புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

இவ்வார பலன்

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா

06.01.2013 முதல் 12.01.2013 வரை

கிரகம் நிற்கும் ராசி நிலை


குரு இடபம் (நட்பு)
கேது மேடம் (பகை)
ராகு துலாம் (நட்பு)
சூரியன் தனுசு (நட்பு)
சனி துலாம் (உச்சம்)
புதன் மகரம் (நட்பு)
சுக்கிரன் தனுசு (நட்பு)
செவ்வாய் மகரம் (உச்சம்)
சந்திரன் கன்னி, துலாம்,
விருச்சிகம், தனுசு


08.01.2013 செவ்வாய்கிழமை ஏகாதசி விரதம்
09.01.2013 புதன்கிழமை பிரதோஷ விரதம்
11.01.2013 வெள்ளிகிழமை அமாவாசை விரதம்

மேடம்

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மேட ராசிக்காரர்களுக்கு 9ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக எதிர்பாராத விதங்களில் பணம் வந்து குவியும், பெண்வழி ஆதரவு கிடைக்கும்.

வீட்டில் மங்களரகமான பொருளாதார நிலமை மேலும் உயரும், உங்கள் மனதுக்கு பிடித்த சம்பவம் கைகூடும்.

பெண் நண்பர்கள் கைகொடுப்பார்கள்.


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இடப ராசிக்காரர்கள் 8ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக மனதில் ஆடம்பரத்தில் திடீர் நாட்டம் ஏற்படும். நீங்கள் எதிர்பாராத வண்ணம் உங்களது பெண் சிநேகிதர்கள் கைகொடுப்பார்கள். மேலும் 9ஆம் இடத்தில் உள்ள புதன் காரணமாக உங்களது உற்சாகம் சற்று குறைய நேரிடலாம். பயணங்களில் தொழில் நிறுவனங்களில் முன் கவனத்துடன் பாதுகாப்பாக நடந்து கொள்ளுங்கள்.


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

மிதுன ராசிக்காரர்களால் 7ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக உதவிக்கரம் நீட்டிய பெண் நண்பர்கள் உங்களை கைவிட்டு விடலாம். அல்லது வீண் தொந்த ரவுகளை தரலாம்.

மேலும் 8ஆம் இடத்தில் உள்ள புதன் காரணமாக நீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும் பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். பணபுழக்கம் தாராளமாக இருக்கும்.    


கடகம்

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

கடக ராசிக்காரர்களுக்கு 6ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக எடுக்கின்ற முயற்சிகள் எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு விதத்தில் தடங்கல் வந்து கொண்டிருக்கும். மேலும் 7ஆம் இடத்தில் உள்ள புதன் காரணமாக உங்களுக்கு பிரியமானவர்களிடமிருந்து நீங்கள் விலக வேண்டி வரும்.

உறவினர்களுடன் மனகசப்பு ஏற்படலாம். மனைவியுடன் கருத்து வேறுபாடும் ஏற்படலாம்.  


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

சிங்க ராசிக்காரர்களுக்கு 5ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக நீங்கள் எதிர்பாராத வண்ணம் உங்களுக்கு பணம் வந்து சேரும். உங்களது நண்பர்கள் ஆதரவாக உதவி செய்வார்கள் உங்களுக்கு விரும்பிய பெரியவரை சந்திப்பீர்.

மேலும் 6ஆம் இடத்தில் உள்ள புதன் காரணமாக நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்கள் சார்பாக அமையும். புதிய பதவி கிடைக்கலாம். மங்களகரமான காரியங்களும் கைகூடலாம்.


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

கன்னி ராசிக்காரர்கள் 4ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக உங்களது வீட்டில் உங்களது சொந்தங் களும் பந்தங்களும் ஒன்று சேர்ந்து மங்களகரமான காரியங்களை செய்வார்.

நீங்கள் செய்தசேவை காரணமாக சமூகம் உங்களை மதிக்கும் அதேவேளை 5ஆம் இடத்தில் உள்ள புதன் காரணமாக வீட்டில் உங்களது குடும்பத்தினருடன் கருத்துக்களை பரிமாறும்போது வீணான குழப்பம் ஏற்படலாம்.


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

துலா ராசிக்காரர்கள் 3ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக நண்பர்கள் எதிர்பாராத வண்ணம் உதவி செய்வார்கள்.

குழந்தை பாக்கியம் ஏற்படும். புதிய முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும். நல்ல செய்தியும் கிடைக்கும். அதேவேளை 4ஆம் இடத்தில் உள்ள புதன் காரணமாக குடும்பத்தில் மங்களகரமான காரியங்கள் நிகழலாம். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளும் தீரும்.


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

விருச்சிக ராசிகாரர்களுக்கு 2ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக எதிர்பாராத வண்ணம் அரசாங்கத்தில் தொழில் வாய்ப்புகள் கிடைக்கலாம். பணபுழக்கம் தாராளமாக இருக்கும்.

குடும்ப சுகம் மேம்படும். அதேவேளை 3ஆம் இடத்தில் உள்ள புதன் காரணமாக மறைமுக எதிரிகளால் மனதில் பயம் ஏற்படலாம். அரச உதவிகள் சம்பந்தமாக மனதில் ஒரு வித ஏக்கம் ஏற்படும்.


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

தனுசு ராசிக்காரர்களுக்கு 1ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக உங்களுக்கு இந்த வாரம் விருந்துக்கு குறைவிருக்காது பெண் நண்பர்கள் கைகொடுப்பார்கள். நல்ல ஓய்வும் கிடைக்கும்.

அதேவேளை 2ஆம் இடத்தில் உள்ள புதன் காரணமாக தேவையில்லாமல் வீணான பெயர் கேட்க நேரிடும். எதிர்பாராத விதத்தில் கோபமும் ஏற்பட லாம்.


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

மகர ராசிக்காரர்களுக்கு 12ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக உங்களுக்கு இந்த வாரம் பணவரவுக்கு குறைவிருக்காது ஆடைகள், ஆபரணங்கள் உங்களது மனதுக்கு விரும்பியவாறு வந்து சேரும். அதேவேளை 1ஆம் இடத்தில் உள்ள புதன் காரணமாக உறவினர்களிடையே மனதில் விரிசல் ஏற்படலாம். எதிர்பாராத வண்ணம் வெளிநாட்டு பிரயாணமும் வந்து சேரலாம்.


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

கும்ப ராசிக்காரர்களுக்கு 11ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக உங்களுக்கு இந்த வாரம் பணவரவுக்கு குறைவிருக்காது. அன்னதானம் வழங்க விருப்பம் மனதில் ஏற்படும்.
அதேவேளை 12ஆம் இடத்தில் உள்ள புதன் காரணமாக நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்கள் மனதுக்கு சற்று அதிருப்தியை தரலாம். எதிரிகளால் கரைச்சல் கூடும். உடல் நலம் பாதிப்படையலாம்.
 


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீன ராசிக்காரர்களுக்கு 10ஆம் இடத்து சுக்கிரன் காரணமாக பெண் நண்பர்களால் உங்களது மனம் கலவரம் அடையலாம். தேவையில்லாத பெயரும் உங்களுக்கு வந்து சேரலாம். அதேவேளை 11ஆம் இடத்தில் உள்ள புதன் காரணமாக குடும்பத்தில் மங்களகரமான காரியங்கள் நிகழ சந்தர்ப்பம் உண்டு. உங்களது மனதுக்கு பிடித்தமான செய்தியும் வந்து சேரும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.