புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

கொக்காகோலா அமரபாலவுக்கு உயர் மனிதவள முகாமைத்துவ விருது

கொக்காகோலா அமரபாலவுக்கு உயர் மனிதவள முகாமைத்துவ விருது

மனிதவள முகாமைத் துறையில் ஒருவர் பெறக்கூடிய அதியுயர்ந்த கெளரவமும் பெறுமதிமிக்க விருதுமான ’’Pride of HR Profession  Award’ கொக்கா-கோலா நிறுவனத்தைச் சேர்ந்த ரோஹித்த அமரபாலவுக்கு அண்மையில் வழங்கப்பட்டது. இதனை வழங்கிய உலக சிஞிளிபேரவை இலாப நோக்கமின்றிச் செயற்படும் ஒரு சர்வதேச அமைப்பாகும். மனிதவள முகாமை மற்றும் அபிவிருத்தித் துறையில் தத்தமது நிறுவனங்களின் மேம்பாட்டிற்குக் குறிப்பிடத்தக்க சாதனைகள், சேவைகள் மற்றும் பங்களிப்பை வழங்கியவர்களை இந்த அமைப்பு பாராட்டிக் கொளரவிக்கிறது.

விருதுக்குரியவரைத் தெரிவு செய்வதற்கு உலக சிஞிளி பேரவை பின்பற்றும் நடைமுறைகள் பற்றி அமரபால கூறுகையில், பல முக்கிய திறமைகளின் அடிப்படையில் விருதுக்கான தெரிவு மேற்கொள்ளப்படுகின்றது என்றும் உபாய முறையிலான சிந்தனை, வியாபார இலக்குகள், இடர் முகாமை, அணி முறையிலான செயற்பாடு, ஆள் முகாமை, தொடர்புபடுத்தல், வாடிக்கையாளர் மீதான கவனம், சிறந்த பெறுபேறுகள் என்பனவே இந்த அளவுகோலாகும் என்றார்.

ஓர் இராணுவ மேஜராக பதவியிலிருந்து ஓய்வுபெற்ற அமரபால இரு தடவைகள் இலங்கை ஜனாதிபதியின் ரணசூர பதக்கம் பெற்றவர். மனிதவள முகாமைத்துறையில் ரோஹித்த அமரபால பல சாதனைகள் புரிந்தவர்.


அபிவிருத்தி அதிர்ஷ்டத்தின் டபிள் சான்ஸ்

அபிவிருத்தி லொத்தர் சபை 1983ம் ஆண்டு சுரண்டல் டிக்கட் என்ற பெயரில் உடனடி பரிசு லொத்தரை அறிமுகம் செய்தது. அதன் பின்னர் பல அதிர்ஷ்ட சீட்டுகளை அறிமுகம் செய்துள்ள அபிவிருத்தி லொத்தர் சபை தற்போது டபிள் சான்ஸ் என்ற புதிய இரட்டை அதிர்ஷ்ட சீட்டை விற்பனைக்கு விட்டுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதன் அடிப்படையில் சுரண்டல் டிக்கட்டின் மூலம் பல பணப் பரிசில்களை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. அதேவேளை, சீட்டிழுப்புக்கான டிக்கட்டின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட டிக்கட் சீட்டிழுப் பின் மூலம் பல பணப் பரிசில்களை வெல்ல முடியும்.

சாதாரண பரிசுகளுக்கு மேலதிகமாக இரண்டாவது முறையாகவும் பல பணப் பரிசில்களை குறைந்த பந்துகளை கொண்டு கூடுதல் வெற்றி வாய்ப்புகளை தருகின்ற ஒரு டிக்கட்டாக இதனை அறிமுகப்படுத்தலாம். இந்த வேண்டுகோளை கவனத்தில் கொண்டு இந்த டிக்கட் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பரிசு விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

உடனடி பரிசு தரும் டிக்கட்

ரூபா 20 - ரூபா 50

ரூபா 500 - ரூபா 100

ரூபா 25,000 - பரிசு தொகைகள்

இதன் போது உடனடி பரிசு கிடைக்கும் டிக்கட்டின் முதல் பகுதியை சீட்டிழுப்பு இடம்பெறும் தினம் வரை வைத்திருத்தல் வேண்டும். சீட்டிழுப்பின் மூலம் வெற்றி பெறும் டிக்கட்டாக இருக்கும் பட்சத்தில் 33 பந்துகளில் நான்கு வெற்றி இலக்கங்களும் 24 பந்துகளில் ஒரு சுப்பர் இலக்கமும் தெரிவு செய்யப்பட்டு அவை பொருந்தும் பட்சத்தில் பரிசுகள் கிடைக்கும்.

சீட்டிழுப்பிற்கான டிக்கட்டின் பரிசு விபரங்கள்

ஏதாவது மூன்று இலக்கங்கள் பொருந்தினால்

- ரூபா 500

ஏதாவது நான்கு இலக்கங்கள் பொருந்தினால்

- ரூபா 1,00,000

ஏதாவது நான்கு இலக்கங்களுடன் சுப்பர்

இலக்கமும் பொருந்தினால் - ரூபா 10,00,000

இவ்வாறு பரிசுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த சீட்டிழுப்பின் பிரதான அம்சம், ஒரு இலட்சம் ரூபா பரிசுகள் 23 மற்றும் ஒரு பத்து இலட்சம் பணப் பரிசும் வெல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாகும்.

இந்த லொத்தர் டிக்கட் விற்பனை மூலம் பெறப்படுகின்ற வருமானம் ஜனாதிபதி நிதியத்திற்கு வழங்கப்படுவதற்கான ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக் கின்ற இந்த நிதி மூலம் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான விசேட வேலைத் திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக கிராமத்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான விசேட வேலைத் திட்டங்கள், கல்வி மற்றும் சுகாதார துறைசார்ந்த செயல் திட்டங்களுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.


“பேஸ்புக்” ரசிகர்களை கெளரவித்த ஒடாரா

இலங்கையின் தனித்துவம் மிக்க தொழிலதிபர் ஒடாரா குணவர்தன தனது இரண்டு “பேஸ்புக்” ரசிகர்களைப் பாராட்டி நினைவுப் பரசில்களை வழங்கி கெளரவித்துள்ளார்.

ஒடாராவுடன் பேஸ்புக் ரசிகர்களான ஷானியா பெரேரா மற்றும் மிஹிரி திசாநாயக்க.

ஒடாராவின் முதலாவது “பேஸ்புக்” ரசிகரும், 5000மாவது ரசிகரும் அலக்ஸாண்டிரா பிளேஸில் உள்ள ஒடெல் தலைமையகத்தில் இடம்பெற்ற எளிமையான ஒரு வைபவத்தில் ஒடாராவை சந்தித்துப் பேசினர். இவர்களுக்கான பரிசளிப்பும் இங்கு இடம்பெற்றது.

“என்னைப் பொறுத்தமட்டில் பேஸ்புக் ரசிகர்கள் பக்கமானது எனது செயற்பாடுகளுக்கு ஆதரவாக இருந்து எனக்கு உற்சாகமூட்டிய ஆயிரக்கணக்கான மக்களுடன் எனது வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதற்கும், அவர்களுடன் இரண்டறக் கலப்பதற்குமான ஒரு ஊடகமாகும்” என்று குணவர்தன கூறுகிறார்.

திருமதி குணவர்தனவின் “பேஸ்புக்” ரசிகர்கள் பக்கம் 2009 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. பல்வேறு வயதுப் பிரிவினர் மத்தியில் இது மிகவும் பிரபலமடைந்துள்ளது. ஒரு தாயாக, வெற்றிகரமான ஒரு வர்த்தகப் பிரமுகராக, மனிதாபிமானக் காரியங்களை ஊக்குவிக்கும் ஒரு பெண்ணாக ஒடாராவின் வாழ்க்கை குறித்த பல்வேறு தகவல்கள் இதில் பகிரப்படுகின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.