.

2011-11-18

  சொல்வதைச் செய்யும் சிறந்த அரச தலைவன்

சொல்வதைச் செய்யும் சிறந்த அரச தலைவன்

எமது இனத்திற்கும் தேசத்திற்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வரலாறு உண்டு. அதனோடு சார்பு ரீதியாக நோக்குங்கால் இக்காலப் பகுதிக்குள் வசித்த மனிதர்களின் ஆயுட் காலம் மிகவும் குறுகியதாகும். அது நூறு வருடங்கள், எண்பது அல்லது அதைவிடக் குறைவானதாகும். மேற்படி குறுகிய காலப் பகுதிக்குள் மனிதர்களால் ஈடேற்றப்பட வேண்டிய பிரத்தியேக மற்றும் சமூகப் பணி அளப்பரியதாகும். அவர்களின் செயற்பாடுகளின் தன்மைக்கிணங்க இவர்கள் மத்தியில் ஒரு சிலர் வரலாற்றின் மறக்கமுடியாத பாத்திரங்களாக மாறுவர். ஒரு சிலர் மாமனிதர்களாக மாறுவர். மேலே குறிப்பிட்ட குறுகிய காலப் பகுதிக்குள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவுகின்ற பெறுமதிமிக்க செயல்களைப் புரிந்தவர்கள் வரலாற்றின் யுகபுருஷர்களாக மாறுகின்றனர். இந்த அர்த்தத்தில் நோக்கும் போது எமது நிகழ்கால அரச தலைவர் இற்றைவரை 66 வருட ஆயுட் காலத்தில் ஆற்றிய அளப்பரிய செயல்கள் நிச்சயமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிலவும், அதனால் அவர் எமது நாட்டின் யுகபுருஷராகிவிட்டார். அவரது செயல்களில் சிலவற்றை மிகச் சுருக்கமாக ஆராய்வது காலத்துடன் சாலவும் பொருந்தும். அத்துடன் நியாயமானதுமே.

பண்டைய மன்னர் காலத்திற்குப் பின்னர் இலங்கை எதிர்நோக்கிய தேசத்தின் பிரதான பிரச்சினையை முன்றையாக முகாமைத்துவம் செய்வதில் அவர் வெற்றி கண்டார். யுத்தத்தை சவாலாக ஏற்றுக்கொண்ட அவர் அதை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு தான் பெற்ற நீண்டகால அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொண்டார். மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களைத் தயக்கமின்றி உறுதியான தீர்மானங்களாக மேற்கொண்டதுடன், அவை பண்டைய மன்னர் காலத்தில் குறிப்பிட்ட இந்திரகீலம் போல் நிலை தளராத தீர்மானங்களாக மாறி உள்ளன. தான் தேசத்தின் பெருமைமிக்க தகப்பன் என்பதையும் அதற்கான தகைமைகளைத் தான் பூர்த்தி செய்து முடித்துவிட்டதாகவும் தேசத்தை அனர்த்தத்தில் இருந்து காப்பாற்றிய பின்னரே கூறினார். தாய் நாட்டை முத்தமிட்ட இறந்தகால மன்னர்கள் பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருந்த போதிலும் உண்மையாகவே அவர் தாயகத்தை முத்தமிட்டதைக் கண்ணுற்ற வேளையிலேயே எமது கண்கள் குளிர்ச்சியடைந்தன.

அவர் எமது பாரம்பரியச் சிந்தனையை உண்மையிலேயே ஆரத்தழுவிய அதற்கிணங்க செயலாற்றுகின்ற தலைவராவார். யுத்தத்தின் கொடூரத்தை உலகிற்கு தயக்கமின்றி எடுத்தியம்பிய அவர் அதனைத் தீர்க்க தனக்கு முன்னர் இருந்த அரச தலைவர்கள் முயற்சி செய்தார்கள் எனவும் அவை தோல்வியுற்றனவெனவும் மிகவும் தன்னடகத்துடன் கூறினார். எனவே யுத்தத்தை நெறிப்படுத்துவதற்காக தேசத்தை அந்த நோக்கத்தின் பால் அணிதிரளச் செய்விக்க அவர் செயலாற்றினார். அதன் பிரதான வழிநடத்துநராக யுத்தம் தொடர்பில் ஏமாற்றத்தை அடைந்திருந்த தேசத்திற்கு உயிர்ப்பூட்டி தேசத்திற்காக யுத்தத்தின் உச்சமட்ட அழுத்தத்தை தன்வசம் இழுத்துக் கொணடதோடு, அச்சமும் பீதியும் கொண்டிருந்த மக்களுக்கு வெற்றிக்கான மனோபாவத்தைக் கட்டியெழுப்ப அபிமானத்துடன் தைரியமூட்டினார்.

ஒரு சிலர் யுத்தத்தை ஒத்திவைத்ததோடு மேலும் சிலர் யுத்த மோசடிகளில் ஈடுபட்டனர். ஒரு சிலர் வீம்பு வார்த்தைகளை மாத்திரம் பகன்றனர். மேலும் சிலர் யுத்தத்தின் போது ஒன்றுக்கொன்று முரணான நடைமுறைகளைப் பின்பற்றினர். ஒரு சிலர் யுத்தத்தில் வெற்றிகொள்ள இயலாதெனவும் அதனால் யுத்தம் கைவிடப்படல் வேண்டுமெனவும் சர்வதேசத்திடம் கூட எடுத்துரைத்தனர். யுத்தச் செயற்பாடுகளை பரிகாசத்திற்கும் இழிவுக்கும் ஆளாக்கினர். இந்த அனைத்து விதமாக எதிர்மாறான, அவநம்பிக்கை கொண்ட எண்ணப் போக்குகளை தோல்வியடையச் செய்வித்து அவர் சொல்வதைச் செய்பவர் என்பதை நிரூபித்து தனது அபிமானத்தை வெளிக்காட்டினார். அதனாலேயே அவர் மீது இந்நாட்டின் தேசப்பற்றுடைய பொதுமக்களின் ஆசியும் விருப்புணர்வும் குறைவின்றிப் பெருகியது.

அவர் ஒரு பரிசுத்தமான பெளத்தர் ஆவார். எனினும் அரச தலைவர் எனும் வகையில் அவர் அனைத்து சமயங்களையும், பின்பற்றி அவற்றுக்காக தோற்றுபவராவார். பெளத்த ஆலயங்கள், பள்ளிவாசல், தேவாலயம், கோவில் என்பவற்றை ஒரே மாதிரியான புனிதத் தன்மை வாய்ந்த ஆசிரமங்களாக கவனிக்க அவர் தயார் என்பதை செயலிலேயே நிரூபித்துள்ளமையால் அனைத்து மதங்களினதும் ஆசீர்வாதம் அவரை வந்தடைவது புலனாகின்றது. சகல கடவுளர்களினதும் கருணையும் கடாட்சமும் போன்றே அனைத்து மதங்களிலும் காணப்படுகின்ற பெளதீகத்தை விஞ்சிய பிரபஞ்ச சக்தி அவரை நோக்கி வருவதால் யுத்தத்தின் போதும் யுத்தத்திற்குப் பிற்பட்ட கால கட்டத்திலும் தேசத்திற்கு எதிரான அனைத்துச் சக்திகளும் கருத்தியல்களும் ஆதவன் ஒளிபட்ட பனிபோல் மறைந்து போகின்றமை புலப்படுகின்றது. பெருமிதம் மிக்க இலங்கையர் எனும் அடையாளமும் பொங்கி வழியும் தந்தைப் பாசமும் காரணமாக அவர் அண்மைக்கால வரலாற்றில் தோன்றிய உள்ளங்கவர் தலைவராக மாறியுள்ளார்.

எமது புராணக் கதைகளில் இருந்து இற்றைவரை இலங்கை அரச தலைவர்களின் பெருமைமிக்க தலைமுறை பற்றிப் பேசுவது ஒரு கலாசார அம்சமாக மாறியுள்ளது. அவதாரக் கதைகளில் இறந்த காலக் கதையும் நிகழ்காலக் கதையும் என கூறப்படுவது இதுவென்றோ? மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பரம்பரையும் 600 ஆண்டுகளுக்கு மேலாக நீண்டு செல்கின்றமை கண்டு பிடித்த சான்றுகளின்படி புலனாகின்றது. நாம் அறிந்த வகையில் 75 ஆண்டுகள் நீண்டு செல்கின்ற அண்மைக்கால அரசியல் பரம்பரை அவருக்கு உண்டு. அப்பரம்பரையானது அங்கீகரிக்கப்பட்ட அனைத்து விதமான தேசிய, சமூக நன்னெறிகள் நிரம்பிய பெருமிதத்துடன் நினைவு கூரக்கூடிய தலைமுறையாகும். இதன் காரணமாக அவர் யுத்தத்தில் தலையிட்டே ஆக வேண்டிய நிலையேற்பட்டது. அவர் நாளுக்கு நாள் பிரபல்யம் அடைந்து வருகின்றார். முதலாவது வெற்றியின் பின்னர் பெரும்பாலான அரச தலைவர்கள் சனநாயக உலகில் சீரழிவினை நோக்கிப் பயணஞ் செய்வதை நாம் அனுபவ வாயிலாக கண்டுள்ளோம். எனினும் எமது சனாதிபதியவர்கள் நாளுக்கு நாள் பிரபல்யம் அடைந்து ரிஸிகிறார். அவருக்கு எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சக்திகள் காலத்திற்குக் காலம் முன்வைக்கும் பலவிதமான குற்றச்சாட்டுகளும் அவமதிப்புக்களும் வேறு திசைநோக்கி வீசியெறியப்படுகின்றன. பகைவர்கள் வெகு விரைவில் நண்பர்களாக மாறிவிடுகிறார்கள். அதற்கான காரணம் யாது? தெளிவாகக் கூறுவதாயின் தேசத்தின் தேவைப்பாடுகளுக்கு அமைவாக அவரால் மேற்கொள்ளப்பட்ட பாராட்டத்தக்க செயற்பாடுகளாகும். தேசிய மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேசத்திற்கு உரை நிகழ்த்துகின்ற ஒரே தலைவர் இவரே. அது எமது நாட்டுக்குள்ளே மாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் தாபனத்தின் முன்னிலையிலும் தான் ஒட்டுமொத்த இலங்கைத் தேசத்தினதும் தலைவர் என்பதை வெளிப்படுத்தி நிரூபித்துள்ளார். அவர் யுத்தத்தையும் அபிவிருத்தியையும் சமநிலையில் மேற்கொண்டதோடு மாத்திரமன்றி அப்பணிகள் இரண்டையும் ஒரே சமயத்தில் ஈடேற்ற இயலுமென்பதை உலகத்தவருக்கு எடுத்துக்காட்டுவதில் வெற்றி பெற்றார். அதற்குச் சற்று அப்பால் சென்று யுத்தத்துடன் பொருளாதார வீழ்ச்சி நிலைகள் வந்தாலும் அதனையும் முறையாக முகாமை செய்ய இயலுமென்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அவரது சிந்தனை சுதேச மண் வாசனையைப் பிரதிபலிக்கின்றது எம்மால் தெரிவு செய்யப்பட வேண்டிய அபிவிருத்திப் பாதை பற்றிய ஆழமான உரையாடல் தோன்ற வேண்டுமென அவர் கூறுகிறார். வளமற்ற மேலைத்தேய மாதிரிக்கிணங்க தயாரிக்கப்பட்ட அபிவிருத்திப் பாதைகள் தகர்ந்து வீழ்ந்துவிட்டன. அவை எம்மைப் போன்ற ஆசிய நாடுகளுக்குப் பொருத்தமற்றவை. ஆசிய விழுமியங்களுக்கு அமைவாக உள்நாட்டு அடையாளத்திற்கு இயைபுடைய அபிவிருத்திப் பாதையினைத் தெரிவு செய்ய வேண்டிய காலம் வந்துள்ளது. தமது தேவைக்கேற்ப நுகர்வதும் எஞ்சியதைப் பகிர்ந்தளிப்பதும் தன்மை பற்றியும் பிறரைப் பற்றியும் சிந்தித்துச் செயலாற்றுவதுமே ஆசிய மரபாகும். பகட்டான தன்மையற்ற சுற்றாடல் நட்புமிக்க மனித நேயமுள்ள அபிவிருத்தி மாதிரியே எமது நாட்டுக்கு நன்மை பயக்கும். இந்த அடிப்படையில் எமது நாட்டுக்கு ஒத்துவரத் தக்க பொருளாதார அபிவிருத்தி நோக்கான ‘மஹிந்த சிந்தனையை’ சமர்ப்பிக்க அவர் நடவடிக்கை மேற்கொண்டார். அதனை வாசிக்கும் போதும் ஆழமாக ஆராயும் போதும் இது எமக்கே உரித்தான அன்புக்குரிய ஆவணமென்பது புலனாகின்றது. அது அந்த அளவுக்கு சிநேகபூர்வமானது இந்த ஆவணம் இற்றை வரை இலங்கையில் தோன்றிய அனைத்துவிதமான அபிவிருத்தித் திட்டங்களையும் விஞ்சி செல்வதாகும். இதனை மேலும் முன்னெடுத்துச் சென்று அத்திட்டத்தினால் ஈடேற்றப்பட்ட பணிகள் பற்றிய மதிப்பீடாக ‘நான் மஹிந்த சிந்தயை நிறைவேற்றினேன்’ எனும் மற்றுமோர் ஆவணத்தை வெளியிடும் அளவுக்கு அவர் துணிச்சல் மிக்கவராக விளங்கினார். இற்றைவரை இலங்கையின் அபிவிருத்தித் திட்டமொன்றுக்காக அரச தலைவரொருவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரேயொரு மீளாய்வு ஆவணமும் இதுவே.

அவர் புதிய எண்ணக்கருக்களின் சிருஷ்டிகர்த்தா ஆவார். மனிதாபிமான நடவடிக்கை, வடக்கின் வசந்தம், கிழக்கின் நவோதயம், கமநெகும, மகநெகும, திவிநெகும, கெமிதிரிய இவற்றுள் சிலவாகும். இந்த அனைத்து எண்ணக்கருக்களுக்காகவும் புதிய அபிவிருத்தி வழிமுறைகளை அறிமுகஞ் செய்வதில் அவர் வெற்றி கொண்டார். வெளிநாட்டவர்களுக்குப் பின்னர் இலங்கையில் துறைமுகங்களைக் கட்டியெழுப்பியவர் அவர் மாத்திரமே. சர்வதேச துறைமுகமொன்று, சர்வதேச விமான நிலையமொன்று மாத்திரமன்றி சர்வதேச மட்டத்திலான விளையாட்டரங்குகளையும் அமைத்து அவரது ஆட்சி காலத்தில் சர்வதேச போட்டிகளையும் இலங்கையில் நடாத்த இயலுமாயிற்று. புதிய பாணியிலான பல்கலைக்கழகங்களை இலங்கையில் தாபிப்பதற்கான எண்ணக்கருவினை முதன் முதலில் கொண்டுவந்தவரும் அவரே. அதற்கிணங்க கடல்சார் பணிகளுக்கான சமுத்திரப் பல்கலைக்கழகத்தையும் புதிய உலகத்திற்கான தொழில்சார் பயிற்சிப் பல்கலைக்கழகத்தையும் தாபிப்பதில் அவர் வெற்றி கண்டார்.

இதற்கு முன்னர் எமது நாட்டில் அரச தலைவெரொருவர் இந்த அளவுக்கு வெளிநாடுகளின் கவனத்தை ஈர்த்த காலப் பகுதி இல்லையெனக் கூறலாம். யுத்தத்தை மையமாகக் கொண்ட பாராட்டுக்களைப் போன்றே தாக்குதல்களையும் அரவணைக்கும் அளவுக்கு அவர் துணிச்சல் மிக்கவராக விளங்கினார். வெளிநாடொன்றில் வைத்து தன்னைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை நன்கு அறிந்திருந்தும்கூட அவர் அச்சமின்றி வெளிநாடுகளுக்குச் சென்று வெளிநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் இலங்கையின் இயல்பு நிலையை தெளிவுபடுத்தி துணிச்சல்மிக்க கூற்றுக்களை வெளியிட்டார். ‘தேசத்தைக் காட்டிக் கொடுத்து ஒரு சர்வதேச வீரனாக வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது’ என அவர் கூறியது எமது நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றது. யுத்த களத்திற்குச் சென்று சகோதர இராணுவ சிப்பாயின் சுகநலத்தை விசாரித்து அவனை ஊக்குவித்த ஒரேயொரு அரச தலைவரும் அவரே. பயங்கரவாதிகளால் நூற்றுக் கணக்கான பொது மக்கள் வெட்டிக் குத்திப் படுகொலை செய்யப்பட்ட வேளையில் அந்த மிலேச்சத்தனத்திற்கு கண்டனம் தெரிவித்து கொலைக்களத்திற்கு விஜயம் செய்த துணிச்சல்மிக்க இலங்கையராக அமைந்தவரும் அவரே. ‘யுத்தத்தை நான் முடிவுக்குக் கொண்டு வருவேன்’ என துணிகரமாக அவர் மாத்திரமே கூறினார். யுத்தம் தொடர்பாக மேலோங்கச் செய்விக்கப்பட்டிருந்த பிற்போக்குவாதத்தைக் கொண்ட கருத்தியலான ‘இல்லை – முடியாது’ என்பதற்குப் பதிலாக ‘உள்ளது - இயலும்’ என்ற கருத்தியலை சமூகமயமாக் கியவரும் அவரே.

நோக்குதல் என்பது மேலெழு ந்தவாரியாக இடம்பெறுகின்ற செயற்பாடாகும். எனினும் நோக்கு என்பது தத்துவம் நிறைந்த எண்ணப்போக்கு அல்லது சிந்தனையாகும். மஹிந்த சிந்தனை அத்தகைய எண்ணப் போக்காகும். அவர் கிராமப்புறத்தில் சஞ்சரிக்கும் ஆலையில், பண்ணையில், மாளிகையில், குடிசையில், விளையாட்டு மைதானத்தில், கடற்கரையில், வீதியில், நடை பாதையில், மாநாட்டில், சிறிய சங்கத்தில், சர்வதேச கருத்தரங்கில், மக்கள் ஒன்றுகூடலில் ஒரே மாதிரியாக எமக்காக தோற்றிநிற்கிறார். அவர் பரந்த மனப்பான்மை கொண்டவர். மிகுந்த நேசமுள்ளவர். காலை முதல் நள்ளிரவு வரை அவ்வாறே பணியாற்றுகின்ற இரக்க சிந்தையுடைய பிறர் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கின்ற, சட்டத்தை மதிக்கின்ற அத்துடன் நியாயமாக நடந்துகொள்ளும் அரச தலைவரும் அவரே.

அவர் சொல்லுக்கேற்ப தாராள சிந்தையுடைய அரச தலைவர் ஆவார். பிறரது பிறந்த நாளன்று அதிகாலையில் முதலில் வாழ்த்துபவரும் அவரே. காலைச் செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்ப்பார். கவனம் செலுத்தப்பட வேண்டிய ஏதேனும் இருப்பின் காலையிலேயே அது பற்றி அவரே உத்தியோகத்தர்களுக்கு அறிவிப்பார். தினத்திற்கான நிகழ்ச்சித்திட்டம் பற்றி விசாரிப்பார். கிழக்கில் சூரியன் உதயமாகும் போது ஒரு சில அபிவிருத்திக் கருத்திட்டங்கள் அவரது கரங்களால் அங்குரார்ப் பணம் செய்யப்படுவதை நாம் பெருமளவில் கண்டுள்ளோம். காலையில் உடற் பயிற்சியில் ஈடுபடுவார். அவசரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியவை உள்ளனவா என விசாரிப்பார். உடற் பயிற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில்கூட அரசாட்சியுடன் இரண்டறக் கலந்த, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் அளவுக்கு அவரது மனம் பலவகைப் பணிகளில் ஈடுபட வல்லது. பல நாள் வேலைகளை ஒரு நாளில் புரிய அவர் முயற்சி செய்வார். நாள் மகிழச்சிகரமானதாக அமையும் தேசத்திற்கு மகுடம் உரித்தாகும்

தற்போது நாடு சமாதானத்தை உணர்கிறது எனினும் யுத்தம் முற்றாக நிறைவடையவில்லை. எனவே யுத்தத்தின் சுமை இன்னமும் எமது அரச தலைவரின் தோற்கள் மீது உள்ளது. அபிவிருத்தி ஆரம்பித்துள்ளது அது தொட்டத் தெளிவாக புலப்படுகின்றது. அது ஒரு புதிய ஆரம்பம். வருங்காலத்தில் இலங்கை உல்லாச சொர்க்கபுரியாக மாறும். எதிர்கால உலகில் எண்ணெய் வளம்மிக்க சமுத்திரமாக இந்து சமுத்திரம் மாறும். அவர் சக்திவலு உலகத்திற்கு எம்மை கொண்டு செல்வார். யுத்தத்தை உண்மையிலேயே முடிவுக்கு கொண்டுவர வாக்குறுதி அளித்தவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களே. அதனைச் சிறப்பாக நிறைவு செய்துள்ளதோடு தேசத்தின் எதிர்காலப் பொறுப்பினையும் தான் பொறுப்பேற்பதாக அவர் மீண்டும் கூறியுள்ளார். அவர் சொல்வதைச் செய்வர். அத்துடன் நல்லவர். எனவே ஆக்கமுறையான சிந்ததையுடன் அவருடன் ஒன்றாகப் பயணஞ் செய்வது எமது தாயகத்திற்கு நன்மை பயப்பதாக அமையும். நாங்கள் உங்களுக்கு நல்வாழ்த்துக் கூறுகிறோம்.