புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

கடந்த நிதியாண்டில் கொமர்'ல் வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் 4.193 பில்லியன்

கடந்த நிதியாண்டில் கொமர்'ல் வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் 4.193 பில்லியன்

கொமர்ஷல் வங்கி குழுமம், உள்நாட்டிலும் பூகோள முனைகளிலும் நிலவிய சோதனை யான காலப் பகுதி மற்றும் கடனுக்கான குறைவான கேள்வி நிலவிய போதிலும் 2009 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டில் இலாபகரத்தன்மையை நிலைநாட்டுவதில் தனக்கே உரித்தான மீள் எழுச்சியினை கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்துக்கு வெளி யிட்டுள்ள பெறுபேறுகளில் வெளிப்படுத்தியுள்ளது.

கொமர்ஷல் பாங்க் ஒப் சிலோன் அதன் துணை மற்றும் இணை நிறுவனங்கள், ஆண் டுக்கான வரிக்குப் பிந்திய இலாபமாக ரூ. 4.193 பில்லியன் மற்றும் வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 7.129 மில்லியன் என அறி வித்துள்ளதுடன் இறுதி காலாண்டில் குறிப்பாக உறுதியான செயற்பாட்டினை வங்கி வெளிப் படுத்தியுள்ளது.

ஒரு தனியார்துறை முன்னணி வங்கியான இவ் வங்கி 2009 டிசம்பர் 31 இல் முடி வடைந்த மூன்று மாதங்களுக்கு வரிக்குப் பிந் திய இலாபமாக ரூ. 1370.8 மில்லியனை பெற்றுள்ளதுடன் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 26 சதவீத வளர்ச்சியை அவதானிக்கவும் முடிகிறது.

கொமர்ஷல் வங்கியின் பங்களாதேஷ் வங்கிச் செயற்பாடுகள் ரூ. 624.6 மில்லியன் நிகர இலாபத்தை அடைந்து கொமர்ஷல் வங்கியின் கையிருப்புக்கு 14.51 சதவீதத்தை செலுத்தியுள்ளது. பங்களாதேஷ் கொமர்ஷல் வங்கிவிதிணிரிழி தர நிர்ணய முறைமையின் கீழ் ஆறாவது வருடமாக 2009 இல் முதன்மை ஸ்தானத்தில் பங்களாதேஷ் மத்திய வங்கியினால் தரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுக்கான மொத்த வருமானம் ரூ. 43.614 பில்லியனை எட்டியுள்ளது. ஏனைய வருமானத்தில் 57.9 சதவீத வளர்ச்சியின் உதவியாலும் 12.49 வீதத்தாலும் வளர்ச்சிய டைந்து ரூ. 2.9 பில்லியன் ஆகிய செலாவணி இலாபத்தினாலும் செயற்பாட்டு வருமானம் 2.44 சத வீதத்தினால் ரூ. 20.121 பில்லியனுக்கு உயர்ந்தது. மீளாய்வு காலத்தில் ஏனைய வருமானத்தின் வளர்ச்சியானது அரசாங்க பிணைகளின் பரிவர்த்தனையில் ஏற்பட்ட இலாபம், சந்தை வருவாய்கள் மற்றும் ரூ. 700 மில்லியனிலிருந்து ரூ. 1.3 பில்லியனுக்கு மீள் வசூலில் அதிகரிப்பு ஆகியவை காரணிகளாகும்.

இந்தப் பெறுபேறுகளின் அடிப்படையில் கொமர்ஷல் வங்கி பணிப்பாளர்கள் சபை இறுதி பங்கு இலாபமாக பங்கிற்கு 4 ரூபாவை அறிவித்துள்ளதுடன் ஆண்டுக்கான பங்கிற்கு மொத்த பங்கு இலாபம் 7 ரூபாவாகியுள்ளது. இக் குழுமம் ஆண்டில் ஏற்கனவே இரண்டு இடைக் கால பங்கு இலாபங்களை தலா ரூ. 1.50 ஆக வழங்கியுள்ளது.

வங்கி அதன் திறைசேரியூடாக அரசாங்கம் வழங்கிய முறிகள் (ஷிழிஷிகிs) மற்றும் அபிவி ருத்தி முறிகள் (ஷிழிளிகிs) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளது. தற்போது இந்த முதலீடு மிகப் பெரிய தனி யார்துறை பங்களிப்புகளில் ஒன்றினை வங்கி வகிக்கின்றது. இந்த முதலீடுகளிலிருந்து கிடைக் கும் வருவாய், வங்கியின் நடைமுறையிலுள்ள வரி விகிதத்தை குறைக்கவும் வங்கிக்கு உதவியுள்ளது.

1969 இல் நிறுவப்பட்ட கொமர்ஷல் வங்கி, நுகர்வோர் வங்கியியல் திறைசேரி மற்றும் பிணைகள் சந்தையில் ஆதிக்க நிலைகளுடன் இலங்கையின் முன்னணி வங்கியாகத் திகழ் கின்றது. இலங்கையில் வங்கியின் வலைய மைப்பானது 172 கணனி இணைப்பிலான கிளைகள் மற்றும் சுப்பர் மார்க்கெட் வங்கியியல் கருமபீடங் கள் அத்துடன் 355 திஹிணிகளை உள்ளடக்கியது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.