புத் 66 இல. 33

ஜய வருடம் ஆனி மாதம் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 20

SUNDAY AUGUST 17 2014

 

 
உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள

உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள

சேவை அளிக்கும் தன்னார்வ மருத்துவர்களையும் இந்த நோய் விட்டு வைக்காத நிலை ஆபிரிக்க நாடுகள் மட்டுமன்றி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ளது உயிர்கொல்லியான எபோலோ. இந்த வைரசின் தாக்குதலால் இந்த ஆண்டில் மட்டும் கினியா, லைபீரியா மற்றும் சியர்ராலியோன் ஆகிய நாடுகளை சேர்ந்த 1232 பேர் பலியாகிவிட்டனர்.

மிகவேகமாக ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் உலகப் பேரழிவு நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரில் உலக சுகாதார அமைப்பின் இரு நாள் அவசரக் கூட்டத்தில் எபோலா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து நீண்ட நேரமாக விவாதிக்கப்பட்டது.

எபோலா வைரஸ் நோயால் சுமார் 1,500 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். அந்த நோய் பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் உலகளாவிய சுற்றுப்பயணத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நோயின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் பிற நாடுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மார்கரெட் சான் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் எபோலா வைரஸ் தொற்று நோயால் மக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சர்வதேச உதவிகள் தேவையாக உள்ளன என்றார். முன்னதாக, மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து இந்த நோய் பரவுவதை தவிர்க்க முடியாது.

மருத்துவ சேவை அளிக்கும் தன்னார்வ மருத்துவர்களையும் இந்த நோய் விட்டு வைக்காததால், அறுபத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த கொடிய நோயின் தாக்கம் எல்லை மீறிப் போய்விட்டது என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இந்த நோய் பாதித்துள்ள லைபீரியா, கயானா, சியாராலியோன் உள்ளிட்ட மேற்கு ஆபிரிக்க நாடுகளில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கயானாவில், எபோலா வைரஸ் தாக்குலால் இதுவரை 1232 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,700 க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எபோலா நோய்த் தொற்றுள்ளவர்களுக்கு கடுமையான காய்ச்சல், கட்டுக்கடங்காத ரத்தக் கசிவு போன்ற அறிகுறிகள் இருக்கும். வேக மாகப் பரவி வரும் எபோலா வைரஸ் நோயை யொட்டி சர்வதேச சுகாதார அவசரகால நிலைமையொன்றை உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவும் வகையில் உலகளாவிய உதவிகளையும் அந்த ஸ்தாபனம் கோரியுள்ளது.

எபோலா வைரஸ் தாக்கத்தால் இந்த வருடம் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அந்த உயிராபத்து விளைவிக்கக் கூடியவைரஸ் கட்டுப்பாட்டை இழந்து பரவி வருவதாக டொக்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் என்ற மருத்துவ தொண்டு ஸ்தாபனம் அறிக்கையிட்டுள்ளது.

இந் நோய் லைபீரியா, கினியா, சியரா லியோன் உள்ளடங்கலான ஆபிரிக்க நாடுகளில் பரவி வருகிறது. மேற்படி நோய்த்தொற்று காரணமாக நைஜீரியாவில் பொதுத்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட ஒரு மாத கால பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸால் 1700க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆபிரிக்காவில் பணியாற்றிய வேளை எபோலா வைரஸ் தொற்றுக்குள்ளான ஸ்பெயினைச் சேர்ந்த 75 வயது ரோமன் கத்தோலிக்க மத குருவான மிகுயல் பஜாரெஸ் சிகிச்சைக்காக தாய்நாட்டுக்கு விசேட பாதுகாப்புடன் விமானத்தில் அழைத்து வரப்பட்டுள்ளார்.

எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரது சடலத்தை தொடுவது அ

ந்த நோயை பரப்பும் அபாயம் மிகுந்தது என்பதால், அந்த நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களது சடலங்கள் வீதிகளில் கைவிடப்படுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் மேற்படி நோய்த் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான சியாராலியோனில் எபோலா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்து வமனைகளை காவல் காப்பதில் 800 படையினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

எபோலா வைரஸ் நோயைக் குணப்படுத்துவதற்கான ஆதாரபூர்வமான சிகிச்சை எதுவும் இல்லாத போதும், பரீட்சார்த்த ரீதியான மருந்துகளை மேற்கு ஆபிரிக்காவுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார்.

அத்துடன் இந்த நோய் மோசமாக பரவி வருவதையொட்டி லைபீரியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தாய் நாடு திரும்புவதற்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

ஆபிரிக்க நாடுகளில் மட்டுமன்றி உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. எபோலா வைரஸ் விலங்கிலிருந்தே மனிதர்களை தாக்கியுள்ளது. குறிப்பாக பழம் தின்னி வெளவா லிலிருந்து பரவியுள்ளது.

இவ்வைரஸ் தாக்கியுள்ள மனிதர்களிலிலிருந்து மற்ற மனிதர்களுக்கு ரத்தத்தின் மூலம் பரவுகிறது. எபோலா வைரஸ் தாக்கினால் குடும்ப உறுப்பினர்களும், சிகிச்சை அளிப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லையென்றால் அவர்களுக்கும் எளிதில் பரவும் அபாயம் உள்ளது. காங்கோ நாட்டின் எபோலா நதிக்கரையில் முதன்முதலில் பரவியதால் இதற்கு “எபோலா வைரஸ்” என பெயரிடப்பட்டது.

அறிகுறிகள்

1. காய்ச்சல், பலவீனம், தலை, தசை, தொண்டை வலி.

2. மத்திய நரம்பு மண்டலத்தை தாக்குகிறது.

3. நோய் முற்றிய நிலையில் இரத்தவாந்தி, கண், மூக்கு, வாயில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. பாதிப்பிற்கு தீர்வு காண்பது எளிதல்ல என்பதால் மேற்கு நாடுகளில் இருந்து இங்கிலாந்திற்கு வைரஸ் பாதிப்பு தொற்று பரவுவதை தடுக்க அந்நாட்டின் சுகாதார துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எபோலா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மருத்துவம் அளித்து, நோய் பாதிப்பை தடுக்கும் வகையில் அந்நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பது குறித்து உலக வங்கியின் கூட்டம் வாஷிங்டனில் நடந்தது.

இதில் 35 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு, எபோலா நோய் பாதித்த 3 மேற்கு அபிரிக்க நாடுகளுக்கு ரூ1,200 கோடி நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனை உலக வங்கி அறிவித்துள்ளது.

இனங்காணப்பட்டால் அங்கொட வைத்தியசாலைக்கு

எபோலா உயிர் கொல்லி வைரஸ் இலங்கைக்குள் நுழையாதிருக்கும் வகையில் விமான நிலையங்களில் தீவிர சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏதாவது தொற்றுக்கு இலக்கானவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் உடனடியாக அங்கொட தொற்று நோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, தீவிர கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பி. ஜி. மகிபால தெரிவித்துள்ளார்.

எபோலா வைரஸ் நமது நாட்டினுள் எந்த வகையிலும் நுழைய முடியாத வகையில் தடைசெய்யப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையத்தில் வரும் பயணிகள் பூரண சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நாட்டினுள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வைரஸ் பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த வாரத்தில் இப்பரிசோதனை வசதிகள் விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.