.

2011-11-18

  ஜனாதிபதியின் சிறந்த தலைமைத்துவத்தின்கீழ் நாட்டின் பால் உற்பத்தியில் தன்னிறைவு

ஜனாதிபதியின் சிறந்த தலைமைத்துவத்தின்கீழ் நாட்டின் பால் உற்பத்தியில் தன்னிறைவு

ghல் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வகையில் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

அந்த வகையில் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற நிறுவனங்களில் மில்கோ நிறுவனம் காலத்தின் தேவை அறிந்து பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

கடந்த வாரம் மில்கோ நிறுவனம் தனது அயராத முயற்சியின் மூலம் ஹைலன்ட் தூய பசும் பால் ஊட்டச் சத்து மிக்க திரவ பாலை அறிமுகப்படுத்தியது. கெளரவ ஜனாதிபதி முன்னிலையில் அலரி மாளிகையில் இப்பால் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிட தக்கதாகும். இப்பாலானது அனைத்து தரப்பினருக்கும் பொருத்தமானதாக உள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

மில்கோ நிறுவனமானது எவ்வாறு தனது முயற்சியை முன்னெடுத்து வருகின்றது என்பதையும் நிறுவனம் எவ்வாறு இயங்குகின்றது என்பதனை பற்றியும் அதன் சேவை எவ்வாறு மக்களை சென்றடைகின்றது என்பதை பற்றியும் எமது நாட்டின் உற்பத்தியை பெருக்கி இலாப நோக்கில்லாமல் மக்களுக்கு குறைந்த விலையில் உச்ச பயனை அடைவதற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளார்.

அத்தோடு பல இன்னல்களுக்கு மத்தியிலும் பல சவால்களை எதிர்கொண்டும் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் பாலுற்பத்தியை அதிகரிக்க செய்யும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றது

முழுமையான மனிதனின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில் ஊட்டச்சத்து மிக்க பால் காத்திரமான இடத்தை வகிக்கின்றது. இந்த வகையில் தாய்ப்பால் ஏற்றக் கொள்ளப்பட்ட ஓர் ஊட்டச்சத்தாகும். எனவே தாய்ப்பாலுக்கு நிகரான பசும் பாலின் தரத்தை தக்கவைத்துக் கொள்ளுதல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இலட்சியமாகும். இலட்சியமானது அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட தூய திரவ பாலின் ஊடாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இத்தூய திரவப்பால் திட்டமானது எவ்வித கலவையுமின்றி தூய பசும் பாலின் தரத்தினை கொண்டுள்ளதோடு அனைத்து தரப்பினரினாலும் மிக எளிதாக கொள்வனவு செய்யக் கூடியதாக உள்ளது. இதனடிப்படையில் மில்கோ நிறுவனத்தின் வளர்ச்சி பாதையை பார்ப்போமாயின் பல்வகைதன்மை நோக்கி மில்கோ மீளாய்வு ஆண்டின்போது கம்பனியின் புரழ்வானது முன்னைய ஆண்டை விட 12 சதவீத வளர்ச்சியைக் வெளிக்காட்டுகின்றது.

2009/2010 ஆண்டின் ரூபா. 4.2 பில்லியன் புரழ்வுடன் ஒப்பீடு செய்யும்போது மீளாய்வு ஆண்டின் போதான மொத்தப் புரழ்வு ரூபா 4.7 பில்லியன்களாகும்.

மீளாய்வு ஆண்டில் கம்பனி ரூபா. 125 மில்லியன் இலாபத்தை எட்டியிருந்தது.

பாரிய வெள்ளப் பெருக்கு மற்றும் சுமார் 75,000 கால்நடைகள் இறந்தமையின் காரணமாக கடந்த ஆண்டின் இறுதிப் பகுதி மற்றும் இந்த வருடத்தின் ஆரம்ப பகுதியின்போதும் பால் சேகரிப்பு நடவடிக்கைகள் மந்தமடைந்தன.

எனினும், மில்கோ நிறுவன குழுவின் சிறந்த கள முயற்சியினால் இந் நிலைமை சுமுக நிலைமைக்கு திரும்பியதுடன் தற்பொழுது நாளொன்றுக்கான பால் சேகரிப்பு அளவு அண்ணளவாக 185,000 லீட்டர் வரை அதிகரித்துள்ளது.

இலங்கையின் நாலா பக்கங்களிலிருந்தும் 2300 விவசாயிகளினால் முகாமை செய்யப்படுகின்ற சமூக மையங்களினால் மில்கோ நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்யப்படுகின்றது. பால் குளிரூட்டல் தொடர்பாக நாடு பூராவும் 77 பால் குளிரூட்டல் நிலையங்கள் பரந்து காணப்படுவதுடன் அங்கிருந்து சேகரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பால் 4 தொழிற் சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

உள்ளக கிராமங்கள் மற்றும் பெருந்தோட்டத் துறைகள் பால் சேகரிப்பு செயற்பாடுகள் கவனம் செலுத்துகின்றமை மிக அத்தியாவசிய விடயமாகக் காணப்படுகின்றது.

இப் பிரதேசங்களில் 300 லீட்டர், 500 லீட்டர் மற்றும் 1000 லீட்டர் கொள்ளவுடைய 25 சிறிய குளிரூட்டல் நிலையங்களை நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது ஆகக் குறைந்தது 12.5% திண்ம சதவீதத்தைக் கொண்ட பசும் பால் லீட்டர் ஒன்றின் விலை 50/= வரை விவசாயிகளுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறான திண்ம அளவைக் கொண்ட பால் தரமான பாலாகவும் கருதப்படுகின்றது.

விவசாயிகளுக்கு அவர்களின் பசும் பால் தொடர்பாக செலுத்தப்படும் விலையானது உலக சந்தை விலை அல்லது அதனை விட சிறந்த விலை தற்பொழுது வழங்கப்படுகின்றது.

இந்த முயற்சிகளுக்கு மேலதிகமாக, காலை நேரங்களில் சிறிய குளிரூட்டல் நிலையங்களிலிருந்து பாலை சேகரிப்பதற்கும் பின்னேரங்களில் மில்கோ நிறுவனத்தின் உற்பத்திகளை விற்பனை செய்வதற்குமாக சுயதொழில் வாய்ப்பு ஒன்று என்ற வகையில் 50 துவிச் சக்கர வண்டிகளை ஈடுபடுத்துவதற்கு கம்பனி நடவடிக்கை எடுக்க உள்ளது.

இந்த முயற்சியின் ஊடாக சுமார் நாளொன்றுக்கு ரூபா 1000.00 வருமானத்தை ஈட்டிக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. கம்பனியின் கூட்டுப் பொறுப்பு மற்றும் ஒன்றாகும் கம்பனிக்கான விற்பனை நலன் திட்டமாகவும் இந்தச் செயற்திட்டத்தை நாடு பூராகவும் விஸ்தரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறந்த பால் உற்பத்திகளை உற்பத்தி செய்யும் நோக்கில் உயிர்ச் சத்து நிறைந்ததாகவும் பக்டிரியாக்களின் தொழிற்பாட்டை பேணிக் கொள்ளும் வகையில் பாலின் தரத்தை பேணுதல் பிரதான குறிக்கோளாக உள்ளது.

இதன் ஒரு செயற்பாடாக கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து நாளாந்தம், குளிரூட்டல் நிலையங்களிலிருந்து தொழிற்சாலைகளுக்காக பால் சேகரிக்கப்பட்டு வருகின்றது. மேலும், சிறந்த பசும் பாலை பெற்றுக் கொள்வதற்காகவும் அடிப்படை ஊட்டச் சத்து செயற்பாடுகள் தொடர்பாக விவசாயிகளை அறிவுறுத்துவதற்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு (நாராஹேன்பிட்ட), திகன, அம்பேவள மற்றும் பொலன்னறுவை ஆகிய நான்கு இடங்களில் மில்கோ நிறுவனம் உற்பத்தி வசதிகளை கொண்டுள்ளது.

இலங்கை விவசாயிகளிடமிருந்து சேகரித்த பசும் பாலிலிருந்தே மொத்த பால் உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஹைலன்ட் உற்பத்திக் குறியின் கீழ் பத்து வகைகள் மற்றும் 52 இருப்புச் சேகரித்தல் பிரிவுகள் வாடிக்கையாளர்களுக்காக நாடு பூராவும் காணப்படுகின்றன. இவ் உற்பத்தி வகைகளாவன: கிருமி நீக்கம் செய்யப்பட்ட மற்றும் மருந்து சேர்க்கப்பட்ட திரவப் பால், யோகட், ஐஸ்கிரீம், பட்டர், நெய், சீஸ், தயிர்,

கட்டிப் பால் மற்றும் முழு ஆடைப் பால் என்பனவாகும். இந்த உற்பத்திகளுக்கு மேலதிகமாக ‘ஹைலன்ட் நிபிரிங்’ தூய்மையாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சொக்கலேட் என்பவற்றையும் அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

நாடு பூராவம் மில்கோ நிறுவனத்தின் உற்பத்திகளை விநியோகம் செய்வதற்கு 115 விநியோகத்தர்கள் உள்ளனர். சந்தைப்படுத்தல் பரிவு விற்பனை பிரதிநிதிகள் 26 பேர், பிராந்திய முகாமையாளர்கள் ஏழு பேர் மற்றும் நிருவாக அலுவலர்கள் ஆறு பேர் போன்றோர்கள் இந்த மேற்பார்வை மேற்கொள்கின்றார்கள்.

மேலும் 50 பதவியினர்களைக் கொண்ட 11 நிலையங்களை கம்பனி கொண்டுள்ளது. இது தொடர்பாக நாடு 09 வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் உற்பத்திகளை புதுப்பித்தல் மற்றும் புதிய உற்பத்திகளை அடையாளம் காணல் போன்றன தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘கொழுப்பு அற்ற மற்றும் சீனி அற்ற’ யோகட் வகையொன்று அண்மையில் சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளதுடன், அது ஒழுங்கு முறையாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து வருகின்றது.

மேலும், ஸ்டோபரி சுவையுடைய யோகட் வகையொன்றை அறிமுகம் செய்வதற்கு வாடிக்கையாளர்களின் சுவை உணர்வை பரீட்சிக்கும் தொழில்நுட்ப பரிசோதனைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. உற்பத்தி நவினமயப்படுத்தல் என்ற வகையில் பார்க்கின்றபோது, சர்வதேச தரத்தைக் கொண்ட, ‘ஹைலன்ட் மில்க் மைட்’ என்ற விற்பனை பெயரின் கீழ் கட்டிப்பால் வகையொன்று அறிமுகம் செய்து தரப்பட்டுள்ளது.

09 மாதங்களைக் கொண்ட குறுகிய பாவனைக் காலத்தைக் கொண்ட இந்த உற்பத்தியானது வெளிநாட்டுச் சந்தையை நோக்காகக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. குறைந்த கலரிப்பெறுமதியைக் கொண்ட ஐஸ் கிரீமை உற்பத்தி செய்வதற்கு தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தீவிர வெப்பமேற்ற பட்ட பால் (ஸிசிஹி) மாத காலம் இராக்கைகளில் வைத்துக் கொள்ளத்தக்க நீண்ட பாவனைக் காலத்தைக் கொண்ட யுஎச்ரி பால் வகையினை எதிர்காலத்தில் அறிமுகம் செய்வதற்கு இயலுமை கிடைத்தமை உண்மையில் மிக முக்கிய மாற்றமாகும்.

தற்பொழுது உள்ள கிரிமி நீக்கம் செய்யப்பட்ட திரவப் பாலை மூன்று நாட்கள் மாத்திரம் வைத்துக் கொள்ளக் கூடிய குறுகிய பாவனைக் காலத்தை கவனத்திற் கொண்டுள்ளமையினால் அவற்றை வினியோகம் செய்தல் கடின விடயமாகக் காணப்படுகின்றது. ஆரம்ப ஆரம்ப அறிமுகத்தின்போது மூன்று வகையான உற்பத்திகளை அறிமுகம் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மில்கோ நிறுவன பதவியினர்கள்

தொழில்சார் பிரவேச அபிவிருத்தி’ யை ஏற்படுத்தல் எமது பதவியணியினர் தொடர்பாக மிகவும் முக்கியமான விடயமாக உள்ளது. பலதரப்பட்ட தொழிற் துறைகளுக்கு உரிய பதவியணியினர் தொடர்பாக பயிற்சிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வருட முடிவில் பதவியணியினர் கணிப்பீடு செய்தல் தொடர்பாக முன்னோடி செயலாற்றுகை குறிகாட்டிகளைக் கொண்ட செயலாற்றுகை அபிவிருத்தி வழிகாட்டலொன்றை தயார் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அனுபவங்களைக் கொண்ட பதவியணியினர் மில்கோ நிறுவனத்தின் சொத்தாகும். கம்பனி சகல சேவைப் பிரிவுகளுக்கும் உரிய 1430 ஊழியர்களைக் கொண்டுள்ளது.

வெற்றிப் பாதைக்கு நுழைவதற்கான ஒரு சில சிக்கல்கள் காணப் பட்டபோதும் அவ்விடயங்களை மில்கோ நிறுவனம் சீர் செய்ய வேண்டியுள்ளது. கம்பனியின் முன்னேற்றத்தை தடைப்படுத்துகின்ற பிரதான காரணிகளாக பசும் பால் உற்பத்தி தொடர்பாக முன்வராமை மற்றும் குறைமட்ட பசும் பால் உற்பத்தி என்பன காணப்படுவதுடன் இவை நிறுவனத்தின் வளர்ச்சியை தடைப்படுத்துகின்றன.

நாட்டில் பால் உற்பத்திகளுடன் தொடர்புடைய துறையில் 50% சதவீதமான சந்தைப் பங்கைக் கைப்பற்றிக் கொள்வது எமது பிரதான குறிக்கோளாகும். வருடம் ஒன்றிற்கு இலங்கையானது அண்ணளவாக அமெரிக்க டொலர் 390 மில்லியன் பெறுமதியான பால் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்கின்றது. இறக்குமதி செய்வதை நிறுத்தி வெளிநாட்டுச் செல்வாணியை பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கை பசும் பால் லீட்டர் 600 மில்லியன்களை உற்பத்தி செய்ய வேண்டி உள்ளது.

தற்பொழுது அந்த அளவானது வருட ஒன்றிற்கு மில்லி லீட்டர் 125 வரை காணப்படுகின்றது தொழில்நுட்ப ரீதியாக பார்க்கின்றபோது இந்தப் பணியினை அடைந்து கொள்ளக் கூடிய விடயமாகக் காணப்படுகின்றது. கால்நடை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சானது பசும்பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் பசும் பால் தேவையில் தன்னிறைவு நிலையினை அடைதல் எமது குறிக்கோளாகும். நாட்டின் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவு ஏற்படுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த தலைமைத்துவமும், வழிகாட்டலுமே முக்கியமான அம்சமாக கொள்ளப்படுகின்றது.