புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 

உயர் கல்வியில் அக்கறை உள்ளோருக்கு ளுடு2ஊழடடநபந இணையத்தள உரையாடல்கள்

உயர் கல்வியில் அக்கறை உள்ளோருக்கு SL2College இணையத்தள உரையாடல்கள்

இலங்கை பட்டதாரிகள் நாடு திரும்பி நாட்டின் அபிவிருத்திக்காக சேவையாற்றவும் பங்களிப்பு செய்யவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் “புத்திஜீவிகள் நாடு திரும்பல்” (Brain -Gain) என்ற திட்டம் SL2College கடைசியாக மேற்கொண்டுள்ள முயற்சியாகும். உள்நாட்டு உள்ளக பயிற்சிகளையும் முழுநேர வேலை வாய்ப்புக்களையும் இணையத்தளத்தில் வெளியிடுதல் மூலம் இத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. வெளிநாட்டில் கல்வி கற்றுவிட்டு அல்லது வேலை செய்துவிட்டு நாடு திரும்பிய இலங்கையர்களுடன் நேர்காணல்கள், இலங்கையில் மீளக்குடியேறி சேவையாற்றுதல் (சட்ட சேவை, பொருள் விநியோகம் ஆகிய துறைகளில்) போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்வது பற்றியும் SL2College தற்போது திட்டமிட்டு வருகிறது.

SL2College ஓர் உண்மையான தொலைநோக்குடைய ஸ்தாபனமாக வளர்ந்து வருவதால் இத்தகைய முயற்சிகள் பல்வேறு மார்க்கங்களில் அதிகரித்து வருகின்றன.

SL2College இல் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அவையாவன:

1. அரங்கம்

SL2College இணையத்தளமான www.SL2College.org இல் உள்ள வளங்களில் மிகவும் பயனுள்ள ஒரு வளம் இதுவாகும். தகவல்களும் வழிகாட்டலும் நாடும் மாணவர்கள் அவர்களது கேள்விகளை இணையத்தளத்தில் பதியலாம். சகல கேள்விகளுக்கும் நேர ஒழுங்கின்படி பதிலளிக்கப்படுகிறது என்பதை நடுநிலையாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.

2. கட்டுரைகள்

கடந்தகால, தற்கால பல்கலைக்கழக மாணவர்களும் பட்டதாரி மாணவர்களும் தொழில்சார் பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்து கொண்டவர்களும் கேள்விக் கொத்துகளுக்கு பதிலளிப்பதன் மூலமும் கட்டுரைகளை எழுதுவதன் மூலமும் அவர்களது கல்வி அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கு SL2College ஊக்கமளித்து வருகிறது. இந்த பதில்களும் கட்டுரைகளும் வாராந்தம் Sunday Observer பத்திரிகையில் SL2College அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பத்தியிலும் SL2College இன் இணையத்தள பக்கத்திலும் வெளியிட்டு வருகிறது.

3. நெறியாள்கைத் திட்டம்

உயர் கல்வியில் அக்கறையுள்ள மாணவர்கள் 12 மாதங்களுக்குள் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் 3-4 மாதங்களுக்கு அவர்களை அனுபவம் வாய்ந்த நெறியாள்கையாளருடன் நேரடியாக கலந்துரையாடுவதற்கும், அவர்களது வழிகாட்டுதல்களை பெறுவதற்கும் சந்திப்புக்கள் ஒழுங்கு செய்யப்படும். இத்திட்டத்தில் இணைந்துகொள்ள விரும்பும் நெறியாள்கையாளர்களும் அவர்களை சந்திக்க விரும்புவோரும் http://tiny.cc/s12College-mentor-programe சீலீ க்கு விஜயம் செய்யவும்.

4. இணையத்தள உரையாடல்கள்

உயர் கல்வியில் அக்கறையுள்ள மாணவர்களுக்காக SL2College நேரடி உரையாடல்களை ஒழுங்கு செய்கிறது. இலங்கையிலிருந்து இணைந்து கொள்ளும் மாணவர்கள் அவர்களது உயர் கல்வி தொடர்பான அபிலாஷைகளை நிறைவேற்றுவது குறித்து அமெரிக்கா, கனடா ஆகிய நாடுளிலுள்ள பட்டதாரி மாணவர்களிடம் கேள்விகள் கேட்கலாம். இது பற்றிய விபரங்களுக்கு http://tiny.cc.s12-webchat-cs க்கு விஜயம் செய்யவும்.

5. உள்ளூர் பாடசாலைகள் /பல்கலைக்கழகங் களில் கருத்தரங்குகள்

வெவ்வேறு நாடுகளில் உயர்கல்வி வாய்ப்புக்கள் பற்றி கலந்துரையாடுவதற்கு SL2College உள்ளூர் பல்கலைக்கழகங்களிலும் பாடசாலைகளிலும் தகவல் கருத்தரங்குகளை நடத்துகிறது. அண்மையில் skype அமர்வுகள் சம்பந்தப்பட்ட கருத்தரங்குகள் கிரமமான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. உலகெங்கிலுமுள்ள பட்டதாரி மாணவர்கள் skype அமர்வுகளில் கலந்துகொண்டு வெவ்வேறு விடயங்கள் பற்றி பார்வையாளர்களுடன் பேசுகிறார்கள். உதாரணமாக, 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி தற்போது அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருக்கும் 9 கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர்கள் skype அமர்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும மாணவர்களை அழைத்து கலந்துரையாடினார்கள். skypலீ அமர்வில் கலந்துகொண்டவர்களில் பலர் உயிரியல், கணிதம், பெளதிகவியல், கணினி, விஞ்ஞானம் ஆகிய துறைகளில் கற்றறிந்தவர்கள் என்பதால் பன்முக ஆய்வு அனுபவங்கள் பரிமாறப்பட்டன.

6. பல்கலைக்கழகங்கள்

பல்கலைக்கழகங்களிலுள்ள SL2College கழகங்கள் பிரதான SL2College நிறுவனத்தின் விரிவாக்கம் ஆகும். கழக உறுப்பினர்கள் உயர் கல்வியை ஊக்குவிப்பதோடு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மேற்படிப்பை தொடரும் மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய பல வாய்ப்புக்களை வெளிக்கொணரும் நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்து நடத்தி வருகிறார்கள்.

7. SL2College நிகழ்ச்சி நிரல்

இலங்கையில் நடத்தப்படும் உயர் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் SL2Collegeஇன் இணையதளம் www.SL2College.org இன் நிகழ்ச்சிநிரல் பக்கத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

8. உள்ளக பயிற்சி பதிவுகள்

“புத்திஜீவிகள் நாடு திரும்பல்” முயற்சிக்கு அமைய SL2College அதன் இணையதளத்தில் உள்ளக பயிற்சி பற்றிய பிரிவு ஒன்றை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களையும் வளங்களையும் சகல இலங்கையர்களும் அறிந்துகொண்டு பட்டதாரிகள் இலங்கையில் வேலை செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என்று SL2College நம்புகிறது.

9. YouTube அலைவரிசை

SL2College இன் YouTube அலைவரிசை யான http://youtube.com YouTube என்ற அலைவரிசையில் கடந்தகால கல்விக் கருத்தரங்குகள் தொடர்பான காணொளிகளும் கல்வி சம்பந்தப்பட்ட ஏனைய காணொளிகளும் பதிவு செய்யப்படுகின்றன.

10. ‘The Insider’ (அக உறுப்பினர்)

‘The Insider’ என்ற பெயரில் SL2College செய்திக் கடிதம் ஒன்றை காலாண்டுக்கு ஒரு தடவை வெளியிட்டு வருகிறது. SL2College இல் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், புதிய குழு உறுப்பினர் அறிமுகம் மற்றும் தரவுகள் இதில் வெளியிடப்படுகின்றன. செய்திக் கடிதம் சகல உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படுவதுடன் இணையத்தளத்திலும் வெளியிடப்படுகிறது.

11. சமூக ஊடகம்

Facebook, Twitter, LinkedIn போன்ற சமூக ஊடகங்களின் உருவகங்களில் லிnlinலீ இல் SL2College கொண்டுள்ளது.

உங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள அல்லது SL2College வழங்கும் சேவைகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள [email protected] இணையத்தளம் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.