புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

எமரல்ட் N'ர்டுகளை சலுகை விலையில் வாங்குவதற்கு...

எமரல்ட் N'ர்டுகளை சலுகை விலையில் வாங்குவதற்கு...

எதிர்வரும் புத்தாண்டை சிறப்பாகக் கொண் டாட இலங்கை வங்கி அதன் வாடிக்கையா ளர்களுக்கு எமரல்ட் நிறுவனத்துடன் இணை ந்து விசேட விலைக் கழிவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளில் 10% கழிவுக் கூப்பன் களை பெற்று அதனை எமரல்ட் முகவர்களி டம் சமர்ப்பிப்பதன் மூலம் எமரல்ட் மேற் சட்டைகளான  Emerald Corporate Shirt, Leonardo, Flax Farmer. Leger, Focuss, Mansak and Runn ஆகியவற் றிற்கான கழிவினை பெற்றுக் கொள்ள முடியும்.

“எமரல்ட் - மிகச் சிறந்த ஆடைகள் எனும் தொனிப் பொருளுக்கமைய இலங்கை வங்கியின் பிராந்திய விற்பனை முகாமைத் துவ பிரிவுகளும் எமது நாடளாவிய விற்பனை வலையமைப்பும் இந்த ஊக்குவிப்பினை வெற்றியுள்ளதாக்க மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளன” என எமரல்ட் இன்டர் நஷனல் பொது முகாமையாளர் முராத் ரஹிம்டீன் தெரிவித்தார்.

ஆடைத்துறையில் எமரல்ட் 50 வருட பெருமைக்குரிய உயர்தர நற்பெயரை கொண் டுள்ளது. எமரல்ட் இன்டர்நஷனல் நிறுவனம் தெளிவான வர்த்தக செயற்பாடுகளை கொண் டுள்ளதுடன் விorporatலீ ஷிhirts சந்தையில் 50% ஆதிக்கத்தையும் கொண்டுள்ளது.

சர்வதேச புகழ் பெற்ற வர்த்தக நாமங்கள் அனுமதி பெற்ற முகவர் எமரல்ட் இன்டர் நஷனல் உள்ளாடைகள், மேற்சட்டைகள், ரீ-சேர்ட்கள் மற்றும் காற்சட்டைகள் என்பவற் றையும் தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றது.

புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இவ் விசேடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டா லும் மேலும் மூன்று மாத காலத்திற்கு அதனை நீடிக்கச் செய்ய எண்ணியுள்ளதாக இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் பி. ஏ. எஸ். பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் 2000 ரூபாவிற்கு குறைந்த தொகையை வங்கிக் கணக்கின் வைப்பில் வைத்திருப் போர் மேலும் 1000 ரூபாவை வைப்பில் இடுவதன் மூலம் விசேட விலை கழிவுக் கூப்பனை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். மேலதிக விபரங்களை அறிய விரும்பும் வாடிக்கையாளர்கள் கிளைக் காரியாலய முகாமையாளர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.