புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

கவலை தரும் காயம்

கவலை தரும் காயம்

சானிய

‘பட்ட காலிலே படும்’ என்பது போல இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின், மணிக்கட்டு பகுதியில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இவர் சமீபத்தில் நடந்த துபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் முழுமையாக பங்கேற்க முடியாமல் போனது தவிர இவர், இன்னும் ஆறு வார காலத்துக்கு பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சானியா (வயது 23) கூறியதாவது, மணிக்கட்டு பகுதியில் மீண்டும் காயம் ஏற்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. விளையாட்டில் காயம் என்பது இயற்கையான ஒன்று இருப்பினும், ஒரே இடத்தில் அடுத்தடுத்து காயம் கவலையான விஷயம்.

எனது காயத்தைப் பரிசோதித்த டாக்டர்கள், இன்னும் ஆறு வார காலத்துக்கு போட்டி மற்றும் பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

இதனால் வரும் அக்டோபர் மாதம் டில்லியில் நடக்கவுள்ள கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு, தயாராவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. காயம் முற்றிலும் குணமடைந்தவுடன், கொமன்வெல்த் போட்டிக்கு முழுவீச்சில் என்னை தயார்படுத்திக் கொள்ள உள்ளேன்.

இத்தொடரில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தர வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டுள்ளேன். இவ்வாறு சானியா மிர்சா கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.