புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

பிரசித்திபெற்ற கணினி காட்சித் திரை தயாரிப்பாளரை அறிமுகம் செய்திருக்கும் eSys டெக்னொலஜிஸ்

பிரசித்திபெற்ற கணினி காட்சித் திரை தயாரிப்பாளரை அறிமுகம் செய்திருக்கும் eSys டெக்னொலஜிஸ்

இலங்கையில் முன்னணி வகிக்கும் வன்பொருள் விநியோகஸ்தர்களான  eSys  டெக்னோலஜிஸ் (EZY ஹோல்டிங்ஸின் துணை நிறுவனம்) AOC சின்ன தயாரிப் பாளரான TPV  டெக்னொலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தை அண்மையில் இலங்கையில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கணினி காட்சித் திரை (Computer Monitor)  தயாரிப்பாளரான TPV  டெக்னொலஜிஸ் லிமிடெட் நிறுவனத் தின் TPV  வீட்டுப் பாவனைக்கான தயாரிப்பே AOC  ஆகும்.

TPV தாய்வானை தலைமை யகமாகக் கொண்டு 9.2 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் செயற்பட்டு வரும் பாரிய நிறுவனமாகும். இது 2009 ஆம் ஆண்டில் உலகில் 49 மில்லியனுக்கும் அதிகமான காட்சித் திரைகளை விற்பனை செய்துள்ளது. 40 மில்லியன் கணினி காட்சித் திரைகள் மற்றும் 9 மில்லியன்  LCD தொலைக்காட் சிகளை கடந்த ஆண்டு விற்று உலக சந்தையில் 28.5% இடத்தைப் பிடித்துள்ளது.

உலகளவில் OEM சந்தையில் 45 – 50% பங்கை கொண்டுள்ளதுடன் உலகளவில் கிடைக்கக் கூடிய மிகப்பெரிய சின்னங்களின் வரிசையில் இதுவும் உள்ளது.

அறிமுக விழாவில் கலந்துகொள்ள இலங்கை வந்திருந்த தாய்வான் TPV  டெக்னொலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் முகேஷ் குப்தா ‘‘LCD  கணினி காட்சித் திரை ‘LCD  தொலைக் காட்சித் திரை மற்றும் ‘LCD தொலைக் காட்சி உள்ளிட்ட முழுத் தயாரிப்புக்களையும் இலங்கையில் எமது விநியோகஸ்தர்கள் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளோம்’ என்றார்.

EZYஹோல்டிங்ஸின் தலைமை நிறை வேற்று அதிகாரியான ஷப்ராஸ் ஹம்சாடீன் பேசுகையில் ‘மொத்த காட்சித் திரை தயாரிப்புக்களையும் இலங்கையில் அறிமுகம் செய்வதன் மூலம், 2010 ஆம் ஆண்டளவில் AOC சின்னமானது இலங்கை சந்தையில் 2ஆம் இடத்தைப் பிடிக்கும். இலங்கையில் கணினி வன்பொருட்களை விற்பனை செய்வ தற்குத் தேவையான சிறந்த உட்கட்டமைப்பு, சிறப்பான சந்தைப்படுத்தல் செயற்பாடு முக் கியமாக சிறந்த விற்பனை குழுவினர் எம்மிடம் இருப்பதாக நம்புகிறோம் என்று கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.