புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் இல்ல விளையாட்டு விழா

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் இல்ல விளையாட்டு விழா

கொழும்பு ஸாஹிராக் கல்லூரி மாணவர்களினது வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி அண்மையில் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதன் போது 100 மீற்றர் ஓட்டப் போட்டி, 200 மீற்றர் ஓட்டப் போட்டி, அஞ்சல் ஓட்டப் போட்டி, நீளம் பாய்தல், குண்டு எறிதல், ஆசிரியர்களினது ஓட்டப் போட்டி மற்றும் பழைய மாணவர்களின் ஓட்டப் போட்டி ஆகியவை இடம்பெற்றன.

‘அன்கோரா’, ‘பெக்டாத்’, ‘கொரடோவா’ மற்றும் ‘ஸ்டாம்புல்’ ஆகிய இல்லங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேலான மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இதில் 120 அதிகமான புள்ளிகளைப் பெற்று ‘கொரடோவா’ இல்லம் சம்பியனாக தெரிவானது.

சம்பியன் இல்லத்திற்கான விருதினை இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கொழும்பு மாநகர சபை நிர்வாக அதிகாரி ஒமார் காமில் வழங்கினார்.

ஏனைய விருதுகள் கல்லூரி அதிபர் ரீ. கே. அஸ¥ர், ஆளுநர் சபைத் தலைவர் பவுஸ¤ல் ஹமீட், பழைய மாணவர் சங்க 80 குழு முன்னாள் தலைவர் எம். யூ. எம். ஆஸ்மி உட்பட ஆசியர்களான, ஆனந்த பொன்னப்பெரும, ஏ. அன்வர்தீன், எம். எம். எம். பாயிஸ், பாலித குலதுங்க, எஸ். எம். எம். அஜ்வாத் மற்றும் எப். ஆர். எஸ். நூர்தீன் ஆகியோர்களினால் வழங்கப்பட்டன.

கொழும்பு மாநகர சபையின் நிர்வாக ஒமார் காமில் இதன்போது உரை நிகழ்த்துகையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் மாத்திரம் நின்றுவிடாது, அவர்களின் செயல்பாடுகளையும் ஒவ்வொன்றாக உன்னிப்புடன் கவனிப்பது அவசியம் என குறிப்பிட்டார்.

ஸாஹிராகக் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் இன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றமை பாராட்டத்தக்க விஷயமென தெரிவித்த அவர், கல்லூரியின் வளர்ச்சிக்கு அவர்களினது பங்களிப்பு மிக அவசியம் எனவும் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.