புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 
அருள் கொடுப்பவர் சுவாமி; கற்பிப்பவர் குரு இருவரும் இணைந்த சங்கமமே குருசுவாமி

ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு ஏடாகூடம் கரும்பு! ரசனை இல்லாதவர்களுக்கு அதுவே வேம்பு!

23.12.2012 அன்று தினகரன் வாரமஞ்சரியில் வெளியான “ஏடாகூடமான கேள்விகள்’ என்ற தலைப்பில் கலாபூஷணம் எம்.ஐ.எம். அப்துல் லத்தீப் என்ற ஒருவர் என்னைக் கொஞ்சம் சீண்டிப் பார்த்திருக்கிறார்.

நான் சந்தனக்காட்டு நரி இந்த நாற்றங்களுக்காக வெல்லாம் மூக்கைப் பொத்திக் கொள்ளமாட்டேன், என்பதை முதலில் அவருக்கு தெரிவித்துக் கொண்டு அவரது சீண்டலுக்கு சிலம்பாட்டம் போடுகிறேன்.

இதே புத்தளத்தில் இருந்து இதற்கு முன்பும் இரண்டு தபால் அட்டைகள் வந்தன. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த இரண்டு கடிதங்களிலும் புரவலர் ஹாசிம் உமர், சமூக சேவையாளர் பாஸ்கரா ஆகிய இருவர் பெயர்களே குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்தக் கலாபூஷணமும் அவர்கள் இருவரின் பெயரைத்தான் குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? யாரோ ஒருவரின் தூண்டுதலின் பெயரில்தான் இவர்கள் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என்பது பால் குடிக்கும் பாலகனுக்குக் கூடப் புரியமல்லவா?

நான் இதுவரை 79 பேர்களிடம் ஏடாகூடமான கேள்விகளைக் கேட்டிருக்கிறேன். ஆனால், சம்பந்தப்பட்ட மூவரும் இந்த இருவரைப் பற்றியும் வந்த ஏடாகூடமான கேள்விகளை மட்டும்தான் படித்தார்களா?

இவர்களின் ஏடாகூடமான கேள்வி - பதில்கள் வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டதே! அதுவுமில்லாமல் இந்த கலாபூஷணம் கூறியுள்ளதைப் போன்ற கேள்விகளை நான் அவர்களிடம் கேட்கவில்லையே. ஹாசிம் உமர் இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் அலட்டிக் கொள்வதே இல்லை. இவர் ஒரு ஜாலியான நபர். அவரைச் சூழ்ந்துள்ள சிலர்தான் அவரை உசிப்பேத்தி விடுகிறார்கள்.

ஆனால், இந்த பாஸ்கரா என்பவரைத்தான் நீங்கள் சமூக சேவையாளர் என்று குறிப்பிட்டுள்Zர்கள். அது தான் ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் சமூக சேவையாளர் என்பவரிடம் ஏடா கூடத்தில் நான் கேட்ட ஒரு கேள்விக்கு அவர் சொன்ன பதிலைப் பார்த்து விட்டு அவர் சமூக சேவையாளரா என்று கூறுங்கள் பார்ப்போம்.

கேள்வி: ரவிகருணாநாயக்க அவர்கள் எந்த அமைச்சராக இருக்கிறார்?

பதில் : அவர் எந்த அமைச்சராக இருந்தால் என்ன? மக்களுக்கு தேவையானதைச் செய்து கொண்டு தானே இருக்கிறார். என்ன லத்தீப் நானா இது எப்படி ஈக்கிதென்டு சொல்லுங்களேன் பார்ப்போம். இதற்குப் பிறகும் இவரை ஒரு சிறந்த சமூக சேவையாளர் என்று நீங்கள் சொல்ல முடியுமா? நான் ஒன்றுக்கும் உதவாத கேள்விகளை கேட்பதாக இவர் சொல்லி இருக்கிறார்.

‘ஏடா கூடமான கேள்விகள்’ என்பது பல ரசிகர்களையும் சிரிக்க வைக்கும் ஒரு பகுதி என்பதை இவர் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

இது கல்வெட்டில் பதிக்கக் கூடிய ஒரு பகுதியோ அல்லது சரித்திரத்தில் இடம் பெறப்போகும் பகுதியோ அல்ல.

ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு இது கரும்பு. ரசனை இல்லாதவர்களுக்கு இது வேம்பு. உங்களைப் போன்ற வயது போன கலாபூஷணங்களுக்காக இந்தப் பகுதி நடத்தப்படவில்லை என்பதையும் இவர் புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய பதில்கள் இவரையும் இவரது ரசிகர்களையும் முகம் சுளிக்க வைக்கிறதாம். இவருடைய ரசிகர்கள் யார் என்று தெரியவில்லை. கொஞ்சம் காட்டுங்களேன் பார்ப்போம்.

என்னை சந்திக்கும் ரசிகர்கள் எல்லாம் அதை பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் கொடுக்கும் பதில்களினால் தான் அந்தப் பகுதி சுவையாக இருப்பதாக சமூகஜோதி ரபீக் அவர்களும் என்னிடம் தெரிவித்தார். நஜ்முல்ஹுசெயின் மானாமக்கீன், கலைஞர் கலைச் செல்வன் போன்றவர்களும் இதே கருத்தைத்தான் என்னிடம் சொன்னார்கள்.

வயது போன காலத்தில் இவரால் இந்தப் பகுதியை பார்க்க முடியவில்லை என்றால் பத்திரிகையில் இருக்கும் வயது போனவர்களுக்கான பகுதியைப் பார்க்கலாமே. இந்தப் பகுதியை நீங்கள் பார்க்கவில்லை என்று யார் அழுதார்கள்?

ரசனை இல்லாதவர்களுக்கெல்லாம் கெளரவபட்டங்கள் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும். இந்தப் பகுதியை ஆரம்பித்து உடனே இவர்களை போன்ற முதியவர்கள் சிலர் எதிர்த்தார்கள். இன்னும் சொன்னால் நாடாளுமன்ற எம். பி. ஒருவர் கூட எதிர்ப்புக் கொடியைத் தூக்கிப்பிடித்தார்.

இந்தப் பகுதியை நிறுத்துங்கள், என்று ஆசிரியருக்கு டாச்சர் கொடுத்தார்கள். ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் திரு. செந்தில் வேலவர் துணிந்து நின்றார். “ஏடாகூடம் பகுதியை பலரும் வாசித்து பாராட்டும் விதத்தில் செய்து காட்டுகிறேன்” என்று சவால்விட்டு விட்டு, எனக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.

இன்று என்ன நடந்திருக்கிறது.? ஆரம்பத்தில எதிர்ப்பைக் காட்டிய அந்த நாடாளுமன்ற உறுப்பினர் இந்தப்பகுதி சிறப்பாக இருப்பதாகக் கூறிவிட்டு தனக்கும் பத்து கேள்விகளைக் கேட்டுத் தரும்படி ஆசிரியரிடம் சொல்லியிருக்கிறார்.

கலாபூஷணம் அப்துல்லத்தீப் நானா அவர்களே உங்களுக்கு இப்படி எழுதச் சொன்னவரிடம் போய் இதைச் சொல்லுங்கள். இந்த மாதிரியான எத்தனையோ எதிர்ப்புகளை தாண்டி வந்தவன் நான். என்னை இதற்கு முன்பு எதிர்த்தவர்கள் எல்லோரும் இன்று எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ரப்பர் மரத்திற்கு ரணங்களைப் பற்றிக் கவலை இல்லை. என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

கலாநிதிகளுக்கு எனது எழுத்துக்கள் விருந்து! கலாநிதிகளுக்கு அதுவே மருந்து!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.