புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 

படமாகிறது டில்லி மாணவி கற்பழிப்பு

படமாகிறது டில்லி மாணவி கற்பழிப்பு

நி'h என்ற தெலுங்கு படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் ரமணா கட்டம் இயக்கி வருகின்றார். இப்படத்தில் கிரண்குமார், அனன்யா, கல்யாண், நரசிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஓடும் பஸ்சில் டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டு, பின்னர் மரணமடைந்த சம்பவத்தை, நி'h படத்தின் கிளைக்கதையாக வைக்க இயக்குனர் ரமணா கட்டம் முடிவெடுத்துள்ளார்.

உணர்வு பு+ர்வமானதொரு துன்பியல் சம்பவத்தை காட்சிப்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் டெல்லி மாணவிக்கு நேர்ந்த, அந்த கோரச் சம்பவத்தை படமாக்க நான் விரும்பவில்லை.

நமது நாட்டில் நடைபெறும் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்களின் மூலம், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவும்தான் இந்தக் கதையை நி'h திரைப்படத்தில் கிளைக்கதையாக உருவாக்கியுள்ளேன் என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.