புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 

பக்தி மயமான வெசாக் தினக் கொண்டாட்டத்தில் முதன்மை பிஸ்கட் தயாரிப்பாளர்கள்

பக்தி மயமான வெசாக் தினக் கொண்டாட்டத்தில் முதன்மை பிஸ்கட் தயாரிப்பாளர்கள்

இலங்கையில் உணர்வுபு+ர்வமாகக் கொண ;டாடப்படும் பௌத்த மத நிகழ்வான வெசாக் தினத்தை சிறப்பான முறையில் கொண்டாடுவ தற்கு நாட்டின் முன்னோடி பிஸ்கட் தயாரி ப்பாளர்களான மலிபன் தன்னுடைய சிறந்த பங்களிப்பை இந்த வருடம் வழங்கியிருந்தது. இளவரசர் சித்தார்த்தனின் பிறப்பு,

பரிநிர்வாணம் மற்றும் கௌதம புத்தராக அவரின் இறப்பு ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றது புனித வெசாக் பு+ரணை தினத்திலாகும்.

இந்நாட்டின் சமூகப் பொறுப்புணர்வுடைய நிறுவனம் என்ற வகையில் இந்த வருடத்தின் வெசாக் கொண்டாட்டத்தையொட்டி மூன்று செயற்திட்டங்களுக்கு மலிபன் அனுசரணை வழங்கியிருந்தது.

தனசிறி அமரதுங்க நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பு+ஜh வெசாக் வலய த்தை ஒளியு+ட்டும் திட்டம், ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரணையுடன் அனைத்து இலங்கை பௌத்த காங்கிரஸ், கங்காராம விகாரை ஆகியவற்றின் ஏற்பாட்டில் முறையே கொழும்பு பௌத்தாலோக மற்றும் கங்காராம விகாரை பகுதிகளை ஒளியு+ட்டும் திட்டங்கள் ஆகியன இதிலடங்கின. 'நாட்டின் முதன்மை உற்பத்தியாளர் என்ற வகையில் மலிபனின் பிரதான நெறிமுறைகளில் ஒன்று தன்னுடைய சமூகத்திற்கு உச்சபட்ச சேவையை வழங்கு வதாகும். நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது முதல் எண்ணற்ற பல சமூக சேவைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். எந்த வகையான திட்டமாயினும் மக்களுக்கு மிகச் சிறந்ததை வழங்குவதற்காக எம்முடைய தரச்சிறப்பு வாய்ந்த கோட்பாடுகளைப் பின்பற்றுகின் றோம்" எனக் கூறினார் மலிபன் குழுவின் மனிதவளம் மற்றும் நிர்வாகப் பொது முகாமையாளரான பந்துல பெரேரா. வெசாக் தினத்தைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள நிகழ்வுகள் பற்றிக் கூறுகையில் எதிர்வரும் பெரஹர காலத்தில் கதிர்காமத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்காக 3,000 உணவுப் பொதிகள் வழங்கும் உன்னத திட்டத்தையும் மலிபன் மேற்கொள்ளவுள்ளதுடன் எதிர்வரும் பொசொன் தினத்தின்போது மிகிந்தலையில் மலிபன் ஏற்பாடு செய்யவுள்ள பிஸ்கட் தன்சலவுக்கு மேலதிகமாக அநுராதபுரத்தில் கூடும் பக்தர் களுக்காக 3,000 மதிய உணவுப் பார்சல் வழங்கும் திட்டத்தையும் மலிபன் மேற்கொண்டது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.