புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

ஓகிட் தேவதைக்கு

ஓகிட் தேவதைக்கு

அவள் நிலா தேவதை தன் முகவரிக்கு வந்த காகிதக் கிண்ணத்தைக் கண்களால் பருகினாள்.

அன்புடன் அழகிக்கு
உன் சுவாசம் குடித்ததால்
நறுமணம் என்னில்!

உன் வாசம் பிடித்ததால்
கமழ்கிறது
என் உயிர் வரை!

துடிக்கும் பூக்களா...? மூடித்திறக்கும் நட்சத்திரங்களா உன் விழிகள்...?
வண்டுகள் கூட
பைத்தியமாகின
உன் கண்கள்
கண்டதிலிருந்து!

உன் முகம் பார்த்துப் பார்த்துதானே பிறை வளர்ந்து... வளர்ந்து... பெளர்ணமியாகிறது. இது உன்னைக் காணாத போது தேய்ந்து... தேய்ந்து... மறைந்து போகிறதே...
புன்னகையோடு தொடர்ந்தாள்...!

வாடி பூக்கள்
மீண்டும் மலர்கின்றன.
பக்கத்தில் வரும் போதெல்லாம்
இப்படிக்கு,
காதலன்

இப்படி...
பூக்களின் சொற்களால் அந்த நிலா தேவதையை வணங்கினான்.
அடுத்த சூரியப் பொழுதில் அந்த மின்மினி தேவதை மலர்ந்தாள்.
‘ஏ என்னப் புரிஞ்சுக்கிறாயில்ல...’ அந்த மல்லிகைத் தென்றலை வழிமறித்து சோகம் செய்தான்.
‘உன் மனசுக்குள்ள இருக்றதச் சொல்லு!’
அந்த சந்தனப் பூவிடம் மன்றாடினான்.
‘என்ல என்ன குற இருக்கு!’
அவன் வார்த்தைகளால் விழுந்தான்.
‘ஏ... பேசாமல் கொல்றாய்?’
‘....’
‘இதோ பார்! நான் ஜுஸ் பண்ற ரெமிளட்ஸ்கள... நான் நாட்கள எண்ணிக் கிட்டிருக்கன... அதான்...! அந்த மலர் மேகம் மெளனம் பிடுங்கி வீசினாள். கண்ணீர்ச் சாறு பிழிந்தாள். அவன் வயது வெடித்துச் சிதறியது. என்றாலும் அவன் சொன்னான்.

‘அனுமதிகொடு
உன் கல்லறையை
காதலிப் பதற்காகவாவது’




மின்மினி வானவில்

பூக்கள் பேசினால்
உன்னைப் பற்றியதாகத் தான்
இருக்கும்!

கடவுளிடம்
கேட்டன விண்மீன்கள்
உன்
கண்மீன்கள்
வேண்டுமென்று!

கமகமத்தன
மல்லிகைப் பூக்கள்
உன் கூந்தல்
வாசத்தால்!

ஏங்கின
ரோஜாச் செடிகள்
உன்
கூந்தலைப் பூக்கக் கூடாதா
என்று!

தேனீக்கள் மொய்த்தன
உன் பெயர்
எழுதிய
காகிதத்தில்!

நிரூற்றத் தேவையில்லை
நீ
பூஞ்செடிகள்
நட்டால்!

புகைப்பட மெடுத்தேன்
உன்னை
தெரிந்தது
பூந்தோட்டம்!

கனவு காண்பதற்கு
பழகின.
உன்னைக் கண்ட
பூக்கள்!

பூமியில்
கவிதைகளை மிஞ்ச
க்கள்
பூக்களை மிஞ்ச
நீ!

பூக்களாகின
உன் தலையில்
விழுந்த
இலைகளும்!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.