.

2011-11-18

  நீங்களே இந்த நாட்டின் வழிகாட்டி

நீங்களே இந்த நாட்டின் வழிகாட்டி

1960 களில் சட்டக் கல்லூரி மாணவ னான ஓர் இளை ஞனை கூட்டரசாங்கத்தின் இளைய பாராளுமன்ற உறுப்பினராக முதலாவது பாராளுமன்றத்தில் நான் சந்தித்தேன். அப்போது அவரது வயது சுமார் 23 வருடங்கள் மட்டில் இருக்கும் என நினைக்கின்றேன்.

1970 கூட்டரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்றக் கூட்டத் தொடரில் கன்னி உரையை நிகழ்த்திய இந்த இளைய பாராளுமன்ற உறுப்பினர் தனது உரையினை நிகழ்த்தி பாராளுமன்ற ஆளும் கட்சி, எதிர்க் கட்சி அரசியல்வாதிகள் அனைவரையும் ஒரே தருணத்தில் ஆச்சரியத்திற்குட்படுத்தினார் என நான் நம்புகின்றேன்.

மஹிந்த ராஜபக்ஷ என்ற இந்த யுகத்தின் தலைவர், அனுபவமிக்க அரசியல்வாதியாக மட்டுமன்றி, முன் மாதிரியான அரசியல் தலைவராகவும் பரிணமிப்பதற்கான முன் அடையாளம் அன்றே தெரிந்துவிட்டது

அனுபவமிக்க அரசியல்வாதியான டீ. ஏ. ராஜபக்ஷ அவர்களின் அரசியல் சாணக்கியத்தையும் மிஞ்சி பொதுமக்கள் நலனுக்காகத் தன்னை அர்ப்பணிக்கக் கூடிய உன்னத மக்கள் தலைவனின் குணங்களை அவர் அன்று வெளிப்படுத்தினார்.

அனைத்துச் சவால்களுக்கும் முன்னே தளராது ஒரே குறிக்கோளுடனும் வீரத்துடனும் இளைஞனான ராஜபக் ஷவின் அரசியல் திறமைகளைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கான சிறந்த தருணமாக 1977 ஆம் ஆண்டில் கூட்டரசாங்கத்தின் தோல்வியைக் குறிப்பிடலாம். மக்கள் மேடையில் நீலநிறச் சட்டைக்காரர்களின் உள்ளத்தினுள் அன்றில் இருந்தே மஹிந்த என்ற மக்கள் சேவகன் இரண்டறக் கலந்துவிட்டார்.

ஜயவர்தன ஆட்சியின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள் அனுபவித்த துன்பங்கள், துன்புறுத்தல்களுக்கு மத்தியில் அவர்களுடன் ஒன்றாக இணைந்து இருந்த அரசியல் கதாபாத்திரம் என்றால் அது மஹிந்த ராஜபக்ஷ அன்றி வேறு யாருமில்லை. தனிப்பட்ட சுகபோகங்களுக்கு அல்லது பிரசித்தம் பெறும் நோக்கில் மக்களுக்குச் சேவை புரியும் அரசியல்வாதிகளைப் போல மக்கள் முன் தோன்றும் பெரும்பாலானோருக்கு மத்தியில் அவர், உண்மையாகவே சமூகத்தில் கீழ்மட்டத்தில் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இன்று போல தொலைத் தொடர்பு ஊடகங்களில் பிரசாரம் செய்யப்படாத அன்றைய காலத்திலும் நாடு பூராவும் வாழ்ந்த சாதாரண மக்களின் உள்ளங்களில் அவர் குடிகொண்டிருந்தார்.

 

ஜயவர்தன யுகத்தில் போன்று மக்கள் பிரதிநிதிகளின் மனித உரிமைகள்கூட மீறப்பட்ட காலம் ஒன்று எதிர்காலத்தில் தோன்றும் என நான் நினைக்கமாட்டேன். அன்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் அளவேயின்றி மீறப்பட்டது.

அதற்காக ஐக்கிய தேசியக் கட்சியானது விரும்பிய, விரும்பிய காரணங்களை முன்வைத்தது. அப்போது பாதிப்புக்குட்பட்ட தனது சகோதர உறுப்பினர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தனியே நின்று போராடிய ஒருவர் எம்மத்தியில் இருந்தார். அவர், மஹிந்த ராஜபக்ஷ மட்டும் தான். அவர் இந்த நிலைமைகளை சர்வதேசத் திற்குக் கொண்டு சென்றார்.

ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு இந்த அநீதிகளைப் பற்றி முறையிட்டார். அந்தத் தகுதி மஹிந்தவிடம் மட்டுமே இருந்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் அநீதிக்கு எதிராக அவர் மேற்கொண்ட முதலாவது நடவடிக்கையினால் இலட்சக்கணக்கான மக்கள் அவருடன் இணைந்து கொண்டனர். உலகத்திற்கு உண்மையினை எடுத்துக்கூறும் நோக்கில் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து ‘பாத யாத்திரை’யை இந்த உன்னத மனிதர் தான் மேற்கொண்டார்.

கொழும்பில் இருந்து கதிர்காமத்திற்கும், கொழும்பில் இருந்து இரத்தினபுரிக்கும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கொண்ட பாதயாத்திரையானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் மட்டுமன்றி, அரசியல் தலைவர்களின் பெயர்ப்பட்டியலிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்வாகும்.

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற தென் மாகாண சபைத் தேர்தல் காலத்தில் எம்பிலிப்பிட்டிய, சூரியவெவ சம்பவத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக இரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தி சிறையிலிடப்பட்ட எனக்காக, எனது உரிமைக்களுக்காகத் தோன்றிய சட்டத்தரணி இந்த உன்னத மக்கள் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என நான் பெருமிதத்துடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

தனக்காகவும், பிறருக்காகவும், தெரிந்தவர் தெரியாதவர் என எவருக்கும் அவருடைய அர்ப்பணிப்பு ஒரே மாதிரியாக இருக்கிறது. தனிப்பட்ட மனிதராகவும், அரசியல்வாதியாகவும் பொறுமை எனும் குணப் பண்பினை புத்திசாதுர்யமாகக் கையாண்டவர்களை சொற்ப அளவிலேயே எம்மால் கண்டுகொள்ள முடியும். அவ்வாறு கண்டுகொள்ள முடியுமான அரசியல்வாதிகளிடையே முதலிடம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு உரித்துடையது என்பதில் எவ்விதத் தர்க்கமும் இல்லை.

எதனையும் பலவந்தமாகக் கைப்பற்றிக் கொள்ளும் முறைக்குப் பதிலாக அஹிம்சை ரீதியாக சகலதையும் வெற்றிகொள்ளும் குணத்தை அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். தனது துறையினைப் போன்றே ஏனைய தொழில் புரிபவர்களிடத்திலும் எப்போதும் நல்ல உள்ளம் கொண்ட அரசியல்வாதியாக இருக்கும் பாக்கியம் ஊடகங்களில் ‘மஹிந்த அண்ணா’ என அன்பாக அழைக்கும் நாமமும் அவருக்கு மிகப் பொருத்தமாக இருந்தது.

மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தினை கம்பளை நகரில் நடாத்துவதற்கு அவர் தீர்மானித்ததற்கான காரணத்தை இன்று வரை நான் அறியவில்லையாயினும், அன்றைய தினம் என்னுடையதும், அன்புள்ள கம்பளை மக்களினதும் ஆசீர்வாதத்துடன் ஆரம்பித்த அந்தத் தலைமைத்துவமானது, இந்த நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக நீடூழி காலம் நிலவும் என்பதனை நிச்சயமாகக் கூறமுடியும். சொல்ல வேண்டியதை அந்த நேரத்திலேயே நேரடியாகவே கூறும்.

தளராத மனம் கொண்ட அரசியல்வாதிகள் பற்றிய முன்மாதிரிகள் உலகத்தில் சொற்ப அளவில் காணப்படும் யுகத்தில் மஹிந்த ராஜபக்ஷ என்றால், அந்த சகல குணப் பண்புகளினதும் எடுத்துக்காட்டு என உலகத்திற்கு நிரூபித்துக் 8!pநிகி தருணம் 2009, மே 18 ஆம் திகதி எனக் குறிப்பிடலாம்.

அது, உலகத்தில் உள்ள பலமிக்க நாடுகள் கூட துப்பாக்கியினால் தோற்கடிக்க முடியாது எனக் கூறிய வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவனது சகாக்கள் அனைவரையும் நிரந்தரமாகவே துப்பாக்கியினால் தோற்கடித்து தமிழ் மக்கள் உட்பட அனைத்து இலங்கை யருக்கும் சுதந்திரத்தினை,

அதன் அர்த்தத்திற்கமையவே பெற்றுக்கொடுப்பதற்கு அவரினால் முடியுமாக இருந்தமையைக் குறிப்பிடலாம். அதனை நிறைவேற்றி முடிக்கக்கூடிய எந்தவொரு மக்கள் தலைவனும் அன்றில் இருந்து இன்றுவரை இலங்கையில் பிறக்கவில்லை எனவும், எதிர்காலத்திலும் பிறக்கமாட்டார் எனவும் நான் உறுதியாகக் கூறுகின்றேன்.

பிரதம அமைச்சர் ஒருவராக ஜனாதிபதி ஒருவராக அல்லாவிட்டால் நாட்டின் தலைவராக வேண்டும் என்ற கனவு எந்தவொரு அரசியல்வாதியிடமும் தானாகவே தோன்றமுடியும். அதனைப் பிழையென்றோ, குறையென்றோ கூறமுடியாது. ஆனாலும், நாட்டின் மீது அன்பு செலுத்தும், நாட்டு மக்களை மதிக்கும், நாட்டு மக்களின் பாதுகாப்புக்குப் பூரணமாக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜனாதிபதி ஒருவராகுவது என்பது ஜனாதிபதியாக வேண்டும் எனக் கனவு காண்பதைப் போன்ற இலகுவான விடயமன்று.

இந்த வகையில் நோக்கும்போதுதான் மஹிந்த ராஜபக்ஷ என்ற ஜனாதிபதி இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் விசேடமானவராகக் கருதப்படுகின்றார். அவர் இந்த நாட்டின் மீது அன்பு கொண்ட தலைவராவார். மக்களை மதிக்கும் ஜனாதிபதியாவார். நாட்டு மக்களைப் பாதுகாக்க முழு மனதுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் தளபதியாவார்.

அவ்வாறான தலைவர் ஒருவர் இருக்கும் நாட்டின் நாட்டு மக்கள் உண்மையிலேயே அதிஷ்டசாலிகளாவர். அந்த அதிஷ்டமானது நாட்டின் ஆன்மீக மற்றும் லெளகீக அபிவிருத்திக்கு ஒளியூட்டுவதாக இருப்பதை மறுக்க முடியாது.

மன்னார் கடலின் கீழ் எண்ணெய் மற்றும் எரிவாயுப் படலம் இருப்பதாக முதல் சமிக்ஞை கிடைத்துள்ளது. அது உறுதிப்படுத்தப்பட்ட சமிக்ஞையாகும். முன்னே உதயமாவது, அந்தத் தங்க அறுவடையை மேற்கொள்ளும் காலமாகும்.

சுதந்திரத்திற்குப் பின்னர், ஜனாதிபதிகள் பலரின் கீழ் எண்ணெய் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் பெறுபேற்றினைப் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் ஒருவருக்கும் கிடைக்கவில்லை. மஹிந்தவின் யுகமானது ஓர் அதிர்ஷ்டமான யுகம் என நான் கூறுவது இதனாலாகும்.

மாபெரும் படைத் தளபதி ஒருவனிடம் இருக்க வேண்டிய வீரம், தீரம், தேகபலம் என்பனவும் ஒரு தந்தையிடம் இருக்க வேண்டிய பாசக் குணமும், புண்ணியவான் ஒருவரிடம் இருக்க வேண்டிய அதிர்ஷ்ட மகிமையும் குறைவின்றி அவரிடம் உண்டு. இலங்கையை ஆசியாவின் புதுமையாக மாற்றுவதாக அவர் முதலில் கூறியவேளை, அனேகமானோர் அந்தக் கூற்றை ஏளனமாக நோக்கினர்.

இன்னும் மிகக் குறைந்த தொகையினர் இந்தத் தையரிமிக்க குறிகோளுக்குப் பிழையான அர்த்தத்தைக் கொடுத்துக் கொண்டிருகின்றனர். அப்படியானவர்களைப் பற்றி நாம் அனுதாபத்துடனும் தயவுடனும் நோக்குகின்றோமேயன்றி குரோதத்துடன் பார்க்க மாட்டோம். ஏனெனில் மஹிந்த ராஜபக்ஷ என்பவர் செய்வதைச் சொல்லும் - சொல்வதைச் செய்யும் தலைவர் என அனைவரையும் விட நான் நன்கறிந்தவன் என்பதனாலாகும்.

யுத்தம் செய்து பிரபாகரனைத் தோல்வியடையச் செய்ய முடியாது எனக் கூறியபோது, யுத்தத்தினாலேயே பிரபாகரனைத் தோற்கடித்தது மட்டுமல்லாது, புலிகளின் வலையமைப்பையே பூண்டோடு அழித்தும் விட்டார். பிரபாகரனைத் தோற்கடிப்பேன் என மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியபோது, அனைவரும் அவரை ஏளனமாகப் பார்த்தனர்.

அவரின் கூற்றை ஏளனமாக நோக்கியதுடன் மட்டுமல்லாது, தனது நாட்டிலேயே அவரைத் தனிமைப்படுத்திய நிலைமையும் உருவானது. ஆனாலும் அந்தத் தனிமையைச் சவாலாக ஏற்று தனது அபிமானத்தை மட்டுமன்றி, தனது நாட்டின் அபிமானத்தையும் அவர் காப்பாற்றினார். மாகம்புர துறைமுகமும் அவ்வாறான ஒரு சங்கதியாகும். நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உருவாக்கத்தின் போதும் இவ்வாறுதான் கூறப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷ என்பவர் இந்த நாட்டிற்கு அதிசிறந்த தலைவர் எனக் கூறுவது இந்தக் காரணங்களினால் மட்டும் இல்லை. அவர் மனச்சாட்சிப்படி நடந்துகொள்ளும் தலைவராவார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தினாலேயே ஜனாதிபதியொருவருக்கு மிக ஆடம்பரமான வாழ்க்கையொன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் போது அந்த வாழ்க்கையை ஒருபுறமாக வைத்துவிட்டு அவர் எந்நேரமும் பொதுமக்களின் வீட்டு முற்றத்திலேயே வாழ்கின்றார். ஏழையொருவரின் வீட்டில், விறகடுப்பில் சமைக்கப்படும் பச்சரிச் சோறும் தேங்காய்ச் சம்பலும், கருவாட்டுக் குழம்பும் அவருக்கு அரசனின் உணவையும் தோற்கடிப்பது இதனாலாகும்.

நாமலுக்கும், ரோஹித்தவுக்கும், யோஷித்த வுக்கும் போலவே சிரிசேனவினதும், தயாவதியினதும், மொஹமட்டினதும், சிவசங்கரனினதும் பிள்ளைகளுக்கும் அவர் அளவில்லா அன்பு காட்டுகின்றார். அந்தப் பிள்ளைகளும் இவரை அன்புடன் அரவணைப்பது இதனாலாகும். முத்தம் கொடுப்பது கெமராவில் தெரிவதற்காகவன்றி, உள்ளத்தினாலேயே என கருணையுள்ளம் கொண்டோர் மட்டும் உணர்வர்.

அதனால், மஹிந்த ராஜபக்ஷ எனும் இந்த யுகத்தின் தலைவனுக்கு அன்புடன் கூடிய ஆசீர்வாதத்தினை வழங்குவது நாட்டின் பிரதம அமைச்சர் அல்லது இரண்டாவது குடிமகன் என்ற பெருமிதத்துடன் அல்ல எனவும் இப்படியான மக்கள் தலைவனின் நிழலில் வாழும் இந்நாட்டின் சாதாரண குடிமகன் என்ற பாக்கியத்தைப் பெற்ற உணர்வுபூர்வமான ஒரு மனிதன் என்ற ரீதியில் எனவும் பணிவுடன் குறிப்பிடுகின்றேன்.

மஹிந்த ராஜபக்ஷ எனும் தேசத்தின் வழிகாட்டியே!

உங்களது தலைமைத்துவம் இலங்கைத் தாய் நாட்டிற்கு நீண்டகாலம் கிடைக்கட்டும்!

நீடூழி வாழ்க! என வாழ்த்துகின்றேன்