புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

இவ்வார சிரிப்பு

இவ்வார சிரிப்பு

முஹம்மத் நஸ்ஹத்,
நவ்ராஜ் - றிஸ்னியா, இனிகலை


கணனி பயிலும் ஆறரை வயது மாணவி தில்ஷானி

படத்தில் காணப்படும் சிறுமியின் பெயர் தில்ஷானி. ஆறரை வயது. மஸ்கெலிய புளூம்பீல்ட் பாடசாலை மாணவியான இவர் மஸ்கெலிய பிரவுன்விக் தோட்டத்தில் அமைந்திருக்கும் பிரஜாசக்தி கணனி பயிற்சி நிலையத்தில் பாடசாலை முடிந்த பின்னர் கணனி பயிற்சி பெற்று வருகிறார். இவரை இங்கே அழைத்துவரும் அவருடைய அம்மா எஸ். சரஸ்வதி, தனது குழந்தை சிறுவயதிலேயே கணனியில் பழகி கைவரப்பெற வேண்டும் எனக் கருதியதாலேயே, பிரஜாசக்தி பற்றிக் கேள்விப்பட்டு இங்கே வந்து சேர்ந்தேன் என்கிறார். இவரது கணவர் கொழும்பில் வேலை பார்க்கிறார். சரஸ்வதி படித்தவர். நன்றாக ஆங்கிலம் பேசுகிறார். இந் நிலையத்துக்கு பொறுப்பான அமுதா பார்த்திபன், தில்ஷானி கணனியை சட்டென புரிந்துகொண்டு ஆர்வம் காட்டி வருகிறார் என்றார். பள்ளி விட்ட பின்னர் பல சிறுவர் சிறுமியர் இங்கே கணனிக் கல்விக்காக வருகிறார்கள்.


Institute of Western music and Speech Sri Lanka  நிறுவனத்தினால் நடத்தப்பட்ட அகில இலங்கை மொழி உச்சரிப்பு போட்டியில் ராகம எல்டராடோ சர்வதேச பாலர் பாடசாலையைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் முதல் இடங்களைப் பெற்றனர். அண்மையில் சென். ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தின் போது பிடிக்கப்பட்ட படம்.


எனது பாடசாலை

எனது பாடசாலையின் பெயர் அல்-ஹுமைஸரா முஸ்லிம் மகா வித்தியாலயம். எனது பாடசாலை களுத்துறை மாவட்டம் பேருவளை, சீனன்கோட்டை என்னும் இடத்தில் அமைந்துள்ளது. எனது அதிபரின் பெயர் ஏ. எல். ஸிராஜ். எனது பாடசாலையின் 68 ஆசிரியர்களையும், 1800 மாணவர்களையும் கொண்டது. எனது பாடசாலை அழகான தோற்றத்தில் காணப்படுகிறது. சகல வசதிகளையும் கொண்ட எனது பாடசாலையில் மாணவர்கள் கல்வியில் மட்டுமன்றி பல போட்டிகளிலும் வெற்றி பெற்று, பாடசாலைக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சம்ரான் கெளஸ்

தரம் 8 டீ,

அல் - ஹுமைஸரா மத்திய கல்லூரி,

சீனன்கோட்டை,

பேருவளை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.