புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 

தோட்டப் பகுதிகளில் மாடி வீட்டுத் திட்டத்திற்கு பதிலாக தனித்தனி வீடுகள்

தோட்டப் பகுதிகளில் மாடி வீட்டுத் திட்டத்திற்கு பதிலாக தனித்தனி வீடுகள்

பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை

பெருந்தோட்ட மக்களின் குடியிருப்பு பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டுள்ள 50 ஆயிரம் வீட்டுத்திட்ட யோசனைக்கு, பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு, ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் ஏ. பி. கணபதிப்பிள்ளை தலைமையில் நுவரெலியா கூட்டுறவு விடுதியில் நடைபெற்ற கூட்டத்தின் போது, பெருந்தோட்டத்துறை மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தோட்டங்களின் உள்ளக திருப்திகரமற்ற விடயங்கள் தொடர்பாகவும், ஜனாதிபதியின் சவனத்திற்கு கொண்டு வரவும், தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் முன்வைக்கப்பட்ட விடயங்களை நிவர்த்தி செய்வதற்கு, ஜனாதிபதியிடம் அழுத்தம் கொடுக்கவும், கூட்டமைப்பு ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் எஸ். இராமநாதன் ஜனாதிபதிக்குஅவசரக் கடித மொன்றினை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கென முன்வைக்கப்பட்ட மாடி வீட்டுத்திட்டம் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அது போன்ற மாடி வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் தொழிலாளர்கள், பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். ஆகையினால், மாடி வீட்டுத்திட்டத்திற்கு மாற்aடாக தொழிலாளர் குடும்ப மொன்றுக்கு தலா பத்து பேர்ச் விஸ்தீரணமுள்ள காணித்துண்டுகளை வழங்கி, அவற்றில் தனி வீடுகளை நிர்மானித்துக் கொடுக்க வேண்டும்.

தோட்டப் பகுதிகளில் 1994ம் ஆண்டு முதல் ஆரம்பமான வீடமைப்புத்திட்டங்களின் கீழ், வங்கிகளில் கடன் பெற்று வீடுகளை நிர்மானித்துக் கொண்டதுடன், பெற்ற கடன்களை செலுத்திய தொழிலாளர்களுக்கு, குறிப்பிட்ட வீடுகளின் உறுதிகளை வழங்க, ஆவன செய்யப்படல் வேண்டும்.

கம்பனி நிருவாகத்தினாலும், தனியாரினா லும் பெருமளவில் தோட்டங்கள் நிருவகிக்கப்படுகின்றன. ஏனைய பெருந்தோட்டங்கள் அரச பெருந்தோட்ட யாக்கம், ஜனவசம, எல்கடுவ நிறுவனம் ஆகிய அரச நிறுவனங்களினால் நிருவகிக்கப்படு கின்றன. இவ் அரச நிறுவனங்களின் நிருவாகம் திருப்தியற்றதாகவே காணப்படு கின்றது. பெருந்தோட்டங்கள் கிரமமாகவும், முறையாகவும் பராமரிக்கப்படுவதில்லை.

இத்தோட்டங்கள் காடுகளாக காட்சிய ளிக்கின்றன. வருமானம் பெரும் பின்னடைவில் காணப்படுகின்றது. இத்தோட்டங்களில் அம்புலன்ஸ் வசதிகள் இல்லாமையினால், நோயாளர்கள் மற்றும் கர்ப்பினிகள் தோட்ட டிரக்டர்களிலும், தனியார் ஆட்டோக்களிலும், மருத்துவ மனைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

அத்துடன், தோட்டத்தில் கடமையாற்றும் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் முறையா கவும், கிரமமாகவும் சம்பளம் வழங்கப்படு வதில்லை. தொழிலாளர்களின் சம்பளத்தில் கழிக்கப்படும் தொழிற்சங்க சந்தாப்பணமும் தொழிற்சங்கங்களுக்கு செலுத்தப்படுவ தில்லை. இதனால், தொழிற்சங்க செயல்பாடு களும் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இது போன்று, தொழிலாளர் களின் சம்பளத்தில் கழிக்கப்படும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி போன்ற சட்டபூர்வ கொடுப்பனவுகளும் வங்கி களுக்கு செலுத்தப்படாத நிலையும் இருந்து வருகின்றது.

இதே நிலை ஓய்வூதிய கொடுப்பன விலும் இழுபறி தொடர்ந்த வண்ணமுள்ளது. இத்தகைய விடயங்கள் தொடர்பாக, தங்களின் மேலான கவனத்தை செலுத்தி, ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இக்கடிதத்தின் பிரதிகள் அமைச்சர்களான திஸ்ஸ விதாரண, டி. ஈ. டபிள்யு. குணசேகர, மகிந்தானந்த அலுத்கமகே, சி.பி. ரட்ணயக்க, டிலான் பெரேரா, வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.