புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

லங்கா IOC இன் மரநடுகை திட்டம்

லங்கா IOC இன் மரநடுகை திட்டம்

அடுத்த மூன்று மாத காலப்பகுதிக்குள் 1500 நிழல்தரும் மரங்களை நடும் திட்டத்தை லங்கா யிலிவி நிறுவனம் தொடங்கியுள்ளது. அதே போல் இவற்றின் பராமரிப்புக்காக பாடசாலை மாணவர்கள் இதே அளவில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் புதிய சமூக முயற்சித் திட்டத்தின்கீழ் லங்கா யிலிவிஇந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

சுற்றாடல் மற்றும் இயற்கைவள அமைச்சு வனதிணைக்களம் என்பனவற்றின் ஒத்துழைப் போடு தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத் தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை களில் இருந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேர்த் துக்கொள்ளப்படுவர். இவர்கள் இந்த மரக்கன் றுகளைப் பராமரிப்பதற்கு ஒரு கொடுப்பனவு வழங்கப்படும். முழுமையான இந்த மரங்கள் வளரும் வரை இவர்களின் இந்த சேவை பெற்றுக்கொள்ளப்படும்.

லங்கா யிலிவிநிறுவனம் இந்த திட்டத்திற்கான நிதி உதவியை வழங்குகின்றது. வன திணைக் களத்தால் வழங்கப்படும் கன்றுகளை இலங் கையில் உள்ள இந்த நிறுவனத்தின் 150 பெற் றோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு நிலையத்திற்கு 10 மரங்கள் என்ற ரீதியில் 1500 மரங்களும் விநியோகிக்கப்படும்.

முதல் கட்டமாக கொழும்பு 10 ஹேமமாலி பாலிக்கா வித்தியாலயத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. சுற்றாடல் இயற்கைவள அமைச்சர் ஷம்பிக்க ரணவக்க மற்றும் லங்கா யிலிவியின் முகாமைத்துவ பணிப்பாளர் கே. ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் பிரதம அதி திகளாக கலந்துகொண்டனர்.

இளைய தலைமுறையினர் மத்தியில் மரம் வளர்ப்பு தொடர்பான ஒரு ஆர்வத்தையும் இது தூண்டும் என்று சொல்லும் சுரேஷ்குமார் பெற்றோலிய உற்பத்திகள் சுற்றாடலுக்கு பாதக மானவை என்பதில் அக்கறை கொண்டிருப்ப தால் அதை ஈடு செய்யும் வகையில் சில மாற் றுத் திட்டங்களை முன்வைக்கலாம் என்றும் அதன்மூலம் இந்தப் பிரச்சினைத் தீர்வுக்கு பங்களிப்பும் செய்யலாம் என்றும் சுரேஷ் குமார் கூறினார்.

ஒவ்வொரு மரத்தினதும் நடுகைக்காக தெரிவு செய்யப்படும் பிள்ளையின் பெயரில் வங்கிக் கணக்கொன்று தொடங்கப்பட்டு அந்த ஒவ் வொரு கணக்கிலும் மாதம் 100 ரூபா வைப் பில் இடப்படும். இவ்வாறு கணக்கு தொடங் கப்படும் ஒவ்வொரு பிள்ளையும் ஒரு மரத் துக்கு பொறுப்பாக இருக்கவேண்டும்.

ஒவ்வொரு பிரதேசத்தினதும் மண்வளம் மற்றும் காலநிலை வித்தியாசத்திற்கு இசை வாக வெவ்வேறு மரங்களை வனத்திணைக் களம் தெரிவுசெய்யும் இந்த மரத்துக்கான பாதுகாப்புக்காக அரைப்பீப்பாய் அளவு கொண்ட பாதுகாப்பு வலயம் ஒன்றை யிலிவி வழங்கும். ஏந்தப் பாதிப்பும் இன்றி சுயமாக நிற்கின்ற நிலையை இந்த மரங்கள் அடையும் வரை இந்தப் பாதுகாப்பு வழங்கப்படும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.