புத் 66 இல. 33

ஜய வருடம் ஆனி மாதம் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 20

SUNDAY AUGUST 17 2014

 

 

ஜனாதிபதி தலைமையிலான அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் மலையகத்தில் பெரும் மாற்றம்

ஜனாதிபதி தலைமையிலான அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் மலையகத்தில் பெரும் மாற்றம்

ஊவா மாகாண சபை தேர்தலில் பதுளை மாவட்ட தமிழ் மக்களின் ஆதரவு எப்படியிருக்கிறது?

நடந்து முடிந்த மாகாணசபை தேர்தல்களில் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அரசாங்கம் அமோக வெற்றியீட்டிருக்கின்றது. மேல், தென் மாகாணசபை தேர்தலில் வாக்கு வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் ஆளும் தரப்பு அறுதிப் பெறும்பான்மை ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்துள்ளது. ஊவா மாகாணத்தில் பதுளை மற்றும் மொனராகாலை மாவட்டங் களில் அமோக வெற்றி பெறும். மகிந்த சிந் தனை வேலைத்திட்டம் கிராமங்களைப் போலவே பெருந்தோட்டங்களில் உட்கட் டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு அர சாங்கம் மீது நம்பிக்கையுண்டாகியுள்ளது அதனால் கடந்த காலங்களை விட தோட்டப் பகுதி தமிழ்பேசும் மக்கள் அரசாங்கத் திற்கு அமோக ஆதரவை வழங்கி வெற்றியடையச் செய்வார்கள்.

ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளராக பணியாற்றி வரும் நீங்கள் பெருந்தோட்டத் துறைக்கு ஆற்றிய சேவைகள் பற்றி கூறுவீர்களா?

நான் பிரதி சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றதன் பின்னர் மலையகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட சுகாதார சேவை எனது விடா முயற்சி யினால் 51 வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டு மீள் நிர்மாணிக் கப்பட்டது.

மீள் நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலை களுக்கு ணிகிகிஷி வைத்தியர்கள் பயிற்றப் பட்ட மலையகத்தைக் சேர்ந்த குடும்ப நல உத்தியோகத்தர்கள் மருந்து கலவையாளர் களை நியமித்து, தேவையான அம்பியூ லன்ஸ் வாகனங்கள் வழங்கியுள்ளதுடன் முழுமையான அரச வைத்தியசாலையாகவும் மாற்றப்பட்டது.

மக்களுக்காக சேவையாற்றுவதற்கு பதவி பட்டம் தேவையில்லை. நான் பதவியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்தும் மக்களுக் காக சேவை செய்துகொண்டுதான் இருக் கின்றேன். ஆளும் கட்சியின் பசறை மாவட்ட பிரதான அமைப்பாளராகவும் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரா கவும் 3 1/2 வருடங்காலமாக கடமையாற்றி வருகின்றேன். இக்காலகட்டத்தில் பெருந் தோட்ட மக்களுக்கு அளப்பரிய சேவை களை செய்திருக்கிறேன்.

பெருந்தோட்டத்துறை இளைஞர் யுவதி களின் நன்மை கருதி அரசாங்கம் எவ்வா றான வேலைத்திட்டங்களை முன்னெ டுத்து வருகின்றது.?

பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஆட்சிக் காலத்தில் கிராம சேவகர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், ஆசிரிய நிய மனம், அரசாங்க திணைக்களத்திற்கும் அமைச்சுக்களுக்கும் போட்டிப் பரீட்சையி னூடாக உத்தியோகர்த்தகள் உள்வாங்கப் பட்டனர். 3179 ஆசிரிய நியமனங்கள், பட்டதாரி ஆசிரிய நியமனங்கள், சுகாதார சேவையாளர்கள், சிற்றூழியர்கள், தாதிமார், தபால்சேவை ஊழியர்கள் என அரச துறைகளில் உள்வாங்கப்பட்டனர். பெருந் தோட்டத்துறை சார்ந்த 160 யுவதிகளுக்கு தமிழ்மொழி மூலம் தாதியர் பயிற்சி வழங்கப்பட்டது. அது மட்டுமன்றி கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன 3000 ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இவ்வரசாங்கத்திலே கூடுதலான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

பதுளை மாவட்டத்தில் எவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக் கப்படுகிறது?

மலையகத்தில் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட சுகாதாரசேவை நான் பிரதி சுகா தார அமைச்சராக பொறுப்பேற்றதன் பின்னர் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. எனது விடா முயற்சியினால் தோட்ட வைத் தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப் பட்டு 225 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டன.

இந்த வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களையும் பயிற்று வித்த மலையகத்தைச் சேர்ந்த குடும்ப நல உத்தியோகத்தர்கள், மருந்து கலவை யாளர்களையும் நியமித்து கணிசமான அளவு அம்பியூலன்ஸ் வாகனம் வழங்கி முழுமையான அரச வைத்தியசாலையாக மாற்றப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை ஒரு நான் சம்பளம் எனது வேண்டு கோளுக்கிணங்க ஜனாதிபதி பதுளைக்கு வந்தபோது முப்பது ரூபாவாக அதிகரிக்கப் பட்டது. மலையக வைத்தியசாலைகளுக்கு வர்த்தமானி மூலம் ஆட்சேர்ப்பு நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டமை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

எனது வேண்டுகோளுக்கிணங்க கமநெகும, கெமிதிரிய ஆகிய வேலைத்திட்டங்கள் மலையக தோட்டப்புறங்களுக்கு கொண்டு வரப்பட்டு அதன் அடிப்படையில் தோட் டப்புற பாதைகள் செப்பனிடப்பட்டு பாலங் கள் அமைத்து பாதைகள் சீரமைக்கப் பட்டன.

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு 625 மில்லியன் ரூபா செலவில் மலசலகூடங்கள் மற்றும் புதிய கட்டட தொகுதிகள் எனது தலைமையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டன.

தரம் 1 தொடக்கம் 5 வரையிலான மிகவும் பின் தங்கிய நிலையில் இருக் கும் அனைத்து பாடசாலைகளுக்கும் போஷாக்கு உணவு வழங்கப்பட்டது.

பதுளை மாவட்ட பாடசாலைகளுக்கு பல லட்சம் ரூபா பெறுமதியான கணனி தொழில்நுட்ப தொகுதி பகிர்ந்தளிக்கப் பட்டது. மலையகத்தில் 3179 ஆசிரியர் நியமனம் மற்றும் 600 முஸ்லிம் ஆசிரியர் நியமனங்கள் எனது வேண்டுகோளுக் கினங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமனம் வழங்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பதுளை மாவட்ட அபிவிருத்திக்கென 550 மில்லியன் ரூபாவை யும் பசறை தேர்தல் தொகுதி அபிவிருத் திக்காக 2200 கோடி ரூபாவையும் ஒதுக்கி யுள்ளார். அதனூடாக பதுளை, ஹாலி-எல, பண்டாரவளை, வெலிமடை, அப்புத்தளை, ஊவா பரணகம போன்ற பிரதேசங்களில் பல அபிவிருத்தி பணிகளை மேற் கொண்டுள்ளேன். பசறை, மடுல்சீமை, லுணு கலை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய 360 வீதிகள் புதிதாக செப்பனிடப்பட் டுள்ளன. மற்றும் குடிநீர் பாடசாலை கட்டிட வசதி, குடியிருப்புகளை பழுதுபார்தல், கலாசார மண்டபங்கள் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. குண்டும் குழியுமாக காணப் பட்ட றோபேரி குருவிகலை பாதை ரூபா 4.5 கோடி செலவில் கார்பட் போடப் பட்டது. பசறை தொகுதியில் நான்கு பாடசாலைகள் மகிந்தோதய ஆயிரம் பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் எனது விடா முயற்சியினாலேயே பது/பசறை தமிழ் தேசிய பாடசாலை, பது/ லுணுகலை ஸ்ரீ இராமகிருஷ்ணா தமிழ் வித்தியாலயம், பது/ கோணகலை தமிழ் வித்தியாலயம், பது/ மடுல்சீமை தமிழ் வித்தியாலயம் உள்வாங்கப்படடன. இவற்றிக்கு மஹிந்த தோதய விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் தொழிற்நுட்ப கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

ஊவா மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படும் பட்சத்தில் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உத்தியேசித்துள்Zர்கள்?

தோட்டத் தொழிலாளர்கள் படித்த சமூகமாக மாறி வருகின்ற போதும் இலகுவில் பல்வேறு தரப்பினரால் ஏமாற்றப்படுகின்றனர். இந்நிலை மாற வேண்டுமானால் கல்வியில் புரட்சி ஏற்பட வேண்டும். கல்வியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பசறை தொகுதியில் நான்கு தமிழ் பாடசாலை கள் மஹிந்தோதய ஆயிரம் பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட மலை யக பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்து பதுளை மாவட் டத்தில் ஆசிரியர் கல்வியற் கல்லூரிகளை நிறுவி உயர்கல்வியை பெறுவதில் குறிப்பாக விஞ்ஞானம் கணித பிரிவுகளில் கல்வி கற்பதற்கு ஆசிரிய மற்றும் பெளதீக வளத்துடன் பாடசாலை களை மேம்படுத்தி மலையகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டிருக் கின்றேன்.

மேலும் அறநெறி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேட சலுகைகளை ஏற்படுத்தல், சிறுவர் பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல், மின்சாரம் குடிநீர் வசதியில்லாத இடங்களுக்கு மின்சாரம் குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல், இளைஞர் யுவதிகளுக்கு தொழில்களைப் பெற்றுக்கொடுத்தல் பெருந்தோட்ட பகுதி களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகளை மேம்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக் கவுள்ளேன். தொழிலாளர்கள் தொழில் ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் புறக்கணிப்புகள் ஏமாற்று வேலைகள் இதற்கெல்லாம் முடிவுகிட்டும் வகையில் செயற்படுவேன். தோட்டப்பகுதியின் தேவையறிந்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பேன்.

மக்கள் ஆதரவு எப்படி இருக்கின்றது?

பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்க் கைத் தரம் உயரும் வகையில் கிராமங் களைப் போலவே தோட்டங்களையும் சமமாக கணித்து அபிவிருத்திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் மூலம் மலையகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டி ருக்கிறது. அந்த மாற்றத்தை மக்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக இருப்பதனால் பெரும்பான்மை சமூகத்தின ரோடும் எமது சமூகத்தினரோடும் நெருங் கிய உறவை பேணி வருகின்றேன். அரசாங்கத்தின் கமநெகும திவிநெகும மற்றும் இதர அபிவிருத்தி திட்டங் களையும் மக்கள் தேவையறிந்து செய்துகொண்டிருக்கிறோம். இது தவிர ஹாலி-எல ஊவா பரணகம அப்புத்தளை பண்டாரவளை, பதுளை, வெலிமடை பகுதிகளில் தோட்ட மக்களின் தொழில் ரீதியான மற்றும் இன ரீதியான பிரச்சினை களில் நேரடியாக களமிறங்கி அவர் களுக்காக குரல் கொடுத்து நியாயத்தை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

2010ம் ஆண்டு நடந்து முடிந்த பாராளு மன்ற தேர்தலிலே 28775 வாக்குகளைப் பெற்ற தமிழ்ப் பிரதிநிதியாக சாதனை படைத்துள்ளேன். நான் செய்த சேவைக்கு பிரதியுபகாரமாக இத்தேர்தலில் தமிழ் பிரதிநிதியாக என்னையும் வெற்றியடைய செய்வார்கள் என உறுதியாக நம்புகின்றேன்.

பதுளை மாவட்டத்தில் மூன்று ஆசனங் களை குறைக்கப்பட்டமை சிறுபான்மை சமூகத்திற்கு பாதிப்பாக அமையுமா?

ஊவா மாகாண சபை தேர்தல் நடை பெறவிருக்கும் இத்தருணத்தில் பதுளை மாவட்ட வாக்காளர் எண்ணிக்கைக்கேற்ப தேர்தல் திணைக்களம் மூன்று ஆசனங்கள் மொனராகலை மாவட்டத்திற்கு வழங்கப் பட்டுள்ளமயானது தமிழ் பேசும் மக்களின் பிரநிதித்துவத்தை ஊவா மாகாண சபையில் குறைவடையச் செய்யும். பிரதான கட்சிகளி லும் இம்முறை பல தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதே போன்று பெரும்பான்மை சமூக வேட்பாளர்களும் தோட்ட பகுதிகளை இலக்கு வைத்து தமது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மக்கள் இத்தேர்லில் சிந்தித்து வாக்க ளிக்காவிட்டால் நாம் இத்தேர்தலில் எமது பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதில் பாரிய பின்னடைவை சந்திக்க வேண்டி வரும். தேர்தல் காலங்களில் எமது செயற்பாடுகள் சுமுகமாக அமைந்தால் மட்டுமே நாம் தமிழ் மக்களின் மனங்களை வென்று அதிகப்படியான உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள முடியும். பதுளை மாவட்டத்தில் எமது ஒற்றுமையான செயற்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன் மூலம் இவ்வெற்றியை நாம் அடைந்துகொள்ள முடியும்.

தேர்தலின் போது நானோ எனது வெற்றிக்கான தேர்தல் பிரசார நடவடிக்கை களில் ஈடுபடும் ஆதரவாளர்களோ மலையக அரசியல் தொழிற்சங்க தலைவர்களுக் கெதிராக விமர்சனங்களை முன்வைத்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என தெளிவான தீர்மானத்தை எடுத்துள் ளோம். மஹிந்த சிந்தனையூடாக தோட்டப் புறங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேலும் வலுவடையச் செய்ய எமக்கு தமிழ் பிரநிதித்துவம் அவசியமாகின்றது.

அத்தோடு எனது தொகுதியான பசறையில் வாழும் தமிழ் மக்களின் தேவைகளை இன்னும் சிறப்பாக நிறைவேற்ற பசறை தொகுதியின் உறுப்பினர் தெரிவை உறுதிப் படுத்த வேண்டும்.

எனவே மாகாணசபைத் தேர்தலிலே ஊவாவிலிருந்து வெளி மாவட்டங்களில் தொழில்புரியும் அனைவரும் தமது வாக்குரிமையை தவறாது பயன்படுத்தி அதிகப்படியான தமிழ் பிரதிநிதித்து வத்தை தக்கவைக்க கூடிய வகையில் செயற்படுவதாக தீர்மானம் மேற்கொண்டால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க திட்டமிட்டுள்Zர்கள்?

மலையக சமூகத்திலே பிறந்து தேயிலை காற்றையே சுவாசித்து இம்மண்ணிலே வளர்ந்த எனக்கு எம்மவர்களின் பிரச்சினை களை நன்றாக விளங்கிக் கொள்ள முடியும். சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம் இறுதிக்கட்ட பிரச்சாரம் வரை மிகவும் சுமூகமாக வன்முறை மோதல்கள் அற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.

பதுளை மாவட்டத்தில் மூன்று ஆசனங் கள் குறைக்கப்பட்டுள்ளன. இது சிறு பான்மை பிரநிதித்துவத்திற்கு பாதிப்பாக அமையும் இந்நேரத்தில் மதிநுட்பமாக செயற்படாவிட்டால் எமது எதிர்காலம் தான் சூனியமாகும்.

ஊவா மாகாண சபை தேர்தல் ஊடாக மக்களுக்கு தெரிவிக்கும் செய்தி என்ன?

ஊவா மாகாணத்தில் ஆளுங்கட்சியின் அமைப்பாளராக ஒரே தமிழ் அமைப்பாளர் நான் மட்டுமே இருக்கிறேன்.. பசறை தொகுதியின் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராகவும் ஜனாதிபதியின் இணைப்பு செயலாளராகவும் இருப்பதனால் ஜனாதிபதியுடனும் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடனும் பதுளை மாவட்ட ஆளுங்கட்சியின் அமைப்பாளர் அமைச் சர் நிமால் சிறிபால டி சில்வாவுடனும் நெருக்கமான தொடர்பினை பேணி பெருந் தோட்ட மக்களுக்கு அதிகமான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடிந்துள்ளது.

இத்தேர்தலானது மக்களின் பலப்பரீட்சை யாகவே இருக்கின்றது. நாட்டின் தற்போதைய நிலமையையும் தேவையையும் உணர்ந்து ஆளுங்கட்சிக்கு பெருவாரியான ஆதரவை பெருந்தோட்ட மக்கள் வழங்க வேண்டும். சுயநல அரசியலிலிருந்து விடுபட்டு சமூக அரசியல் பயணத்திற்கு அவர்கள் வரவேண்டும் அதற்கு அவர்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்படவேண்டும். அனைவரும் வாக்குகளின் பெறுமதியை உணர்ந்து எமக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.