புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 
ஏடாகூடமான கேள்விகள்? 81

ஏடாகூடமான கேள்விகள்? 81

ஏடாகூடம் : மொழி
 

பதில் தருவது

“பொப்பிசைத் திலகம்”

பாடகர் எஸ்.இராமச்சந்திரன் ;

கேள்வி: நீங்கள் பொப்பிசைப் பாடல்களைப் பாடும்போது பெண்களைப் போல் நளினம் காட்டுவதாக சொல்கிறார்களே உண்மையா?

பதில்: அதில் என்ன தப்பிருக்கிறது. கவர்ச்சியைத்தானே ஐயா இன்று உலகம் விரும்புகின்றது.

(அடடா அவனா நீங்கள். சொல்லவே இல்ல....?)

கேள்வி: “வான் நிலவில் அவளைக் கண்டேன் நான். வாசமலரில் அவளைக் கண்டேன் நான்” என்று பாடினீர்களே இப்போது அவள் எங்கே இருக்கிறாள்?

பதில்: என்னோடுதான் இருக்கிறாள்.

(ஒன்னுக்கு ரெண்டாச்சி. உபத்திரத்திற்கு மூன்றாகுமா?)

கேள்வி: இசைக்கல்லூரிகளின் பக்கம் மழைக்காலங்களிலாவது ஒதுங்கியதுண்டா?

பதில்: ஒதுங்கியதுண்டு.

(ஓ...... “அந்த” அவசரத்திற்குத்தானா ஒதுங்கினீர்களா?)

கேள்வி: “பொப்பிசைத்திலகம்” என்ற பட்டத்தை உங்களுக்கு யாராவது கொடுத்தார்களா? அல்லது நீங்களாகவே வைத்துக் கொண்டீர்களா?

பதில்: பொப்பிசை நிகழ்ச்சியொன்றில் பி.எச்.அப்துல் ஹமீட் எல்லாப் பாடகர்களையும் ஒவ்வொரு பட்டத்தைச் சொல்லி அழைக்கும் பொழுது என்னையும் இப்பட்டத்தைச் சொல்லி அழைத்தார்.

(ஓ..... அப்படியானால் வசிஸ்டர் வாயால் “மகரிஷி” பட்டம் கிடைத்தது என்று சொல்லுங்கள்)

கேள்வி: உங்கள் பாடல்களைக் கேட்டு மயங்கி யாராவது உங்கள் பின்னால் வந்ததுண்டா?

பதில்: பலபேர் வந்தார்கள்.

(அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?)

கேள்வி: உலக வரைபடத்தில் இலங்கை எங்கே இருக்கிறது என்று யாராவது கேட்டால் உங்களால் காட்ட முடியுமா?

பதில்: இப்போது இருக்கிறதோ என்று தெரியவில்லை. இருந்தால் காட்ட முடியும்.

(அப்படியானால் நீங்களும் எட்டப்பன் போன்று காட்டிக் கொடுத்த பரம்பரையா? சொல்லுங்கள்)

கேள்வி: செல்போன் வரமா? சாபமா?

பதில்: வரம் என்று நினைத்தால் வரம். சாபம் என்று நினைத்தால் சாபம்.

(இந்த லொள்ளுதானே வேணாங்கிறது. ஏன் மதில் மேல் பூனையாக இருக்கிaர்கள்?)

கேள்வி: அசிங்கமான பெண்களைக் கண்டால் உங்கள் மனதில் என்ன தோன்றும்?

பதில்: அசிங்கம், அசிங்கமில்லாதவர் அவரவரைப் பொறுத்தது.

(நல்ல அனுபவம் போலிருக்கிறது. அப்படியானால் நீங்களும்......?)

கேள்வி: மிஸ்சுக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ் மிஸ்சாகி பொஸ்சுக்குப் போய் அவஸ்தைப்பட்ட அனுபவம் உண்டா?

பதில்: இல்லை.

(என்ன இல்லை? மிஸ்சுக்கு எஸ்.எம்.எஸ்.அனுப்பியதா?)

கேள்வி: நீங்கள் மேடையில் பாடும்போது மதி மயங்கிய நிலையில்தான் பாடூவீர்களாமே உண்மையா?

பதில: பாடும் பொழுதல்ல. பாடிவிட்டு மதி மயங்கிய அனுபவம் நிறைய உண்டு.

(ஓ...... அப்படி மதி மயங்கி விழுந்து விட்ட பிறகு தான் “அன்னத்தைத் தொட்ட கைகளிலே மது கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்” என்று பாடினீர்களோ?)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.