புத் 66 இல. 33

ஜய வருடம் ஆனி மாதம் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 20

SUNDAY AUGUST 17 2014

 

 
ஊவா மக்கள் நூற்றுக்கு இருநூறு வீத மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்

ஊவா மக்கள் நூற்றுக்கு இருநூறு வீத மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்

குறை எனக் கூறுவதற்கு எதுவுமில்லை என்கிறார் முதன்மை வேட்பாளர் ~சீந்திர

ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் என்ற வகையில் அம்மாகாணம் தொடர்பாக நீங்ள் திருப்தியடைகிaர்களா?

நான் ஊவா மாகாண முதலமைச்சர் என்ற வகையில் நூற்றுக்கு இருநூறு வீதம் திருப்தியடைகிறேன். ஆனால் இந்த கேள்வியை வேறொரு கோணத் தில் கேட்டால் அதாவது நான் ஊவா மாகாணத்துக்கு ஆற்றிய சேவைகள் பற்றி திருப்தியடைகிaர்களா என்று கேட்டால் நான் இல்லை என்றே சொல்வேன். இந்நாட்டில் நெடுங்கால மாக பின்தங்கிய நிலையிலிருக்கும் இரண்டு மாவட்டங்கள் தான் ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொன ராகலை மாவட்டங்கள். நாம் செய்ய வேண்டிய வேலைகளை ஐந்து வருடங்களில் செய்து முடிக்க முடியாது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அதற்கு செலவிட்ட பணம் தான் இப்போது நாட்டின் அபிவிருத் திக்குப் பயன்படுத்தப் படுகின்றது. பாலம், கழிவு நீர் வாய்க் கால்கள் என்பவற்றி லிருந்து தான் அபி விருத்தி வேலை களை ஆரம்பி த்து இருக்கி றோம். அத னால் நாம் செய்ததை விட இன் னும் அதிக மான வேலைகள் செய்ய இருக்கின்றோம். அதனால் நான் முழுமையாகத் திருப்திப் பட முடியாது. ஆனால் செய்திருக்கும் வேலைகள் பற்றி நூற்றுக்கு நூறு வீதம் திருப்தியடைகிறேன்.

ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் என்ற வகையில் அம்மாகாணத்துக்கு நீங்கள் செய்திருக்கும் சேவைகள் என்ன?

இந்த நாட்டில் ஏனைய மாகாணங்களுக்கு சமமான வகையில் அதையும் விட மிக வேகமான வகையில் அபிவிருத்தியை நோக்கிச் செல்லக் கூடிய அனைத்து வேலைகளையும் செய்திருக்கிறோம். அவ்வாறு செய்யும் போது பாலம், கழிவு நீர் வாய்க்கால்களை அனைத்து அரசியல்வாதிகளும் செய்வது போலன்றி கண்ணுக்குத் தெரியக் கூடியதும் கண்ணுக்குத் தெரியாதவைகளும் இருக்கின்றன. கல்வி என்று குறிப்பிடும் போது அதிகமானவர்கள் விஞ்ஞான கூடங்கள், பாடசாலைக் கட்டிடங்கள் என்பவற்றை அமைத்தால் அது தான் கல்வி என்று நினைக்கிறார்கள், அப்படியல்ல. அதைவிட அதிகமான விடயங்கள் இருக்கின்றன. நான் தனிப்பட்ட முறையில் கொழும்புடனுள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி சிசு சர, உதானய என்ற ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்தேன். எனக்குத் தெரிந்த இரண்டு மூன்று தனியார் நிறுவனங்கள் அதற்குத் தேவையான நிதி உதவிகளை வழங்குகிறார்கள். இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியும் எனக்கு உதவி செய்கின்றன.

அதேபோல் கொழும்பு பல்கலைக்கழக கலாநிதிகள் மற்றும் பேராசிரியர்களும் மற்றும் விரிவுரையாளர்களையும் அழைத்துச் சென்று எமது பாடசாலைகளில் கற்பிக்கும் விடயங்களுக்கு மேலதிகமான அறிவைப் பெற்றுக் கொடுக்கிறோம். பரீட்சையில் கேள்விகளை எவ்வாறு புரிந்து கொள்வது, அதன் பிறகு தெரிந்த விடயங்களை எவ்வாறு எழுதுவது என்பது போன்ற விடயங்கள் புகட்டப்படுகின்றன. அந்த அறிவை மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கிறோம்.

உதாரணமாக தயட கிருள என்ற நிகழ்ச்சித் திட்டம் மொனராகலையில் நடத்தியதனால் தேசிய சுதந்திர தின விழா எமது மாவட்டத்துக்குக் கிடைத்தது. தேசிய மகளிர் தினத்தை நாம் மொனராகலையில் கொண்டாடினோம். தேசிய வெசாக் பிராந்தியமாக வரலாற்றில் முதல் முறையாக நாம் மொனராகலையில் அக் கொண்டாட்டத்தை நிகழ்த்தினோம். எமது கலாசாரத்திலும் பெளத்த மதத்தினதும் விசேட இடத்தை ஊவா மாகாணம் பெற்றிருக்கின்றது. மாலிகாவில், யுதகனாவ, மஹியங்கனை, முதியங்கனை, கதிர்காமம் போன்ற சகல புனிதஸ்தலங்களும் இம் மாகாணத்தில் தான் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் என்ற வகையில் உங்கள் மாகாணத்தின் பொதுமக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிaர்களா?

ஆம். நூற்றுக்கு நூறு வீதம் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். சந்தோஷமாக இருந்தாலும் அநேக தேவைகளும் இருக்கின்றன. எனக்குத் தனிப்பட்ட வகையில் தெரிந்த ஒரு விடயம் தான் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுத்து அதை திறந்து வைக்க சென்ற போது ஆகக் குறைந்தது அவர்கள் தமது நன்றியுரையில் நன்றியைக் கூட தெரிவிக்க மாட்டார்கள். மிக வேகமாக தமது அடுத்த தேவையை தான் முன்வைக்கிறார்கள். பொதுமக்க ளுக்கு நன்றாகத் தெரியும் இது தான் பொருத்தமான காலம் என்று.

இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் எதிர்க்கட்சியினர் ஊவா மாகாணத்தின் வறுமையைப் பற்றி பேசுகிறார்கள்?

அதாவது அவர்கள் குறிப்பிட முனைவது நாங்கள் பிச்சைக்காரர்கள் என்று தானே? பொதுமக்களுக்கு தலை மைத்துவதைப் பெற்றுக் கொடுக்க முயற்சிக்கும் அரசியல்வாதிகள் ஊவா மாகாணத்தில் இருக்கும் மக்கள் பிச்சைக்காரர்கள் என்று எடுத்துக் காட்டவே முயற்சி எடுக்கிறார்கள். அதனால் தான் பெரும் சத்தத்தோடு வீரிட்டுக் கத்துகிறார்கள். எங்களுக்கு அது தெரியாமலில்லை. ஒவ்வொரு வருடத்தினதும் புள்ளிவிபரங்களையும் ஏனைய தகவல்களையும் பார்க்கும் போது எமது மாகாணத்தை பலவித மான வகைகளில் மதிப்பிடும் போதும் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடும் போதும் கீழ் மட்டத்தில் தான் இம்மக் கள் இருக்கிறார்கள். நாம் அதை எந்த விவாதாமுமின்றி ஏற்றுக் கொள்கி றோம். ஆனால் நாம் ஒரு வேலைத் திட்டத்தோடு இந்த நிலைமையை மாற்றி இக்குறைபாடுகளிலிருந்து முன்னேறிச் செல்ல வேண்டும். அதே போல் 2860 ரூபாவுக்குக் குறைவான மாதாந்த வருமானம் பெறும் மக்க ளும் எமது மாகாணத்தில் தான் இரு க்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் 2013ஆம் ஆண்டாகும் போது இந்நிலைமை 3850 ரூபாவாக உயர்ந் துள்ளது. அந்த அதிகரிப்பு நாட்டின் தலா வருமானம் அதிகரிப்பதோடு தான் ஏற்படுகின்றது.

இத்தீர்மானங்களில் காணப்படும் ஒரு விடயம் தான் காஸ் பாவிக்கிறார் களா இல்லையா என்ற விடயம். எங்களுக்கு ஏன் காஸ்? எமக்கு விறகு இருக்கிறது. காஸை வாங்கி எங்களுக்கு இன்னுமொரு செலவு எற்படுகின்றது. நாம் 42 இலிருந்து 87 வீதம் மின்சாரத்தை எமது மாகாணத்துக்கு கொடுத்திருக்கிறோம். இந்த வருட இறுதிக்குள் நாம் ஊவா மாகாணத்துக்கு 97 வீதம் மின்சாரத் தைப் பெற்றுக் கொடுப்போம். ஆனால் உட்கட்ட வசதிகள் அபிவிருத்திய டைய வேண்டுமல்லவா? இது தான் எனது விமர்சனம். எதிர்க்கட்சியிலி ருப்போர் மிகப் பெருமையாகக் கூறுகிறார்கள். ஊவா மாகாணம் தான் மிக வறுமையான மாகாணம் என்று, அதை நாம் தெரிந்து கொண்டு தான் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள் கிறோம். அதனால் ஒரேயடியாக எம க்கு அதிசயமான முறையில் வேலை களை செய்ய முடியாது. அதற்கு சில காலம் எடுக்கும். நாம் இந்த அனைத்து அபிவிருத்திளையும் ஒரு முதலீடாக எண்ணியே மேற்கொள்கிறோம். கிரா மத்தின் விவசாய உற்பத்திகளை மிக இலகுவாகச் சந்தைக்கு இப்போது கொண்டு செல்ல முடியும். இன்று அதிமலையிலிருந்து கொடியாகலை வரை பாதைகளுக்கு காபட் போட்டிருக்கிறோம்.

ஊவா மாகாண மக்களுக்கு குடி நீர் பிரச்சினை இருக்கிறது அதற்கு நீங்கள் மேற்கொண்டுள்ள தீர்வு என்ன?

எமக்கு வரலாற்றிலிருந்தே நீர் வசதிகளால் விருத்தி பெற்ற பிரதேசம் என்றே பெயர் பெற்றுள்ளோம். அதனால் தான் இங்கு ஒரு இலட்சம் வயல்கள் இருந்ததால் இப்பிரதேசம் வெல்லஸ்ஸ என்று பெயர் பெற்றது.

ஆனால் நாம் நெடுங்காலமாக இந்த நீர்த் தொகுதியை அபிவிருத்தி செய் யாமையால் நாம் அநேக சிக்கல்களுக்கு முகங் கொடுத்திருக்கிறோம்.

ஆனால் நாம் இப்போது புதிதாக ஒரு நீர்த்தொகுதியொன்றை விருத்தி செய்து கொண்டு போகிறோம். இப்போது எமது கவனம் நீங்கள் கேட்ட கேள்வியில் பொதிந்துள்ளது. குடி நீரைப் பெற்றுக் கொடுப்பதற்காக மத்திய அரசின் 2012ம் வருட வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி அவர்களால் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. அதாவது ஹாலி எலையி லிருந்து அப்புத்தனை பண்டாரவளை, மஹியங்களை, எல்ல, படல்கும்புர, மொனகராகலை, தனமல்வில, சியம்ப லாண்டுவ என்பன குடி நீர் பிரச்சினை காணப்படும் பிரதான நகரங்களாகக் காணப்படுகின்றன. இன்று அனைத்து செயற்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக்கதையை நம்பமாட்டார்கள். மொனரா கலை என்பது ஒரு பிரதான நகரம் பண்டாரவளை நகரமும் ஒரு பிரதான நகரம். மஹியங்கனையும் அப்படியே முன்னர் குடிநீரை அத்தகைய நகரங்க ளுக்குப் பெற்றுக்கொடுத்த முடியாதிருந்தது. இப்போதுதான் நாம் அதற்கான செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறோம்.

இம்முறை ஊவா மாகாணத்தின் மக்கள் அரசாங்கத்துக்கு எவ்விதமான ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிaர்கள்?

நூற்றுக்கு இருநூறு வீதம் ஒத்து ழைப்பைப் பெற்றுக் கொடுப்பார்கள் அதற்குக் காரணம் என்னவென்றால் ஊவா மாகாணத்தில் இருப்பவர்கள் தீர்மானங்கள் எடுக்கும்போது நன்றாக சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். யாரும் எதையும் சொல்லலாம். ஆனால் அவர்கள் சொல்வதை நடைமுறைப்படுத்த இவர்களால் முடியுமா? என்று மக்கள் நன்றாக சிந்தித்துப் பார்ப்பார்கள். இவர்கள் சொன்னதை இதற்கு முன் நடைமுறையில் செய்திருக் கிறார்களா? அடுத்தது இவர்கள் கூறும் இந்த வேலைகளைச் செய்ய பணம் இருக்கின்றதா? தேர்தல் காலங்களில் இருந்த முன்னாள் முதலமைச்சர் என்று என்னை ஏசுவதால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. நான் சொல்வ தெல்லாம் யாராக இருந்தாலும் பரவாயில்லை. என்னை விட நல்லதோர் அபி விருத்தித்திட்டத்தை முன்வை யுங்கள் என்றே கூறுகிறேன். என்பதே அவதூறு பேசிக் கொண்டு இருப்பதால் மக்கள் அவர்களுக்கு தமது வாக்குக ளைக் கொடுக்க மாட்டார்கள். ஊவா மாகாணத்தில் இருப்பவ ர்கள் அரசியல் ரீதியில் வங்குரோத்து ஆன மக்கள் அல்ல.

ஊவா மாகாணத்துக்கு சென்ற முறை கிடைத்த வாக்குகளைப் பாதுகாத்துக் கொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு முடியுமா?

நிச்சயமாக முடியும். உங்களுக்கு தனிப்பட்ட வகையில் கிடைத்த விருப்பு வாக்குகளை உங்களால் பாதுகாத்துக் கொள்ள முடியுமா?

எனக்கு அதை சரியாகக் கூற முடியாது. அதை நானாகச் சொல்வது தவறாகும். பொது மக்கள் அதை தேர்தல் நாளில் தீர்மானிப்பார்கள். ஐந்து வருடங்கள் செய்த சேவைகளுக்கு பிரதி உபகாரம் செய்ய மக்களுக்கு இறுதியாகக் கிடைப்பது 8 மணித்தியாலங்கள் மட்டுமே. அது காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இடும் வாக்கு தான் அது.

ஊவா மாகாணத்தில் சில அமைச்சர்களோடு நீங்கள் பிணக்குகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிaர்கள் என்று நாம் ஊடகங்களில் காண்கிறோம். இதுபற்றிய உங்கள் கருத்து என்ன?

அப்படி எவ்வித பிணக்குகளும் இல்லை. அரசியல் ரீதியில் எம்மிடையே ஒரு போட்டித்தன்மை இருக்கின்றது. போட்டித்தன்மை இருந்தால் தான் ஒரு கட்சி பலமடையும். நாம் இருவர், மூவராக மாவட்டத்தில் இருந்து கொண்டு இவ்வாறு போட்டியிடுவது, தனிப்பட்ட ரீதியில் நாம் எதையும் பெற்றுக்கொள்ள அல்ல. மக்களுக்கு சேவை செய்வதே எமது நோக்கம். ஏனென்றால் நாம் அனைவரும் வெற்றி பெற்றவர்கள் தான் இங்கு இருக்கிறோம். எனது மாவட்டத்தில் மொனராகலையிலுள்ள மூன்று அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இருந்தாலும் அவர்களோடு எனக்கு எவ்வித போட்டியுமில்லை. நான் மாகாண சபையிலேயே இருக்கிறேன். நாம் ஏற்படுகின்றது. ஆனால் அந்தப் போட்டித்தன்மையை ஒரு பிணக்காக அல்லது ஒரு சண்டையாக திரிபுபடுத்திக் காட்டுவது பெரும் அசாதாரணமாகும்.

உங்களோடு அனைவரும் நட்புடன் இருக்கிறார்களா?

அனைவரும் நட்புடனேயே இருக்கிறார்கள். போட்டித் தன்மையால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நாம் அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாகவே பணியாற்றுகிறோம். எமது கொள்கையை கிராமத்துக்கு எடுத்து செல்லவே நாம் சேவையாற்றுகிறோம். இந்த போட்டித்தன்மை அடிப்படையில் ஒவ்வொருவரும் சில சந்தர்ப்பங்களில் முன்னே அல்லது பின்னே செல்லக் கூடும்.

ஊவாமாகண சபை தேர்தல் முடிவானது எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் மக்கள் தீர்ப்பாக அமையும் என்ற விடயத்தில் உங்கள் கருத்து என்ன?

இந்தத் தேர்தலானது தீர்மானமிக்க ஒரு தேர்தலாக அமைந்தால் மிகச் சிறப்பானது. அதாவது அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலிலும் நாம் உயர் மட்டத்தில் நிச்சயமாகவே வெற்றி பெறுவோம். மிக எளிமையான ஒரு பதிலையே நான் கூறினேன். ஊவா மாகாண சபை தேர்தலைத் தீர்மானிக்கும் காரணியை அறிந்து கொள்வது நாட்டு மக்களுக்கு இலகுவானது. இந்நிலைமையைப் பார்த்து வாக்குக் கொடுக்கலாம்.

இப்போது ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினரொருவர் ஊவா மாகாண சபை முதலமைச்சருக்கான அபேட்சகராக முன்வருகிறார். அது உங்களுக்கு ஒரு சவாலாக அமையுமா?

எவ்வித சவாலும் இல்லை. கடந்த மாகாண சபை தேர்தலிலும் அவர் என்னோடு போட்டியிட்டார். பொதுவாக அவரது விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை எனது விருப்பு வாக்குளின் எண்ணிக்கையில் எட்டில் ஒரு பங்காகவே இருந்தது. சென்ற முறை என்றால் அவருக்கு விருப்பு வாக்குகள் இருக்கவில்லையென்றே நினைக்கிறேன். சரியாக எனக்குத் தெரியாது. இம்முறையென்றால் விருப்பு வாக்குகள் இல்லாமலேயே போகும் எனத்தெரிகிறது. ஹரின் பாராளுமன்றத்திலிருந்து விலகி வரக் காரணமே ஐ.தே.கட்சிக்கு ஒரு முதலமைச்சர் அபேட்சகர் இல்லாத காரணமாகும். மாகாண சபையில் இருந்த எதிர்கட்சித் தலைவரும் ஏனைய ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் பாவம். அவர்களைப் பற்றிய எவ்வித நம்பிக்கையும் இல்லை என்பதைத் தான் ஹரினை முன்வைத்து ஐ.தே.கட்சி கூற எத்தனிக்கின்றது. எமது கட்சியில் மேல் இருந்து கீழ் மட்டம் வரை எல்லா அபேட்சர்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது.

லீpபீh ணிg;கினீ; ...-

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.