புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

மலையகத்தில் சாதிக்கக் கூடிய ஒரே கட்சி இ.தொ.கா மட்டுமே!

மலையகத்தில் சாதிக்கக் கூடிய ஒரே கட்சி இ.தொ.கா மட்டுமே!

மலையக மக்களின் அரசியல் கோட்டை என வர்ணிக்கப்படும் நுவரெலியா மாவட்டத்தில் ஏழு உறுப்பினர்களின் தெரிவுக்காக பதினாறு அரசியல் கட்சிகள் பதினான்கு சுயேட்சைக் குழுக்கள் சார்பாக முன்னூறு பேர் களத்தில் இறங்கியுள்ளனர்.

இவ்வேட்பாளர்கள் முன்னூறு பேரின் எத்தனை வேட்பா ளர்களுக்கு தேயிலைச் செடியைப் பற்றி தெரியும். தேயிலைச் செடியையே நம்பி வாழும் பெருந்தோட்ட மக்களின் வரலாற்றை யாவது இவர்கள் தெரிந்து வைத்திருக் கிறார்களா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத் தப் போகிறோம் என்ற தொணியை கருவாக வைத்தே வேட்பாளர்கள் தங்களின் பீரங்கி பிரசாரத்தை மேற் கொண்டு வருகின்றனர்.

முடிந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் இவ்வாறு கூறியே மக்களிடம் வாக்கு களைப் பெற்று வெற்றி அடைந்த உறுப்பினர் களில் பலர் மத்திய மாகாண சபையில் மாதாந்த கூட்டங்களுக்குக் கூட வருகை தருவதில்லை என மாகாண சபை உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

மலையகத்தில் மக்களை விழிப்படை யச் செய்வதாக கூறுபவர்கள் தேர்தல் காலம் நிறைவடைந்ததும் தலைநகரில் தமது குடும்பம் சகிதம் முடங்கிக் கொள்வது கவலை தரும் விடயமாகும்.

தேர்தல் காலங்களில் ஏனைய சமூகத் தவர்களைப் போல பெருந்தோட்ட மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

பெருந்தோட்ட மக்களின் வாழ்வை சீரழித்து தோற்றுப் போனதோர் சமூக மாக தொடர்ந்தும் வைத்திருக்கும் நோக்குடன் இன்னும் பலர் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். நாம் தொடர்ந்தும் எமது இயலாமையைக் காட்டி அடிமைகளாக வாழ முடியாது.

எமது தனித்துவங்களை விட்டுக் கொடுக்கவும் முடியாது. இவ்வாறான சூழலில் நுவரெலியா மாவட்டத்தை குறிவைத்து 300 பேர் களத்தில் குறித் திருப்பது கவலைதரும் விடயமாகும்.

இந்த 300 பேரில் 159 பேர் தமிழ் வேட்பாளர்கள். 141 பேர் சிங்கள வேட்பாளர்கள். எட்டு முஸ்லிம் வேட்பாளர்கள்.

இத் தேர்தலில் தமிழ் வேட்பாளர் கள் அதிகரிப்பின் காரணமாக வெற்றி பெரும் உறுப்பினர்களின் தொகை குறையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படலாம் என்ற கணிப்பீட்டையும் கவனத்தில் கொள்ளல் அவசியமாகும்.

பெருந் தோட்ட மக்கள் தங்கள் உரிமைகளையும், சுபீட்சங்களையும் பெற்றுக் கொள்ள தினம் தினம் போராடுகின்றனர். அவர்களின் போராட்ட வாழ்க்கை காலத்துக்குக் காலம் தோன்றும் அரசியல்வாதிகளால் மழுங்கடிக்கப்படுகின்றன. இன்று மலையகத்தில் அம்மக்களின் சனத் தொகையின் விகிதாசாரத்தை விட அவர்களை மையமாக வைத்து (வியாபார) அரசியல் தொழிற்சங்கங்கள் நடத்துவோரின் எண்ணிக்கை அதிகரி த்து வருகிறது.

முப்பது வருட யுத்தத்தினால் மலை யக மக்களும் பல்வேறு கோணங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். பொரு ளாதார நெருக்கடியால் மலையகத்து தேயிலைத் தோட்டங்களை கைவிட்டு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டக் காடுகளில் குடியேறினார்கள்.

புசல்லாவ, கம்பளை, கண்டி பிரதேச தோட்டங் களில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த எமது மக்கள் புது வாழ்வு தேடி இடம்பெயர்ந்தார்கள்.

இவ்வாறு சென்ற வர்களே இன்று வன்னியில் அகதி முகாம்களில் போருக்குப் பின்னர் அகதிகளாக வாழ்கின்றனர். இவர்கள் மலையக பெருந்தோட்டங்களில் வாழ்ந்த காலத்தில் மலைகளைப் பிழந்து தேயிலைச் செடி நாட்டியவர்கள்.

இவர்களின் மூதாதையர்கள் தாங்கள் நாட்டிய தேயிலைச் செடிகளுக்கு கீழேயே உரமாக விதைக்கப்பட்டவர்கள். அகதி முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கும் இவர்களைப் பற்றி இன்று எந்தவொரு மலையக அரசியல் தொழிற்சங்கவாதியும் பேசாது மெளனம் காப்பது எந்தவிதத்தில் நியாயம்? அல்லது இவர்களின் இடம்பெயர் வரலாற்று தகவல்கள் எவருக்கும் தெரியாமல் இருக்கலாம்.

1970-1977 காலகட்டத்திலும் பின்னர் 1977 முதல் 1983 வரை தொடர்கதை யாக ஐக்கிய தேசியக்கட்சியால் கட்ட விழத்துவிடப்பட்ட இன வன்செயல்கள் அல்லது தமிழர்களை மட்டும் இனம் பார்த்து தாக்குதல் மேற்கொண்ட கால கட்டத்திலும் எமது உறவுகள் வடக்கை நோக்கி இடம் பெயர்ந்த போதும் மறைந்த பெருந் தலைவர் செளமிய மூர்த்தி தொண்டமான் தடுத்து நிறுத்த எடுத்த முயற்சிகளை இவ்விடத்தில் குறிப்பிடுதல் பொருத்தமாகும்.

இம் மக்களின் நலன்களைக் கவனிக்கும் பொருட்டு வவுனியாவில் இ. தொ. காங்கிரஸின் கிளையும் ஆரம்பிக்கப்பட்டது. இன்று வவுனியா வில் இ. தோ. கா. கிளை செயற்படுகி றதா எனத் தெரியாது.

இம்மக்கள் வடபகுதி அரசியல்வாதிகளாலும் கைவிடப்பட்ட நிலையில் அரசியல் அநாதைகளாக முடங்கிக் கிடக்கும் தருணத்தில் அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் இம் மக்களின் நலனில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு இயங்காது விடுகையில், அது மாபெரும் அரசியல் தவறாக வரலாற்றில் பதியப்படும்.

இன்று பெருந்தோட்ட மக்கள் தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், திருமணப்பதிவுச் சான்றிதழ், வீட்டுரிமை, காணியுரிமை, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, குடிதண்ணீர் என பலதரப்பட்ட அடிப்படை பிரச்சி னைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

அதேநேரம் தேசிய அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ் திருமணப் பதிவு சான்றிதழ் வழங்குவதற்காக நடமாடும் சேவைகளை மலையகத் தைச் சேர்ந்த அமைச்சர்கள் நடத்தினர்.

எனினும் எமது மக்கள் சரியான வகையில் இந்நடமாடும் சேவையை பயன்படுத்திக் கொள்வதில்லை என அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது முற்றிலும் உண்மையே. இவ்விட யத்தில் அமைச்சர்களை எவரும் குறைகூற முடியாது.

இன்று பெருந் தோட்டப்பகுதிகளில் கல்வித்துறையில் பெரும் மாற்றம் ஏற் பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் 1980 வரையிலான காலகட்டத் தில் பெரியகங்காணி, மற்றும் தோட்ட கணக்கப்பிள்ளைகளின் பிள்ளைகளே நகர பாடசாலைகளுக்குச் சென்று உயர் கல்வியைத் தொடர்ந்தனர்.

ஆனால் இன்று அந்த நிலை மாறி தொழிலாளி யின் பிள்ளைகளும் பல்கலைக்கழகம் செல்லும் அளவிற்கு பாரிய கல்வியில் மறுமலர்ச்சி ஏற்பட்டு வருகின்றன.

இந்நாட்டில் மாகாண சபை அறிமுக ப்படுத்தியதும், மத்திய மாகாணத்தில் மாகாண கல்வி அமைச்சை ஜே. ஆரி டமிருந்து மறைந்த செளமிய மூர்த்தி தொண்டமான் பெற்றமையேயாகும். அன்று விதைக்கப்பட்ட விதையே இன்று பலன் தருகின்றது.

மலையகக் கல்வித்துறையில் பாதிப்பேற்படாத வகையில் பெற்றோர்கள் மிகவும் பொறுப்புணர்வுடனும், அவதானத்துட னும் நடந்து கொள்ளல் அவசியமாகும். நுவரெலியா மாவட்டத்தில் முழுக்க முழுக்க பலதரப்பட்ட வளங்களைக் கொண்ட பெருந்தோட்ட மாணவர் களுக்கான பல்கலைக்கழகம் அவசிய மாகும். எந்தவொரு சமுதாயமும் கோணலாகிப் போன தங்களின் சமு தாயத்தை நேர்படுத்திக் கொள்ள கல்வித்துறை மிகவும் அவசியமாகும்.

ஒடுக்கப்பட்ட சமுதாயம் கல்வித்துறை யில் விழிப்புணர்வை எட்டும்போது அச்சமுதாயத்தின் ஏனைய துறைகளிலும் கட்டாயம் மறுமலர்ச்சி ஏற்படும்.

அதேவேளை பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டத்தில் மலையக அரசியல்வாதிகள் அரசியலை நுழைத்து அதனை தடைக்கற்களாக மாற்றிவிடக் கூடாது.

ஒதுக்கப்பட்ட கற்களாக இருக் கும் எமது சமுதாயம் இந்நாட்டின் மூளைக்கற்களாக வெளிச்சம் போட வேண்டும். தலைவர்களே இன்று மக்களை உருவாக்குவதாக பிரசார மேடைகளில் பேசப்படுகிறது.

எமது மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணிக்கக் கூடியவர்களாக அரசி யல்வாதிகள் மாற்றம் பெறவேண்டும்.

‘குட்டிச் சங்கங்களும், செல்லாக் காசு களும் எதைச் சாதிக்கப் போகின்றன. பதவி, வாகனம், பாதுகாப்பு ஆசை களை முதலில் எமது வேட்பாளர்கள் துறக்க வேண்டும். மக்கள் தொண்டன் என டிஜிட்டல் போஸ்டரில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வேட் பாளன் வெற்றி பெற்றதும் எதற்காக பாதுகாப்பும் தேவை என நீதிமன்றம் செல்கிaர்கள்.

முன்னர் மலையகத்தில் வாழ்ந்த எந்தவொரு தலைவனும் பங்களாவில் வாழவில்லை. தன்னை வளர்த்துவிட்ட மக்களோடு மக்களாக லயன் காம்பராக்களில்தான் வாழ்ந்தார் கள்.

இன்று மலையகத்துக்கு சத்திய, ஆரோக்கிய அரசியலே தேவை. பதவி ஆசைக்காக மக்களை பலி கொடுப்பதை எவராலும் சகித்துக் கொள்ள இயலாது.

இன்று பலர் பெருந்தோட்ட மக்களுக்காக பாடுபடு வதாக தெரிவித்து வருகின்றனர். கட்சித் தாவல் தங்களின் நலனுக்காகவே அன்றி மக்களின் நலனுக்காக அல்ல. அன்றும் இன்றும் என்றும் இ. தொ. காங்கிரஸே இலங்கையின் தேசிய அரசியலில் அடைக்க இயலாத மலையக அரசியல், தொழிற்சங்கமாக விளங்குகின்றது.

அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் 1977க்குப் பபன்னர் தனிமரமாக ஜே. ஆருடன் மல்லுக்கட்டி, பிரமேதாச வுடன் மோதி பல செயற்திட்டங்களை மலையக மக்களின் நலனுக்காக மேற் கொண்டார்.

அதன் அறுவடையாகத் தான் இன்று நுவரெலியா மாவட்ட த்தில் 159 தமிழ் வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

மறைந்த பெருந்தலைவர் செளமிய மூர்த்தி தொண்டமான் அரசியலில் கண்ட சவால்களை வேறு எவரும் இதுவரை கண்டதில்லை. அவரின் சமத்துவ கொள்கையும், சாணக்கிய முமே இன்றும் அவரை எம் மக்கள் மனதில் பேச வைக்கின்றது.

வெள்ளைக் காரன் தேயிலைச் செடியை தன் கண்களைப் போல பாதுகாத்தனர் செளமிய மூர்த்தி தொண்டமானோ தேயிலைச் செடியை நம்பி வாழும் மக்களை தன் பிள்ளைகளாக பாது காத்தார். மலையக தொழிற்சங்க வரலாற்றில் அவரின் காலம் ஒரு சவால் நிறைந்த காலமாகும்.

அவரின் மறைவுக்குப் பின்னரே மலையகத்தில் சாராயக்கடைகள் அதிகரித்தன. இன்று மலையகத்தில் சாராயக்கடைகளுக்கு மூடுவிழா நடத்த ஒவ்வொரு அரசியல்வாதியும் மக்கள் முன் உறுதி மொழிவழங்க வேண்டும்.

தொழிற்சங்க அரசியல் கலாசார மையத்திற்குள் சிக்குண்டு கடந்த ஒரு ஒதுக்கப்பட்ட சமூகத்தை, தொழிற்சங்க அரசியல் கட்டுப்பாடுகளை உடைத்து வீசி தேசிய அரசியல் களத்திற்குள் பெருந்தோட்ட மக்களை நுழைய வைத்ததும் அல்லாது தோட்ட நிர்வாகி களின் கட்டுப்பாடுகளையும் வெட்டித் தள்ளி வீசி எறிந்து மக்களை வெளியே கொண்டு வந்தவர்தான் செளமியமூர்த்தி தொண்டமான். தேசிய அரசியலே தெரியாது இருட் டுக்குள் முடங்கிப் போய்கிடந்த எமது சமுதாயத்தை அறிவொளிபாய்ச்சி இன்று தலைநிமிர வைத்ததும் இ. தொ. காங்கிரஸ்தான்.

ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதன் மூலமே நாம் மேலும் சுபீட்சம் பெற இயலும். அவரது ஆட்சியிலேயே மலையகத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மலையக இளைஞர்களுக்கு அரச வேலைவாய்ப்பு கிடைக்க வழி செய்தார். தொடர்ந்தும் அவரின் ஆட்சியை வழுப்படுத்த எமது மக்கள் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களித்து எமது ஆதரவை அவருக்கு வழங்க வேண்டும் இ.தொ.கா.

வினால் மட்டுமே மலையக மக்களின் வாழ்வை மாற்றம் பெற வைக்க இயலும். இந்திய மத்திய அரசுடனும், தமிழ்நாட்டு அரசுடனும் நெருங்கிய உறவு உள்ளவர்களுக்கு மட்டுமே மலையகத்தை செப்பனிட இயலும் என்பது கடந்த காலங்களில் நாம் கண்ட தெளிவான உண்மையாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.