புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 

வாலிப கலைஞர் வாலி

வாலிப கலைஞர் வாலி

எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்றைய இளம் நடிகர் வரை பல ஆயிரம் பாடல்களை எழுதிக் குவித்த பிரபல கவிஞர் வாலி இன்று இல்லை. இவருக்கு வயது 82. வாழ் த்து ப்பா பாடுவதில் மிகவும் நுண் ணிய வார் த்தைக ளை பிர யோகிப் பது இவ ருக்கு கைவந்த கலை, தமிழக அரசில் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்த இவர் மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’ விருதும் பெற்றுள்ளார். நேரத்திற்கு ஏற்றால்போல் நினைத்த உடன் கவிதைகளைக் கொட்டிப் போடும் திறன் படைத்தவர் வாலி.

இவர் எழுதிய பாடல்களில் சரித்திரத்தில் மறையாத பாடல் கள் ஆயிரம் உண்டு. புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, வெள்ளிக் கிண்ணம் தான் தங்கக் கைகளில், கண் போன போக்கிலே கால் போகலாமா, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே போன்ற பல்லாயிரம் பாடல்களை இவர் எழுதியுள்ளார். கடந்த மாதம் 14 ஆம் திகதி நுரை யீரல் தொற்றுக் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப் பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை இயற்கை எய்தினார். திருச்சி மாவட் டம் ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலியின் பெயர் ரங்கராஜன். இவரது தத்துவ வார்த்தைகள் கொண்ட பாடல்கள் எம்.ஜி.ஆரை மக்களிடம் பிரபலப்படுத்தப் பெரிதும் உதவியாகவிருந்தது. தமிழ் சினிமா உலகில் வாலிப கவிஞர் என அழைக்கப்பட்ட கவிஞர் வாலி இதுவரை சுமார் 15ஆயிரம் பாடல் கள் வரை எழுதியுள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேலாகத் திரையுலகில் இவர் ஜொலித்தவர். இவருடைய இழப்பு தமிழ் திரையுலகத்திற்குப் பாரிய இழப்பாக அமைந்துள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.