புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 

இலங்கையில் மொனாஷ் பல்கலைக்கழக ஒன்றுகூடல்

இலங்கையில் மொனாஷ் பல்கலைக்கழக ஒன்றுகூடல்

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழமான மொனாஷ் பல்கலைக்கழகம் அண்மையில் அதன் பழைய மாணவர் ஒன்றுகூடலை, நடத்தியது. மொனாஷ் பல்கழைக்கழகத்தின் உதவித் துணை வேந்தர் (சர்வதேச செயற்பாடுகள்) பேராசிரியர், ஸ்டெப்னி ஃபாஹே, உதவிப்பீடாதிபதி (ஆராய்ச்சி)- வணிக மற்றும் பொருளியல் பேராசிரியர் கரிமாகீ முகாமைத்துவ பொருளியல் பீட தலைவர் பேராசிரியர் இயன் மக்லஃவ்லின் உள்ளடங்கலாகப் பல சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டில் மூன்றாம் நிலைக் கல்வியைக் கற்க விரும்பும் மாணவர்களுக்கு விருப்பமான தெரிவிடமாக அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முதலிடத்தில் விளங்கி வருகின்றது. மொனாஷ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவபீட உதவிக் கல்விப் பணிப்பாளர் இணை பேராசிரியர் ரமணி சமரதுங்க கருத்துக் கூறுகையில் சர்வதேசப் புகழ்பெற்ற மொனாஷ் பல்கலைக்கழகத்தில் தமது உயர் கல்வியைத் தொடர்வது அனைத்து மாணவர்களினதும் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.

“மொனாஷ் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் ஒன்றுகூடலை இலங்கையில் நடாத்துவதற்கு காரணம் இங்கு வாழும் அதிகளவான பல்கலைக்கழக பட்டதாரிகள்தான் இதவரையில் நமது அழைப்பிற்கு அமோகமான வரவேற்புக் கிடைத்துள்ளது.மிகச்சிறந்த நிழ்கவொன்றை நடாத்துவதற்கு நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்” என இணை பேராசிரியர் சமரதுங்க ¦திவித்தார்.

மொனாஷ் பழைய மாணவர் சமூகம் அதன் அங்கத்தவர்களுக்கும் பல்கலைக்கழ கததிற்கும் இடையே சிறந்த உறவைப் பேணுவதற்கு மிகப்பெருமளவில் பங்களிப்புச் செய்து வருகின்றது. இந்தத் தொடர்பு இலங்கையுடனும் மேம்படுத்தப்படும். மொனாஷ் பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் செயற்பாடுகள், தரம் வாய்ந்த ஆராய்ச்சி முறைமைகள், பல்துறைக் கற்கைநெறிகள் ஆகியவற்றுக்கு சர்வதேச மட்டத்திலரர் அதிக மதிப்பு உண்டு என்றார்.

அவுஸ்திரேலியா, மலேசியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் எட்டு தலைசிறந்த பல்கலைக்கழக வளாகங்களைக் கொண்டுள்ள மொனாஸ் பல்கலைக்கழகம் உண்மையில் பன்முகத்தன்மை உடைய உலக பல்கலைக்கழமாக விளங்குகின்றது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.