புத் 66 இல. 33

ஜய வருடம் ஆனி மாதம் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 20

SUNDAY AUGUST 17 2014

 

ஐ.சீ.சீ. தரப் பட்டியலில் சங்கா முதலிடம்

ஐ.சீ.சீ. தரப் பட்டியலில் சங்கா முதலிடம்

காலியில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் சிறப்பாக விளையாடி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றனர். இதன் மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 -0 என இலங்கை முன்னிலை வகிக்கிறது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இப்போட்டியில் இரட்டைச் சதம் (221) அடித்த இலங்கையின் முதல் நிலை துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ஐ.சீ.சீ. யின் டெஸ்ட் துடுப்பாட்ட தரப்படுத்தலில் முதல் இடத்திற்கு உயர்த்தப்பட்டார். முதல் இரு இடங்களில் இருந்த தென் ஆபிரிக்க வீரர்களான ஏ.பீ.டிவிலியர்ஸ் மற்றும் அஷிம் அம்லா ஆகியோர் முறையே 2ஆம், 3ஆம் இடங்களுக்கு பின்தள்ளப்பட்டனர். அத்துடன், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அன்ஜலோ மெத்தியூஸ் முதன் முதலாக டெஸ்ட் தரப்படுத்தலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் குமார் சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் உலகின் அதிக இரட்டைச் சதம் பெற்றவர்கள் வரிசையில் 2ஆம் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

உலகில் டெஸ்ட்டில் அதிகூடிய இரட்டைச் சதம் பெற்ற வீரர்கள் பட்டியல்

பெயர் நாடு இரட்டைச் சதம்
டொன் பிரட்மன் அவுஸ்திரேலியா 12
குமார் சங்கக்கார இலங்கை 10
பிரயன் லாரா மே. இந்தியா 09
வொலி ஹெமன்ட் இங்கிலாந்து 07
மஹேல ஜயவர்தன இலங்கை 07
மாவன் அத்தபத்து இலங்கை 06
விரேந்ர சேவாக் இந்தியா 06
ஜாவெட் மியான்டாட் பாகிஸ்தான் 06
ரிக்கி பொன்டிங் அவுஸ்திரேலியா 06
சச்சின் டெண்டுல்கர் இந்தியா 06

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.