புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 

தமிழ்க் கல்வியில் அக்கறை செலுத்தும் செந்தில் தொண்டமான்

தமிழ்க் கல்வியில் அக்கறை செலுத்தும் செந்தில் தொண்டமான்

ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு தமிழ் பிரதிநிதிகளிடம் இல்லாத போதிலும், மாகாணத்தின் பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கும், கல்வி மேம்பாடுகளுக்கும், மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆக்கபூர்வ வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்.

ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் அமைச்சு பணியகத்தில், கடந்த 22 ஆம் திகதியன்று நடைபெற்ற பதுளை மாவட்ட பெருந்தோட்டப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் அடங்கிய கூட்டத்தின் போது, மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி தொடர்பான வேலைத் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்ட போதே மேற்கொண்ட விடயம் தெரியவந்தது.

மேலும், ஐம்பது பெருந்தோட்டப் பாடசாலை களின் விளையாட்டு மைதான புனரமைப்பிற்கு இருநூறு இலட்ச ரூபாவை மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஒதுக்கியுள்ளார். மாகாணத்தில் அபிவிருத்திக்கு உள்ளடக்கப் படாதிருக்கும் இருபது பெருந்தோட்டப் பாடசா லைகளின் அபிவிருத்திக்கென நூறு இலட்ச ரூபா நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்தில் தமிழ் மாணவிகளுக்கென இருக்கும் ஒரே பாடசாலை, பதுளை தமிழ் மகளிர் மகா வித்தி யாலயமாகும். எண்பது வருட காலமாக இவ்வித்தியால யத்தின் மாணவிகள் பாதுகாப்பு உட்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். இவ் விடயம் தொடர்பாக மாகாண அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. எண்பது வருட காலமாக பெருங் குறைபாடாக இருந்த இவ்வித்தியாலத்தில் சுற்றுமதிலை அமைப்பதற்கு துரித நடவடிக்கை யினை மேற்கொண்டதன் பயனாக மாணவிகள் கற்பதற்கு பாதுகாப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

ஊவா மாகாண கல்வி அமைச்சு பொறுப்புக்கள் தமக்கு இல்லாத போதிலும், மாகாணத்தின் தமிழ் கல்வி அபிவிருத்திக்கென கூடிய அக்கறை செலுத்தி செயல்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு ஒதுக்கப்பட்ட பெருமளவு நிதி தமிழ் கல்வி அபிவிருத்திக்கே செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.