புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 

பொகவந்தலாவை சென் மேரிஸ் மத்திய கல்லூரியிலிருந்து 52 மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி

பொகவந்தலாவை சென் மேரிஸ் மத்திய கல்லூரியிலிருந்து 52 மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவை சென். மேரிஸ் மத்திய கல்லூரியில் இருந்து தோற்றிய மாணவர்களில் 55.91 வீதமானோர் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் டி. பி. தனபாலன் தெரிவித்தார்.

இக்கல்லூரியில் இருந்து க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு தோற்றிய 93 மாணவர்களில் 52 மாணவரகக்ள் உயர்தரம் கற்பதற்கு தகுதியடைந்துள்ளதுடன் 13 மாணவர்கள் ஏனைய பாடங்களில் சிறந்த சித்திகளை பெற்று கணித பாடத்தில் மட்டும் சித்தியடைய தவறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ரோமன் கத்தோலிக்கம், கிறிஸ்தவம், இஸ்லாம், புவியியல் ஆகிய பாடங்களில் 100 வீத சிந்திகளை மாணவர்கள் பதிவு செய்துள்ளதுடன் ஆங்கிலம் தவிர்ந்த அனைத்து பாடங்ளிலும் 50 வீதத்திற்கும் அதிகமான சித்தியை பதிவு செய்துள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்களில் கலாநிதி நிருஜா என்ற மாணவி 9ஏ, சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர 8 ‘ஏ’ சித்தி களை 3 மாணவர்களும் 7 ‘ஏ ‘சித்திகளை ஒரு மாணவரும், 6 ‘ஏ’ சித்திகளை 3 மாணவர்களும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும், பரீட்சை பெறுபேறுகள் சிறப்பாக அமைய உழைத்த ஆசிரியர்களை தாம் பாராட்டுவதுடன் சித்தியடைந்த மாணவர் களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் இன்னும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்வதற்கான வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் சித்தியடையும் மாணவர்களின் தொகை அதிகரிக்கும் எனவும் அதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.