புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 

கதாநாயகனாகிறார் இயக்குநர் பாலச்சந்தர் வீட்டுக் காவலாளி!

கதாநாயகனாகிறார் இயக்குநர் பாலச்சந்தர் வீட்டுக் காவலாளி!

கொலிவுட்டில் ஐ ட்ரீம்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பில் அரிமா பி.எஸ்.கருணாநிதி தயாரித்து வரும் படம் ‘கல்லாப்பெட்டி’. இப்படத்தில் நாயகனாக அஸ்வின் பாலாஜpயும், நாயகியாக ரோஸின் ஜhலியும் நடிக்கின்றனர். இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் ரா ரா இயக்குகிறார்.

இந்தப்படத்தின் இசை வெளியீடு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

எனக்கு உடல்நிலை சரியில்லை, வரும்போது கூட வைத்தியரைப் பார்த்து விட்டுத்தான் இந்த விழாவுக்கு வருகிறேன். அதற்கு காரணமும் இருக்கிறது.

சமீபகாலமாக சினிமாவில் திறமைசாலிகளான புதுமுகங்கள் அதிகமாக வந்து வெற்றி பெறுகிறார்கள். திறமையான பல புதிய இயக்குநர்களும் சினிமாவுக்குள் வருகிறார்கள்.

அவர்களுக்கு முதல் படத்திலேயே ரசிகர்களின் ஆதரவும், வெற்றியும் கிடைக்கிறது. இதைப்பார்க்கும் போது சந்தோ'மாக இருக்கிறது.

ஏனென்றால் என் காலத்திலெல்லாம் புதியவர்களுக்கு அவ்வளவு எளிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இந்தப்படத்திலும் புதியவர்கள்தான் பங்கேற்றிருக்கிறார்கள். இவர்களை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் முக்கியமாக வந்தேன். அதிலும் இந்தப் படத்தில் நாயகனான அஸ்வின் என் வீட்டில் காவலாளியாக வேலை பார்த்தவர். அவர் இன்று நாயகனாக நடித்திருப்பதைப் பார்க்க எனக்கு சந்தோ'மாக உள்ளது.

நான் வீட்டிற்கு போகும் போதெல்லாம் அவரைக் கவனிப்பேன், அப்போது எதையாவது எழுதிக்கொண்டிருப்பார், அதை நான் வாங்கிப் பார்ப்பேன். அதில் கவிதைகளை எழுதி வைத்திருப்பார். அந்தளவுக்கு அவருக்குள்ளும் திறமை இருக்கிறது. அதன்பின்பு அவர் என் வீட்டில் வேலை பார்க்கவில்லை. என் வீட்டைவிட பெரிய இடத்துக்கு அதாவது நடிகர் கமல் வீட்டுக்கு வேலை பார்க்கப் போய்விட்டார்.

இன்னும் ஒரு நாலு வருடம் போயிருந்தால் நானே அவரை வைத்து ஒரு படத்தை இயக்கியிருப்பேன். ஆனால் விடயம் அது இல்லை.

திறமை எங்கிருந்தாலும், யாரிடம் இருந்தாலும் அது இப்போது ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது என்றும் இந்தப்படத்தின் வெற்றி விழாவில் உங்களை சந்திக்கிறேன் எனவும் கூறினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.