மக்களின் தலைவனாக இலங்கையில் இன்று வரை உதித்த ஒரே தலைவர் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே.

தென்னிலங்கையில் உதயமாகிய அமரர் டி.ஏ. ராஜபக்ஷ அவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் மறைந்த தலைவரான எஸ்.டபிளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் உற்ற சகாவாக விளங்கினார். அமரர் டி.ஏ.ராஜபக்ஷவின் புத்திரரான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த நாட்டின் தலைவராக விளங்குவது எம்நாட்டவரின் அதிர்ஷ்டமே. இன, மத, பேதமற்ற தலைவராக இவர் விளங்குகிறார். இதற்கு நல்ல உதாரணம் பலஸ்தீன பிரச்சினையின்போது பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் இலங்கை கிளையின் தலைவராக 20 வருடங்கள் தலைமை தாங்கியுள்ளார். ஒரு முறை இலங்கைக்கு வந்த முன்னாள் மறைந்த பலஸ்தீன ஜனாதிபதி யkர் அரபாத் அவர்கள் பின்வருமாறு கூறினார்; நான் இலங்கைக்கு வருவதற்கான காரணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று அமரர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் மற்றது இளம் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களேயாகும் என்றார். அன்றும் இன்றும் தம் கொள்கைகளில் மாறாத மா மனிதர் அவர். இவரின் பெயரில் பலஸ்தீனில் பாதையொன்றே அமைக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டவர்கள் எம்நாட்டு தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மீது வைத்துள்ள மதிப்பை எடுத்துக்காட்டுகின்றது. முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக உழைத்தவர்.

மூன்று தசாப்தங்களாக கொடூர யுத்தத்தின் கோரப்பிடியில் தாக்கப்பட்ட மக்களுக்கு இன்று நிம்மதியாகவும் கெளரவத்துடன் சுதந்திரமாக வாழவழி வகுத்த வீரத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களே. அவரது சேவை இணையற்றது. ஏகாதிபத்திய நாடுகளின் சூழ்ச்சிகளுக்கு எதிராக நாட்டை காப்பற்றும் போராட்டத்தை வெற்றிகரமாக எதிர் நோக்கும் திறமைவாய்ந்த சாதுர்யம் மிக்க என் மதிப்புக்குரிய தேசத்தின் நிகரற்ற தலைவராகிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேகாரோக்கியத்துடன் நீடுb வாழ பிரார்த்திப்பதுடன் அவரது எல்லா நடவடிக்கைகளும் திறம்பட வெற்றி பெற வேண்டும் என மனமார வாழ்த்துகின்றேன்.