புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொமர்~ல் வங்கியின் நிவாரணத் திட்டங்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொமர்~ல் வங்கியின் நிவாரணத் திட்டங்கள்

இலங்கையின் பல பகுதிகளிலும் நிலவிவருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அவசர நிதி உதவிகளை வழங்குவதில் கொமர்ஷல் வங்கியின் பல கிளைகள் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டத்தின் பணிப்புரையின் கீழ் இந்த உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிலாபம், அம்பலாந்தோட்டை, குருணாகல், அனுராதபுரம், நிக்கவரட்டிய ஆகிய கொமர்ஷல் வங்கிக் கிளைகள் தத்தமது பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த நிவாரணத் திட்டங்களை அமுல்செய்து வருகின்றன. இந்த அவசர நிவாரணப் பணிகளால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நன்மை அடைந்துள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.

இதேவேளை, கொமர்ஷல் வங்கியின் மாத்தளை, நுவரெலிய, மட்டக்களப்பு மற்றும் கதுருவெல கிளைகள், இந்தப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றன. இந்தப் பிரதேசங்களின் பிரதேச செயலாளர் பிரிவு அலுவலகங்கள் ஊடாக இந்த விவரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன.

சிலாபம் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பெருந்தொகையான மக்கள் மத்தியில் உலர் உணவுப் பொருட்கள், தண்ணீர் போத்தல்கள் என்பனவற்றை கொமர்ஷல் வங்கி விநியோகித்தது. வங்கியின் அம்பலாந்தோட்டை கிளை அடிப்படை அத்தியாவசியப் பொருள்கள், அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை சீருடைகள் என்பனவற்றை வெள்ளப் பாதிப்புக்குள்ளான மக்கள் மத்தியில் விநியோகித்தது. குருணாகலையில் பிரதேசச் செயலக ஆலோசனையின் பிரகாரம் படுக்கை விரிப்புகள், துணிமணிகள் உட்பட பல பொருள்களை வங்கிக் கிளை விநியோகித்தது. அனுராதபுரத்திலும் நிக்கவரெட்டியவிலும் வங்கிக் கிளைகள் ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருள்கள், குடிநீர் போத்தல்கள், படுக்கை விரிப்புகள் மற்றும் துணிமணிகள் என்பன விநியோகிக்கப்பட்டுள்ளன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.