புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

மம்பட்டியான்

பிரசாந்தின் திரையுலக பயணத்தில் பிரமாண்டமான படமாக அமையும்

மம்பட்டியான்

இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு தியாகராஜன் நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற மலையூர் மம்பட்டியான் திரைப்படம் மீண்டும் அதே பெயரில் பிரசாந்த் நடிக்க மிகவும் பிரமாண்டமான முறையில் கடந்த ஒரு வருடமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

தியாகராஜன் நடித்த அதே வேடத்தில் பிரஷாந்த் நடிக்கிறார். இந்த வேடத்தில் நடிப்பதற்காகவே- பிரத்தியேகமான உடற்பயிற்சிகளையும் உணவு கட்டுப்பாடுகளோடு தன் உடம்பை முறுக்கேற்றி கட்டுமஸ்தான ஆஜானபாகுவான தோற்றத்தில் தன் உருவத்தை மாற்றியுள்ளார் பிரஷாந்த்.

தான் நடித்த படத்தில் தன் மகன் நடிக்க அதை தந்தையே தயாரித்து – இயக்குவது உலக சினிமா சரித்திரத்திலேயே இது முதன் முறையாகும்.

பிரஷாந்துக்கு நேரடியாக மீராஜாஸ்மின் மற்றும் முமைக்கான் நடிக்க இவர்களோடு வைகைப்புயல் வடிவேலு, பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாசராவ், விஜயகுமார், ரியாஸ்கான், மனோபாலா, கலைராணி, கல்லூரி ஹேமா, என்னுயிர் தோழன் ரமா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

பல புதுமுகங்களை மம்பட்டியான் படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்கிறார் தியாகராஜன். வின்னர் படத்தில் வடிவேலுவும், பிரஷாந்தும் இணைந்து நகைச்சுவையில் கலக்கியதுபோல் மம்பட்டியானில் இவர்கள் இருவரும் சேர்ந்து நகைச்சுவையில் கலக்கி எடுத்துள்ளார்கள்.

மம்பட்டியான் படத்திற்காக இதுவரை யாருமே சென்றிராத யாருமே பார்த்திராத பயங்கரமான காடுகளையும், கிடுகிடுக்க வைக்கும் பல மலைகளையும் தேர்ந்தெடுத்து படப்பிடிப்பு நடத்தி உள்ளார் தியாகராஜன்.

இயற்கை எழில் கொஞ்சும் பல அற்புதமான காட்சிகள் மம்பட்டியான் படத்தில் விசேடமாம் 75க்கு அதிகமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தி உள்ளார்கள்.

சண்டைக்காட்சிகளில் உயிரை பணயம் வைத்து பிரஷாந்த் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். சண்டை காட்சிகள் பார்ப்பவர்களை பரவசமாக்கி விடுமாம்.

சண்டை பயிற்சி ராக்கி ராஜேஷ் சுப்ரீம் சுந்தர் மற்றும் விசேட சண்டைக்காட்சிகளுக்காக ஹொலிவுட் சண்டை நிபுணர் மார்க் ஆண்ட்ரூஸை அழைத்துள்ளார்கள்.

மல்லிகா ஷெராவத் மற்றும் முமைத்கான் பிரஷாந்த்துடன் இணைந்து ஆடும் குத்தாட்டங்கள் மம்பட்டியான் படத்தில் மற்றுமொரு முக்கிய அம்சமாம். நடன பயிற்சி மும்பை மாஸ்டர் தருண்குமார், வைபவி மற்றும் தாரா ஆகியோர் அமைத்துள்ளனர்.

15 கோடி ரூபாய் செலவில் உருவாகும் மம்பட்டியான் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடைசி கட்ட வேலைகளில் இருக்கும் மம்பட்டியானை மிக விரைவில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.

தேனினும் இனிய 6 பாடல்களை இளைய தலைமுறை இசை அமைப்பாளர் தமன் ஷி. செய்துள்ளார். பாடல்களை கேட்கும் போதே குத்தாட்டம் போட வைக்கிறதாம்.

நீண்ட இடைவெளிக்குப்பின் வரும் மம்பட்டியான் பிரஷாந்துக்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பது உறுதி.

இரவு பகலாக கடினமாக உழைத்து மம்பட்டியானை தயாரித்து இயக்கி வருகிறார் தியாகராஜன். மம்பட்டியான் இமாலய வெற்றி பெறும் என்பது நிச்சயம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.