புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

அசத்திட முன்வரவேண்டும்

புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பிரிவின் விளையாட்டுப் போட்டி

புத்தளத்தின் கல்விப்புரட்சியின் தந்தை என வர்ணிக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ் மேற்கொண்ட அயராத முயற்சியின் பலனாக தனியொரு பாடசாலையாக மாகாண சபைக்கு உள்Zர்க்கப்பட்ட புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பாடசாலையின் 02 வது வருட பூர்த்தியின் முதலாவது இல்ல விளையாட்டுப்போட்டி அண்மையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம். எஸ். எம். ஹில்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸட். ஏ. சன்ஹீர் கலந்து கொண்டார்.

விசேட அதிதிகளாக புத்தளம் நகர சபை உறுப்பினர் எஸ். ஆர். எம். முஹ்ஸி, சுகாதார போதனாசிரியர் எம். எஸ். அபூசாலிபு, ஆசிரிய ஆலோசகர்களான திருமதி பரீனா நவாஸ், அருணாகரன் அனுசரணையாளர் ஹமாஸி உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

“விளையாட்டின் மூலம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்த வகையில் இடம்பெற்றன.

ஹிரா, மர்வா, சபா, நூர் ஆகிய 4 இல்லங்களின் தலைவர்கள் தீபங்களை ஏற்ற, அதிதிகளினால் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு மாணவர்களின் சத்திய பிரமாணத்தையடுத்து போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

04 இல்லங்களின் மாணவர்களுடன் ஸாஹிராவில் இயங்கும் விசேட பிரிவில் கல்வி பயிலும் மாற்றுத்திறன் படைத்த மாணவர்களும் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் பங்கேற்றனர். பொறுப்பாசிரியர் எம். எச். எம். நதீர் இம்மாணவர்களை பயிற்றுவித்திருந்தார்.

கயிறு இழுத்தல், ஸ்ட்ரோ மூலம் போத்தலில் தண்ணீர் நிரப்புதல், கண்கட்டி ஓட்டம், கயிறு பாய்தல், சமநிலை பேணுதல், பலூன் உடைத்தல், 4x50 அஞ்சல் ஓட்டம், 50 மீ. ஓட்டம், மா ஊதி டொபி எடுத்தல், தடை தாண்டி ஓட்டம், வினோத உடை, ஆடை அணிதல் மற்றும் உடற் பயிற்சி ஆகிய போட்டிகள் நடைபெற்றன. நடுவர்கள் 50 மீ. ஒற்றைக்கால் ஓட்டத்திலும், பெற்றோர்கள் முட்டி உடைத்தல் போட்டியிலும் பங்கேற்றனர்.

நான்கு இல்லங்களையும் அந்தந்த இல்லங்களின் ஆசிரியைகள் மிக எளிமையான முறையில் அழகாக அமைத்திருந்தார்கள்.

இல்ல அலங்கரிப்பில் நூர் இல்லம் முதலாமிடத்தையும், ஸபா இல்லம் இரண்டாம் இடத்தையும், மர்வா இல்லம் மூன்றாம் இடத்தையும், ஹிரா இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

உடற்பயிற்சி போட்டியில் 01 ஆம், 02 ஆம், 03 ஆம், 04 ஆம் இடங்களை முறையே ஸபா, நூர், ஹிரா, மர்வா இல்லங்கள் பெற்றுக்கொண்டன.

நடைபெற்று முடிந்த மொத்த போட்டிகளின் பிரகாரம் 320 புள்ளிகளைப்பெற்று நூர் இல்லம் முதலாம் இடம் பெற்று சம்பியனானது 299 புள்ளிகளைப் பெற்று மர்வா இல்லம் இரண்டாம் இடத்தையும், 293 புள்ளிகளைப்பெற்று ஹிரா இல்லம் மூன்றாம் இடத்தையும், 284 புள்ளிகளைப்பெற்று ஸபா இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

சகல போட்டிகளுக்கும் நடுவர்களாக ஏனைய பாடசாலைகளின் உடற்கல்வி போதனாசிரியர்களான எம். எப். ஹுமாயூன், எஸ். ஆர். எம். ஆஷாத், எம். ஐ. அக்பர், என். எம். முஷ்பிக், எம். எஸ். பஸ்மின், ஏ. எச். ஹkப், ஜே. எம். இல்ஹாம், எம். ஹில்பி, ஏ. டபிள்யூ. அன்சாத் ஆகியோர் கடமையாற்றினர்.

ஏ. அர்ஷாத் அலி, ஏ. எம். ஹிஸாம் ஹுசைன், என். எம். ரஸ்மி, ஆசிரியர் அலாவுதீன் ஆகியோர் நிகழ்வுகளை சுவைபட தொகுத்து வழங்கினர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.