புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 


 

மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானாவின் 81 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தின் போது அமைச்சர் திணேஷ்குணவர்தன ஆளுநர் அலவிக்கு கேக் துண்டொன்றை ஊட்டுகின்றார். படத்தில் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவும் காணப்படுகின்றார். (படம் - கொழும்பு மத்திய தினகரன் நிருபர் இம்தியாஸ்)

மு.கா தலைமை மேற்கொண்ட அதிரடிதீர்மானம்

கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து சேகு நீக்கம்

காரணம் கூறப்படாததால் அதிர்ச்சியில் உறைந்தார் இஸ்ஸதீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாள ராக செயற்பட்ட சேகு இஸ்ஸதீன் 1998ஆம் ஆண்டு காலப் பகுதியில் அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பட்டியலில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

விவரம் »


 

கிருஷ்ணாலய கலாலயத்தின் 36ஆண்டு நிறைவு விழாவில் நவோதய இளைஞர் அமைப்பின் தலைவர் கே.கிருஷ்ணா, சமூகசேவையாளர் கெளசல்யா தேவியி னால் கெளரவிக்கப்படுகிறார். கலைஞர் கே.மோகன்குமார், எம்.கே.தாஜ்மகான், தொழிலதிபர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர் ஆகியோர் அருகே காணப்படுகின்றனர். (படம்: ஏ.மதுரைவீரன்)

 

 

அரசியலமைப்பின் 107 ஆவது சரத்தின் 3ம் பிரிவை கருத்திற் கொள்ளாத தீர்ப்பு;

நிலையியற் கட்டளையை உதாசீனம் செய்தது நீதிமன்றம்

சட்டத்தை இயற்றுமாறு பாராளுமன்றுக்கு உத்தரவிட நீதிமன்றுக்கு அதிகாரமில்லை

உச்ச நீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் வேளையில், அரசியலமைப்பின் 107ஆவது சரத்தின் மூன்றாம் பிரிவிலுள்ள ‘நிலையியற் கட்டளை’ கருத்திற்கொள்ளப் படவில்லையென்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள் ளார். குறித்த நீதியர சர்கள் தொடர்பான குற்றவியல் பிரேரணை தொடர்பில் சட்ட ரீதி யாகவோ, நிலையியற் கட்டளை மூலமா கவோ ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற சரத்தில் ‘நிலையியற் கட்டளை’ என்ற பகுதி முழுமையாகவே உதாசீனப்படுத்தப்பட் டுள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே வழங்கப்பட்ட இத்தீர்ப்பை முழுமையானதாக ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் கூறினார்.

                                                           விவரம் »

சர்வதேசத்தில் எமது தாய் நாட்டை அவமானப்படுத்த சிலர் சூழ்ச்சி!

இனப்பாகுபாடிற்கு இடமளிக்கக் கூடாது என்கிறார் நாமல் ணிஜி

சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம் என பாகுபாடு காட்டாமல் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் சமமாக மதிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையை அவமானப்படுத்த நினைப்பவர்கள் கெட்ட எண்ணத்துடன் இதனை பயன்படுத்துகின்றனர். இதற்கு எதிரான நாம் போராட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

விவரம் »

வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டே இராணுவத்தில் சுயமாக இணைந்தனர் ;

தமிழ் பெண்களின் கெளரவத்தை மலிவு விலைக்கு விற்பது தமிழ் அரசியல்வாதிகளே!

பழி சுமத்த வேண்டாமென ஊடகங்களிடமும் கீதாஞ்சலி கோரிக்கை
இணைந்துள்ள பெண்களுக்கு பிரச்சினை எனில் தன்னைத் தொடர்பு கொள்ளவும் கோரிக்க

பெண்களின் சுய மரியாதையை களங்கப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பொய் பரப்புரை செய்வதை உடனடி யாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ந.கீதாஞ்சலி ‘வாரமஞ்சரி’க்குத் தெரிவித்தார்.

                                                         விவரம் »

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk


 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.