புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

.

மனித நேயச் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் ஒலுவில் சுப்பர் லக் விளையாட்டுக் கழகம்

சமூகத்தின் நலனே தமது நலன் என அப்பிரதேசத்தின் அனைத்து விதமான அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டு வரும் ஓர் இளைஞர் விளையாட்டுக்கழகமாக ஒலுவில் சுப்பர் லக் விளையாட்டுக் கழகத்தைக் கூறலாம்.

ஒலுவில் 04 இனை மையமாகக் கொண்டு கடந்த 1985ம் ஆண்டு காலப்பகுதியில் இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து இதனை ஆரம்பித்தனர்.

இவர்களது செயற்பாடுகளை இச்சமூகத்தின் அரசியல் கலாசார பொருளாதார மற்றும் கல்விச் செயற்பாடுகள் முன்கொண்டு சென்று அதில் வெற்றியும் பெற்றுள்ளனர் என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் இந்த கழகமானது இப்பிரதேசத்தின் அடிப்படை பிரச்சினையாகவுள்ள “கல்வியில் ஒரு முன்மாதிரியான நற்பிரஜையுள்ள எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளும் மானிடப்பண்பு நிறைந்தவர்களை உருவாக்குவதுதான் எமது லட்சியம்” என்றும் அப்பணியினை நிறைவேற்றுவதில் இருந்த பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று இச்சமூகத்தின் ஒட்டு மொத்தக் குரலாக சுப்பர்லக் விளையாட்டுக்கழகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறது என இதன் முன்னாள் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமான எஸ்.எல்.றம்சான் தெரிவித்தார்.

மேலும் இந்த அமைப்பானது கடந்த காலங்களில் செய்து வருகின்ற சேவைகளைப் பட்டியல் படுத்திக் கொண்டே போகலாம்.

அந்த வகையில் இப்பகுதி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்தும் நோக்குடன் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிக் கொப்பிகளையும், அவர்களுக்குத் தேவையான பாடரீதியான பயிற்சி புத்தகங்களையும் வருடா வருடம் வழங்கி வருகின்றமை ஒரு முன்னோடித்திட்டம் என்றே கூறலாம்.

மேலும் பிரதேச இளைஞர்களின் உடற்பயிற்சியினை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறுபட்ட செயல் திட்டங்களையும் செற்படுத்தி வருகின்றமையானது இப்பகுதி இளைஞர்களின் உடல் உளரீதியான உறுதிப்பாட்டினை அபிவிருத்தி செய்வதில் மிகக் கவனமாக செயற்பட்டு வருகின்றமை போற்றத்தக்கதாகும்.

இப் பிரதேசம் முழுமையாக சுனாமியினால் பாதிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமே. சுனாமியின் பின் இப்பிரதேசத்து பாடசாலையான அல்- அஷ்ஹர் வித்தியாலயம் (1959 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது) இன்று வரையிலும் எவ்விதமான பெளதீக அபிவிருத்தியுமற்ற நிலையே காணப்படுகின்றது.

இங்கு கல்விபயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தமது நாளாந்த ஜீவனோபாயத்தை கடற்றொழில் மற்றும் வயல் வேலைகளில் கூலித் தொழில் செய்தே தமது பிள்ளைகளையும் குடும்ப சுமையினையும் சமாளித்து வருகின்ற நிலையில் தமது செல்வங்களை எப்படியாவது கல்வியைக் கற்று எதிர்காலத்தில் தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றுவான் எனும் அவாவில் தமது இளம்பிஞ்சுகளை கற்றவானாக்குவதிலேயே குறியாய் இருப்பதால் இப்பெற்றோர்களின் ஆசையையும் இவ்விளைஞர் கழகம் நிறைவேற்றும் வகையில் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தலைவர் ஏ.எம்.அமானுல்லா தெரிவித்தார்.

அந்த வகையில் மாலைநேர வகுப்புக்கள் நடாத்துவது அவர்களுக்கான ஆலோசனைகள் போன்வற்றையும் வழங்கி வருவதுடன். கடந்த 2008 ஆகஸ்ட்டில் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் ஒரு மாணவி சித்தியடைந்ததைத் தொடர்ந்து, 2009ம் ஆண்டிலும் 04 மாணவர்கள் சித்திபெற்று ஒலுவில் பிரதேசத்திற்கே பெருமை தேடிக் கொடுத்திருந்தனர்.

மட்டுமல்லாது பல மாணவர்கள் ஒரிரண்டு புள்ளிகளினால் சித்தியடைநத் தவறினாலும் எதிர்காலத்தில் இன்னும்பல மாணவர்கள் சித்தியடைவார்கள் எனும் நம்பிக்கையுடன் மாலை வகுப்புக்களை இக்கழகத்தின் நிருவாகிகள் நடாத்திக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் என பிரதேசத்தின் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எம். ஐ. எம். ஹனீபா அவர்கள் தெரிவிக்கிறார்.

அத்துடன் சமூகசேவையின் இன்னொரு பரிமாணத்தையும் இக்கழகத்தினர் செய்தும் வருகின்றனர். அதாவது இப்பகுதி பெற்றோர்களுக்கு சுயதொழிலுக்கான இலகு தவணையில் செலுத்தக் கூடியவாறான கடன் வசதிகளையும் வழங்கி, அதன் மூலம் தமது தொழில்களை செய்து அன்றாட வாழ்வுக்குரிய பொருளாதார மேம்பாட்டினையும் செய்து வருகின்றமை இவர்களின் பொருளாதார மேம்பாட்டுத்திட்டமாகும். மேலும் சிரமதானப்பணிகளிலும் இவர்கள் பின்னிப்பதில்லை என்றே கூறலாம்.

இவர்களது பல்வேறு சிரமதான பணிகளையும் பட்டியல் இட்டே கூறலாம். அந்த வகையில் கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பொலிஸாரின் துணையுடன் பாலமுனை ஆதார வைத்தியசாலையின் சுற்றுப் புறச் சூழலை சிரமாதானப் பணியின் மூலம் செப்பனிட்டு கொடுத்தமை, தேசிய டெங்கு வாரம், சிறுவர் உரிமைகள், விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள், தேசிய மரம் நடும் வாரம், இளைஞர் மேம்பாட்டுக் கருத்தரங்குகள், மாணவர் கல்வி விழிப்புணர்வுக்கான கருத்தரங்குகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களையும் தமது சமுதாய நிகழ்ச்சித்திட்டங்களாக செய்து வருகின்றமை போற்றத்தக்க விடயங்கள் என பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.

மட்டுமல்லாது பிரதேசத்தின் நலன்கருதி அரசியல் பணியிலும் இக்கழகம் வேரூண்டிய நிலையில் தமது செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதையும் காணக் கூடியதாக இருக்கின்றது. அதாவது கடந்த காலங்களில் இப்பிரதேச மக்களை ஏமாற்றி அரசியல் செய்த அரசியல் வாதிகளுக்கு ஆப்பு வைத்த இவ்விளைஞர் அணி கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இப்பகுதி ஒட்டு மொத்த மக்களின் வாக்குகளையும் கிழக்கின் சூரியன் எனபோற்றப்படும் மாகாண அமைச்சர் எம்.எஸ்.

உதுமாலெவ்வையின் வெற்றிக்காக உழைத்து மாகாண அமைச்சராக்கியதில் இவர்களுக்கும் பங்குண்டு எனத் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் எமது அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் வழிகாட்டலின் கீழும், தேசிய காங்கிரஸின் ஒலுவில் அமைப்பாளர் ஏ. சி. றியாஸின் ஒத்துழைப்புடனும் எமது அரசியல் பணியின் மூலம் கிடைக்கின்ற நன்மைகள் இம்மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இப்பிரதேச வாழ் மக்களை ஒன்று சேர்த்து ஒற்றுமையா செயற்படவைத்த பெருமை இக்கழக உறுப்பினர்களையே சாரும். மட்டுமன்றி நின்றுவிடாது ஒலுவில் துறைமுகத்தின் மகாபொல வீதி, அல- அஷ்ஹர் வித்தியாலய வீதிகள் சுமார் ரூபா 70 இலட்சம் செலவில் கொங்கிaட் பாதையாக செப்பனிடப்பட்டது.

இவர்களது அயராத முயற்சியின் பயனாக, மாகாண அமைச்சர் எம். எஸ். உதுமா லெவ்வை இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்ததனாலாகும் என்பதை நன்றியுடன் நினைவு கூரும் இக்கழகத்தினர் எதிர்காலத்திலும் இப் பிரதேசத்தினது அபிவிருத்தியில் மஹிந்த சிந்தனையின் மூலமாகவும் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா மாகாண அமைச்சர் எம். எஸ். உதுமா லெவ்வையினதும் ஒதுக்கீடுகளும் வந்தடைய வேண்டும் என்பதில் பற்றுருதியாய் இருக்கின்றனர் என்பதையும் உறுதியாக நம்பும் இவ்விளைஞர் கழகத்தின் பணி ஓங்கி 4லித்திட வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் இன்றைய ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கியது போல் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலிலும் ஒற்றுமையுடன் செயற்பட தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவ்விளைஞர் கழகத்தின் செயற்பாடுகள் இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் கூடியளவான முயற்சிகளை மேற்கொண்டு வருவது, பிரதேசத்தின் அனைத்து கழகத்தினருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதுடன், பிரதேச நலன்விரும்பிகளும், சமூக நலத்தலைவர்களும் இப்பணியினைப் பாராட்டுகின்றனர்.

சமூகத்தின் நலனே தமது நலன் என அப்பிரதேசத்தின் அனைத்து விதமான அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டு வரும் ஓர் இளைஞர் விளையாட்டுக்கழகமாக ஒலுவில் சுப்பர் லக் விளையாட்டுக் கழகத்தைக் கூறலாம்.

ஒலுவில் 04 இனை மையமாகக் கொண்டு கடந்த 1985ம் ஆண்டு காலப்பகுதியில் இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து இதனை ஆரம்பித்தனர்.

இவர்களது செயற்பாடுகளை இச்சமூகத்தின் அரசியல் கலாசார பொருளாதார மற்றும் கல்விச் செயற்பாடுகள் முன்கொண்டு சென்று அதில் வெற்றியும் பெற்றுள்ளனர் என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் இந்த கழகமானது இப்பிரதேசத்தின் அடிப்படை பிரச்சினையாகவுள்ள “கல்வியில் ஒரு முன்மாதிரியான நற்பிரஜையுள்ள எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளும் மானிடப்பண்பு நிறைந்தவர்களை உருவாக்குவதுதான் எமது லட்சியம்” என்றும் அப்பணியினை நிறைவேற்றுவதில் இருந்த பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று இச்சமூகத்தின் ஒட்டு மொத்தக் குரலாக சுப்பர்லக் விளையாட்டுக்கழகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறது என இதன் முன்னாள் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமான எஸ்.எல்.றம்சான் தெரிவித்தார்.

மேலும் இந்த அமைப்பானது கடந்த காலங்களில் செய்து வருகின்ற சேவைகளைப் பட்டியல் படுத்திக் கொண்டே போகலாம்.

அந்த வகையில் இப்பகுதி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்தும் நோக்குடன் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிக் கொப்பிகளையும், அவர்களுக்குத் தேவையான பாடரீதியான பயிற்சி புத்தகங்களையும் வருடா வருடம் வழங்கி வருகின்றமை ஒரு முன்னோடித்திட்டம் என்றே கூறலாம்.

மேலும் பிரதேச இளைஞர்களின் உடற்பயிற்சியினை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறுபட்ட செயல் திட்டங்களையும் செற்படுத்தி வருகின்றமையானது இப்பகுதி இளைஞர்களின் உடல் உளரீதியான உறுதிப்பாட்டினை அபிவிருத்தி செய்வதில் மிகக் கவனமாக செயற்பட்டு வருகின்றமை போற்றத்தக்கதாகும்.

இப் பிரதேசம் முழுமையாக சுனாமியினால் பாதிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமே. சுனாமியின் பின் இப்பிரதேசத்து பாடசாலையான அல்- அஷ்ஹர் வித்தியாலயம் (1959 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது) இன்று வரையிலும் எவ்விதமான பெளதீக அபிவிருத்தியுமற்ற நிலையே காணப்படுகின்றது.

இங்கு கல்விபயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தமது நாளாந்த ஜீவனோபாயத்தை கடற்றொழில் மற்றும் வயல் வேலைகளில் கூலித் தொழில் செய்தே தமது பிள்ளைகளையும் குடும்ப சுமையினையும் சமாளித்து வருகின்ற நிலையில் தமது செல்வங்களை எப்படியாவது கல்வியைக் கற்று எதிர்காலத்தில் தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றுவான் எனும் அவாவில் தமது இளம்பிஞ்சுகளை கற்றவானாக்குவதிலேயே குறியாய் இருப்பதால் இப்பெற்றோர்களின் ஆசையையும் இவ்விளைஞர் கழகம் நிறைவேற்றும் வகையில் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தலைவர் ஏ.எம்.அமானுல்லா தெரிவித்தார்.

அந்த வகையில் மாலைநேர வகுப்புக்கள் நடாத்துவது அவர்களுக்கான ஆலோசனைகள் போன்வற்றையும் வழங்கி வருவதுடன். கடந்த 2008 ஆகஸ்ட்டில் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் ஒரு மாணவி சித்தியடைந்ததைத் தொடர்ந்து, 2009ம் ஆண்டிலும் 04 மாணவர்கள் சித்திபெற்று ஒலுவில் பிரதேசத்திற்கே பெருமை தேடிக் கொடுத்திருந்தனர்.

மட்டுமல்லாது பல மாணவர்கள் ஒரிரண்டு புள்ளிகளினால் சித்தியடைநத் தவறினாலும் எதிர்காலத்தில் இன்னும்பல மாணவர்கள் சித்தியடைவார்கள் எனும் நம்பிக்கையுடன் மாலை வகுப்புக்களை இக்கழகத்தின் நிருவாகிகள் நடாத்திக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் என பிரதேசத்தின் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எம். ஐ. எம். ஹனீபா அவர்கள் தெரிவிக்கிறார்.

அத்துடன் சமூகசேவையின் இன்னொரு பரிமாணத்தையும் இக்கழகத்தினர் செய்தும் வருகின்றனர். அதாவது இப்பகுதி பெற்றோர்களுக்கு சுயதொழிலுக்கான இலகு தவணையில் செலுத்தக் கூடியவாறான கடன் வசதிகளையும் வழங்கி, அதன் மூலம் தமது தொழில்களை செய்து அன்றாட வாழ்வுக்குரிய பொருளாதார மேம்பாட்டினையும் செய்து வருகின்றமை இவர்களின் பொருளாதார மேம்பாட்டுத்திட்டமாகும்.

மேலும் சிரமதானப்பணிகளிலும் இவர்கள் பின்னிப்பதில்லை என்றே கூறலாம்.

இவர்களது பல்வேறு சிரமதான பணிகளையும் பட்டியல் இட்டே கூறலாம். அந்த வகையில் கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பொலிஸாரின் துணையுடன் பாலமுனை ஆதார வைத்தியசாலையின் சுற்றுப் புறச் சூழலை சிரமாதானப் பணியின் மூலம் செப்பனிட்டு கொடுத்தமை, தேசிய டெங்கு வாரம், சிறுவர் உரிமைகள், விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள், தேசிய மரம் நடும் வாரம், இளைஞர் மேம்பாட்டுக் கருத்தரங்குகள், மாணவர் கல்வி விழிப்புணர்வுக்கான கருத்தரங்குகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களையும் தமது சமுதாய நிகழ்ச்சித்திட்டங்களாக செய்து வருகின்றமை போற்றத்தக்க விடயங்கள் என பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.

மட்டுமல்லாது பிரதேசத்தின் நலன்கருதி அரசியல் பணியிலும் இக்கழகம் வேரூண்டிய நிலையில் தமது செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதையும் காணக் கூடியதாக இருக்கின்றது.

அதாவது கடந்த காலங்களில் இப்பிரதேச மக்களை ஏமாற்றி அரசியல் செய்த அரசியல் வாதிகளுக்கு ஆப்பு வைத்த இவ்விளைஞர் அணி கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இப்பகுதி ஒட்டு மொத்த மக்களின் வாக்குகளையும் கிழக்கின் சூரியன் எனபோற்றப்படும் மாகாண அமைச்சர் எம்.எஸ்.

உதுமாலெவ்வையின் வெற்றிக்காக உழைத்து மாகாண அமைச்சராக்கியதில் இவர்களுக்கும் பங்குண்டு எனத் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் எமது அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் வழிகாட்டலின் கீழும், தேசிய காங்கிரஸின் ஒலுவில் அமைப்பாளர் ஏ. சி. றியாஸின் ஒத்துழைப்புடனும் எமது அரசியல் பணியின் மூலம் கிடைக்கின்ற நன்மைகள் இம்மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இப்பிரதேச வாழ் மக்களை ஒன்று சேர்த்து ஒற்றுமையா செயற்படவைத்த பெருமை இக்கழக உறுப்பினர்களையே சாரும். மட்டுமன்றி நின்றுவிடாது ஒலுவில் துறைமுகத்தின் மகாபொல வீதி, அல- அஷ்ஹர் வித்தியாலய வீதிகள் சுமார் ரூபா 70 இலட்சம் செலவில் கொங்கிaட் பாதையாக செப்பனிடப்பட்டது.

இவர்களது அயராத முயற்சியின் பயனாக, மாகாண அமைச்சர் எம். எஸ். உதுமா லெவ்வை இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்ததனாலாகும் என்பதை நன்றியுடன் நினைவு கூரும் இக்கழகத்தினர் எதிர்காலத்திலும் இப் பிரதேசத்தினது அபிவிருத்தியில் மஹிந்த சிந்தனையின் மூலமாகவும் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா மாகாண அமைச்சர் எம். எஸ். உதுமா லெவ்வையினதும் ஒதுக்கீடுகளும் வந்தடைய வேண்டும் என்பதில் பற்றுருதியாய் இருக்கின்றனர் என்பதையும் உறுதியாக நம்பும் இவ்விளைஞர் கழகத்தின் பணி ஓங்கி 4லித்திட வேண்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் இன்றைய ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கியது போல் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலிலும் ஒற்றுமையுடன் செயற்பட தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவ்விளைஞர் கழகத்தின் செயற்பாடுகள் இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் கூடியளவான முயற்சிகளை மேற்கொண்டு வருவது, பிரதேசத்தின் அனைத்து கழகத்தினருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதுடன், பிரதேச நலன்விரும்பிகளும், சமூக நலத்தலைவர்களும் இப்பணியினைப் பாராட்டுகின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.