புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 
நிலையியற் கட்டளையை உதாசீனம் செய்தது நீதிமன்றம்

அரசியலமைப்பின் 107 ஆவது சரத்தின் 3ம் பிரிவை கருத்திற் கொள்ளாத தீர்ப்பு;

நிலையியற் கட்டளையை உதாசீனம் செய்தது நீதிமன்றம்

சட்டத்தை இயற்றுமாறு பாராளுமன்றுக்கு உத்தரவிட நீதிமன்றுக்கு அதிகாரமில்லை

உச்ச நீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் வேளையில், அரசியலமைப்பின் 107ஆவது சரத்தின் மூன்றாம் பிரிவிலுள்ள ‘நிலையியற் கட்டளை’ கருத்திற்கொள்ளப் படவில்லையென்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள் ளார். குறித்த நீதியர சர்கள் தொடர்பான குற்றவியல் பிரேரணை தொடர்பில் சட்ட ரீதி யாகவோ, நிலையியற் கட்டளை மூலமா கவோ ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற சரத்தில் ‘நிலையியற் கட்டளை’ என்ற பகுதி முழுமையாகவே உதாசீனப்படுத்தப்பட் டுள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே வழங்கப்பட்ட இத்தீர்ப்பை முழுமையானதாக ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் கூறினார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நிலையியற்

(முதலாம் பக்கத் தொடர்)

கட்டளை ஊடாகச் செயற்படுவதற்கு 1984ஆம் ஆண்டு தீர்மானித்ததாகவும் சட்டத்தை இயற்றுமாறு பாராளுமன்றத்திற்கு உத்தரவிடுவதற்கு எந்தவொரு நீதிமன்றத்திற்கும் இயலாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரமானது சட்ட மூலமொன்று வர்த்தமான பத்திரிகையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வேளையில் அஃது அரசியலமைப்பிற்கு ஏற்புடையதாக இல்லையா என்ற தீர்மானத்திற்கு வருவதாகுமென்றும் சரத் நந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இக்கருத்தை மேன் முறையீட்டு நீதிமன்றம் கவனத்தில் எடுத்திருந்தால் இவ்வாறானதொரு தீர்ப்பை வழங்க வாய்ப்பிருந்திருக்காது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் அம் மக்களின் நலன்பேணும் சட்டவாக்கத்தை உருவாக்கும் சக்தியைக் கொண்டது. அங்கே உருவான சட்டவாக்கத்தை அமுல் நடத்துவதே நீதிமன்றமாகும். சட்டம் உருவாகுமிடந்திற்கே சக்தியுள்ளது.

பாராளுமன்றத்திற்கு அப்பால் செல்லும் அதிகாரம் நீதிமன்றத்திற்கும் கிடையாதென்றும் இது 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.