புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.
மனித மிருகத்திற்கு இரையான சிறுமி

மனித மிருகத்திற்கு இரையான சிறுமி

அன்று மழை ஓய்ந்தபாடில்லை. புகையிரத தண்டவாளங்களின் இரு பக்கங்களிலும் பல வீடுகள் அதில் சில வீடுகள் நீரில் மூழ்கியிருந்தன.

அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த வெள்ளைக் கொடிகளும் அறுந்து நீரில் காணப்பட்டன. தண்டவாளத்தின் நடுப்பகுதியினூடாக ஒருவாறு சென்ற பத்திரிகையாளர்களுக்கு சிறுவனொருவன் வீட்டை காண்பித்தான்.

அவ்வீட்டுக்கு ‘சுசந்த’ அய்யாவின் வீடென்பார்கள். தண்டவாளத்தின் கீழ் பகுதியில் இச்சிறிய வீடு காணப்பட்டது. மெலிந்த உருவமுடைய சுசந்தவை காணமுடிந்தது. ‘என்னால் நினைத்துப் பார்க்க முடியல்லை என் மகளுக்கு என்ன நடந்ததென்று’ என அவர் அழுதவாறு கூறினார்.

சிறுமி நிபுனி.

கூலி வேலை செய்து வருமானத்தை தேடிக்கொள்ளும் இவருக்கு மூன்று பிள்ளைகள். மண் அகழும் தொழில் செய்யுமிவர் இந்நாட்களில் இளநீர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

மாலையில் சிறிதளவு மதுவருந்துவது வழமையாகும். கடந்த இரண்டு வாரங்களாக அவர் மது அருந்துவதில்லை எனவும் கூறினார்.

தொழில் செய்யுமிடத்தில் சுசந்தவுக்கு நண்பனானான் ‘பிரேம’. இதன் காரணமாக இவர் அடிக்கடி சுசந்தவின் வீட்டுக்கு சென்று வருவதுண்டு. பிரேமவின் வீடு மண்குவியல் பகுதியில் காணப்பட்டது.

சுசந்தவுக்கு ஒழுங்கான வேலையில்லாததால், பிரேம வேலையொன்றை ஏற்பாடு செய்து, அதனை சென்று பார்ப்பதற்கு கையடக்க தொலைபேசி மூலம் சுசந்தவுடன் தொடர்புகொண்டார். சைனீஸ் மது சாலையருகில் வருமாறு கூற சுசந்த தன் மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் அவ்விடத்துக்கு சென்றார்.

அன்று வேலைக்கு செல்லாததால் மூவரும் மதுவருந்த கடைக்குள் நுழைந்தனர். மதுவருந்திய இவர்களுக்கு வேலைக்கு செல்ல முடியாததால் வீட்டுக்குச் செல்வோமென முடிவுசெய்தனர். மதுவருந்திய செலவு பிரேமவினுடையது. இவரது மனைவி துபாய் நாட்டில் வேலை செய்கிறார்.

இவருக்கு இரண்டு பிள்ளைகள். பல நாட்களாக நீங்கள் வீடு வரவில்லை அதனால் நாம் வீட்டுக்கு செல்வோம் எனக் கூறிய பிரேம, சுசந்தவை அழைத்த அவ்விடத்தில் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தி மூவரும் முச்சக்கரவண்டியில் வீடு செல்லும் போது மூன்று மது பாட்டில்களை வாங்கிக் கொண்டனர்.

சுசந்தவின் மனைவியும் பெரிய பிள்ளையும் வீட்டிலிருந்தனர். மனைவி சமையலறையிலிருக்க மது அருந்துவது ஆரம்பமாகியது. மகனிடம் தங்கையைப் பற்றி கேட்டபோது அம்மப்பாவின் வீட்டிலிருப்பதாக கூற, பார்ப்பதற்கு ஆசையாகவுள்ளது, கண்டு சில காலமாகிறது. சுசந்தவை மகளை கொண்டுவரும்படி பிரேம கூறினார்.

தங்கையை அழைத்துவரும்படி மகனிடம் சுசந்த கூறினார். அச்சமயம் சிறிய மகள் நிபுனி பெரிய வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார்.

அவரை வீட்டுக்கு கொண்டுவந்தார் அண்ணன். சிறுமி நிபுனி வீட்டுக்குள் நுளைகையில் மாமா என்றவாறு வந்தார்.

சிறுமி நிபுனியை வாரி அணைத்து பிரேம தூக்கியதை சுசந்த கண்டார். சிறுமியிடம் நூறு ரூபாவை பிரேம கொடுக்க சிறுமி அதனை எறிந்தார். மற்றவர்கள் மதுவருந்த பிரேம சிறுமியுடன் கொஞ்சிக்கொண்டிருந்தார்.

டொபி வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை வெளியே அழைத்துச் சென்றார் பிரேம. இவர் நன்கறிந்தவராகையால் எவரும் சந்தேகப்படவில்லை. அதிக நேரமாகியும் பிரேமவும் பிள்ளையும் வீடு திரும்பாததால் அவளை தேடினர். மகளுக்கு டொபி வாங்கிக் கொடுக்க சென்றிருப்பான் என்றெண்ணினர்.

தந்தை சுசந்த.

அவரது கையடக்க தொலைபேசி கட்டிலிலிருந்தது. மூன்று மணித்தியாலங்களாகியும் பிரேமவும், பிள்ளையும் வீடு திரும்பாததால் சந்தேகம் எழுந்தது.

நிபுனி என சப்தமிட்டவாறு தந்தை சுசந்த, மகளைத் தேடி சந்திவரை சென்றார். பிரேமவின் துவிச்சக்கர வண்டி சைனிஸ் மதுசாலைக்கருகில் வைக்கப்பட்டதால் அங்கு சென்று பார்த்தபோது துவிச்சக்கரவண்டியிருந்தது.

பிரேமவை காணவில்லை. பிரேம வந்தால் துவிச்சக்கர வண்டியை கொடுக்க வேண்டாமென்றும் அவனை வைத்துக்கொள்ளுமாறும் கூறிய சுசந்த, வீடு திரும்பியும் மகளை பற்றி எவ்வித தகவலுமில்லாமலிருந்தது.

பீதியும் சஞ்சலமுமடைந்த சுசந்த பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தார். ஊர் முழுவதும் பிரேமவை தேடினர்.

தலைமையக பொலிஸ் பரிசோதகர் வீரக்கொடி மூன்று பொலிஸாரை தங்கொடுவையிலுள்ள பிரேமவின் வீட்டுக்கு அனுப்பினார். நடுநிசியாகியும் இருவரை பற்றியும் எத்தகவலும் கிடைக்கவில்லை. ஊர் மக்களனைவரும் சிறுமியைத் தேடினர். கிணறுகளையும் நோட்டமிட்டனர்.

இப்பிள்ளையை எங்கு தேடியும் கிடைக்காதது பெரும் புதுமையாயிருந்தது. ஊர் மக்கள் பிள்ளையின் தந்தை சுசந்தவை வைதனர். கவனிப்பின்றியும் மதுவில் மோகமாயிருந்ததுமே இதற்கான காரணமென ஒரு சாரார் கூறினர்.

அச்சமயம் ஒருவர் வந்து முக்கியமான செய்தியொன்றை தெரிவித்தார். பிரேமவை தேடிச் சென்ற மூவர், அவர் மதுபோதையில் கடையொன்றருகில் நித்திரை செய்வதாகக் கூற அனைவரும் அங்கு சென்று ‘என் மகளெங்கே’ என்று கேட்டபோது எனக்கு தெரியாது.

அங்குதானேயிருந்தாள் உண்மையாக அவளை நான் எடுத்துச் செல்லவில்லை’ என்றார். பலர் அவரை தாக்கினர். இருப்பினும் அவர் தனக்குத் தெரியாதென்று சத்தியம் செய்தார். இவனை பொலிஸில் ஒப்படைப்போமெனக் கூறியவர்கள் வென்னப்புவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சடலம் காணப்பட்ட இடம்

பொலிஸார் விசாரணை செய்தபோதும் தனக்கு இவை பற்றி ஒன்றும் தெரியாதென்று கூறினான். மதுபோதையில் சொன்னதை திருப்பிச் சொன்னான்.

அதிகாலையில் மீண்டும் இவன் விசாரிக்கப்பட்ட போது, பிள்ளையின் விபரம் வெளியானதாக பொலிஸ் பரிசோதகர் அசோக வீரக்கொடி தெரிவித்தார்.

இதையடுத்து புகையிரத பாதைக்கு கீழாகவுள்ள சிறிய குழியொன்றிலிருந்து சிறுமி நிபுனி கண்டெடுக்கப்பட்டார். இறந்த சிறுமியின் சடலத்தை வெளியே கொண்டுவந்தபோது, அங்கிருந்தோர் மரண ஓலமிட்டனர்.

சிறுமி நிபுனியின் முகப் பகுதி, கழுத்துப் பகுதிகளை சந்தேக நபர் பற்களினால் கடித்திருந்தார்.

‘காம ஆசை பிடித்த இவன் மிருகத்தனமாக செயல்பட்டுள்ளான். சிறுமியை பல வகையிலும் இம்சைப்படுத்தி வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

சந்தேக நபர் சிறுமி நிபுனி இறந்தபின் மானபங்கப்படுத்தியுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார். பொலிஸார் மேலும் சந்தேக நபரை விசாரணை செய்தனர். பொலிஸாரின் கெடுபிடிகளை சகிக்க முடியாத சந்தேக நபர் பிள்ளையை எடுத்துச் சென்ற விதத்தை தெரிவித்தார்.

‘மற்றவர்கள் மது அருந்திக்கொண்டிருக்கையில் சிறுமியைப் பற்றி எனக்கு ஆசை உண்டானது சர். டொபி வாங்கித் தருவதாகக் கூறி பிள்ளையை எடுத்துச் செல்லும் போது, பிள்ளை பயந்து அம்மா, மாமியென சப்தமிட்டது.

சப்தத்தை நிறுத்த வாயையையும் கழுத்தையும் நெரித்தேன் எனக் கூறிய சந்தேக நபர் மற்ற விடயங்களையும் தெரிவித்தார்.

சம்பவம் பற்றி பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் அத்தியட்சகர், வட்டாரத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சி. இ. விதிசிங்க ஆகியோரிடம் தெரிவித்து, அவர்களின் ஆலோசனைப்படி விசாரணைகளை நடத்தினார்.

பொலிஸ் அத்தியட்சகர்
சி. இ. விதிசிங்க.

பொலிஸ் பரிசோதகர் அசோக வீரக்கொடி.

தி!ஜிஸ்திரேட் விசாரணையும் இடம்பெற்றது. மாரவிலை பதில் மாஜிஸ்திரேட் காமினி அர்த்தநாயக சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வந்தார். மரண விசாரணை சிலாபம் ஆஸ்பத்திரியில் நடைபெற்றது.

ஐந்து வயதான சிறுமி நிபுனி பாலர் பாடசாலைக்கு செல்பவர். தங்கைக்கு நடந்த விபரீதத்தை புரிந்துகொள்ள முடியாத அண்ணன் தங்கைக்காக காத்திருக்கிறார்.

பெரியம்மாவுடன் பெரிய வீட்டில் தினமும் சிறுமி நிபுனியிருப்பது வழமை. தந்தை வீட்டுக்கு வந்ததும் பெரியம்மாவுடன் சிறுமி வீட்டுக்கு வருவார். இன்று அந்த பிஞ்சுமலர் வீட்டிலில்லாதது தாங்கொணா துயரமாயுள்ளதாம்.

சாதாரண இதயமுள்ள ஒருவருக்கு இவை போன்ற மிருகத்தனமான செயலை செய்ய முடியாது. சந்தேக நபரின் சூழல், கல்வித் தகைமை, குடும்ப வாழ்வு ஆகியவற்றின் தோல்வி.

அத்துடன் மதுவும் சேர்ந்துள்ளது மிருகத்தனமான செயலுக்கு வித்திட்டுள்ளது. இவை போன்ற சம்பவங்களை இதற்கு முன்னரும் நாம் அறிந்துள்ளோம், கண்டுள்ளோம்.

சந்தேக நபர் போதியளவு கல்வி பெறவில்லை. இவருடைய தந்தையின் பெயர் இருக்கு தெரியவில்லை, சமூக வாழ்வு பூஜ்யம், மனைவி வெளிநாட்டில். பிள்ளைகளின் விடயத்தில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கவனக் குறைவு இவைபோன்ற சம்பவங்களுக்கு மூலகாரணமாகும். பெரிய வீட்டிலிருந்த அப்பாவி சிறுமியை குற்றம் புரிந்தவருக்கு பலியிட்ட நிலையெனக் கூறினார் தலைமையக பொலிஸ் பரிசோதகர் அசோக வீரக்கொடி.

சந்தேக நபர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.

சிலாபத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சி. இ. விதிசிங்கவின் மேற்பார்வையில் பொலிஸ் அத்தியட்சகர் ஹரிஸ்சந்திர பண்டாரவின் பணிப்புரையின்படி வென்னப்புவை தலைமையக பொலிஸ் பரிசோதகர் அசோக வீரக்கொடி, பொலிஸ் பரிசோதகர்கள் ரன்ஜித், நிஷாந்த சுபசிங்க, உபபொலிஸ் பரிசோதகர் தினசிறி, வீரசேகர, சார்ஜன்ட் திசாநாயக்க, கான்ஸ்ட பிள்களான சன்ன, அதிகாரி ஆகியோர் விசாரணைகளுக்கு உதவினர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.