புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

மெஸ்சி - ரொனால்டோ மோதல்

மெஸ்சி - ரொனால்டோ மோதல்

சர்வதேச உதைபந்து அரங்கில் முன்னணி வீரர்களாக வலம் வருகின்றனர். போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சி இருவருக்கும் இடையிலான போட்டி தற்போது பொறாமையாக உருவெடுத்துள்ளது.

பார்சிலோனா கிளப் சார்பில் மெஸ்சி பங்கேற்று வருகிறார் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டின் சிறந்த உதைபந்து வீரர் மற்றும் ஐரோப்பாவின் சிறந்த வீரர் விருதை தன்வசப்படுத்தினார் மெஸ்சி.

இதன் மூலம் இதற்கு முன் இவ்விருதை பெற்றிருந்த ரோனால்டோவை பின்னுக்குத் தள்ளினார். மெஸ்சியின் எழுச்சி ரொனால்டோவுக்கு விளம்பரம், வருமானம் உள்ளிட்ட பல வகைகளில் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

இதனால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் ரொனால்டோ, தனது வெறுப்பை அவ்வப்போது காட்டிவரும் ரொனால்டோ கடந்த சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில் தனக்குப் பிடித்த 3 உதைபந்தாட்ட வீரர்கள் பற்றி தெரிவித்திருந்தார்.

இதில், பிரேசிலின் காகா, இங்கிலாந்தின் ரூனே மற்றும் செல்சியாவின் டிரொக்பா ஆகியோரை உலகின் தலை சிறந்த வீரர்களாக கூறியுள்ளார். இதன் மூலம் மெஸ்சி மீதான தனது வெறுப்பை வெளிப்படையாகவே காட்டியிருக்கிறார் ரொனால்டோ.

ஆனால் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் உள்ள நவாரா பல்கலைக்கழகம் உலகின் தலை சிறந்த கால்பந்து வீரர் யார் என்ற சர்வேயை நடத்தியது. இதில் லியோனல் மெஸ்சி முதலிடத்தை தட்டிச் சென்றார்.

இரண்டாவது இடம்தான் ரொனால்டோவுக்கு கிடைத்துள்ளது. இதனால் மேலும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார் ரொனால்டோ இந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகின் தலைசிறந்த வீரர் விருதை கைப்பற்றுவேன். என உறுதி எடுத்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் இந்த ஆண்டு (ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை) நடக்க உள்ள உலகக்கோப்பை உதைபந்து போட்டிகளில் இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.