புத் 66 இல. 33

ஜய வருடம் ஆனி மாதம் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 20

SUNDAY AUGUST 17 2014

 

 

அன்பு, அருளாசி, காருண்யம், பாவமன்னிப்பு, ஒற்றுமை, சமாதானம் - இவையே ஒரு மதகுருவின் கடமைகள்;

ஆயரின் செயற்பாடுகளில் அதிருப்தி

காணாமற்போனோரின் உறவுகளின் மன உணர்வுகளை மழுங்கடிப்பதாக வசனம்

கலாநிதி தங்கராசா குற்றச்சாட்டு

நாட்டில் சமாதானத்தையும் இன ஐக்கியத்தையும் விரும்பும் தமிழ் மக்கள், வடபகுதியைச் சேர்ந்த மதிப்புக்குரிய ஆயர் ஒருவரின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்துத் தமது அதிருப்தியுடன் மிகுந்த கவலையையும் வெளியிட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கலாநிதி வேல்முருகு தங்கராசா தெரிவித்துள்ளார்.

                                                            விவரம்»

மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆவணித் திருவிழா

 

வரலாற்று சிறப்புமிக்க மடு அன்னை திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலைமையில் திருப்பலி பூஜை நடைபெற்றது. கர்தினால் மல்கம் ரஞ்சித், ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ், காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க, அநுராதபுரம் மறை மாவட்ட ஆயர் நோபட் அன்ராடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

 

 

மக்களை நல்வழிப்படுத்தும்

மதகுருமார் சமாதானம் மலர பாடுபட வேண்டும்

மதகுருமார் என்பவர்கள் இறைவனின் இறைதூதர்களாக மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள். நாட்டின் இறை....

                                                            விவரம்»

எமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர்கள் வெள்ளைக்காரரே

இன்று அவர்கள் எம்மை விமர்சித்து குற்றம் சாட்டுகின்றனர்

எமது நாட்டில் மனிதப் படுகொலைகளை தொடக்கி வைத்தவர்கள் வெள்ளைக் காரர்களே. அவர்கள் இன்று அதனை விமர்சித்து எம்மைக் குற்றம் சாட்டி வருகின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தினை வலப்பனை ரூபாஹ ஸ்ரீ சித்தானந்த மகா வித்தியாலயத்தில் திறந்து வைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மனிதப் படுகொலைகளை இந்த நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்கள் மேற்குலக நாட்டினரே. அவர்கள் ஆரம்பித்த இந்தச் சரித்திரத்தை அவர்கள் மறந்து கதைக்கின்றனர். அது மாத்திரமல்ல விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த கொடூரப் படுகொலைகளைக் கற்றதும் இவர்கள் மூலம்தான்.

விவரம்»

ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லையாம்;

சாட்சியமளிக்கமறுத்து அறிக்கை சமர்ப்பிப்பு

காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் வண. இரா யப்பு ஜோசேப் ஆண்டகை மறுத்துவிட்டார். அவர் ஆணைக்குழுவிடம் அறிக்கை ஒன்றை கையளித்தார்.

                                                            விவரம்»

 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.