புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 

வருடாந்த சந்தா வருமானத்தில் முதற் தடவையாக 10 பில்லியன் ரூபாவை கடந்துள்ள செலிங்கோ லை/ப்

வருடாந்த சந்தா வருமானத்தில் முதற் தடவையாக 10 பில்லியன் ரூபாவை கடந்துள்ள செலிங்கோ லை/ப்

இலங்கை ஆயுள் காப்புறுதிக் கம்பனிகளுள் முதற் தடவையாக 10 பில்லியன் ரூபாவை வருடாந்த சந்தாவாகப் பெற்றுள்ள கம்பனி என்ற பெருமையை செலிங்கோ லைஃப் நிறுவனம் பெற்றுள்ளது. ஒரு வருடத்துக்கும் சற்று குறைவான காலப் பகுதியில் டிசம்பர் 2012இல் இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது.

10 பில்லியன் ரூபாவை வருடாந்த சந்தாவாக ஈட்டியுள்ள முதலாவது ஆயுள் காப்புறுதிக் கம்பனி என்ற வகையில், இந்த சாதனையானது இந்தப் பிரிவில் எமது ஆதிக்கத்துக்குக் கிடைத்துள்ள மிகவும் பொருத்தமான ஒரு கெளரவமாகவே கருதப்படுகின்றது என்று கூறினார் செலிங்கோ லைஃப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன் 1987ஆம் ஆண்டு நாட்டில் ஆயுள் காப்புறுதித் துறை வர்த்தகம் தொடங்கப்பட்ட காலப்பகுதியில் இந்த வர்த்தகத்தை தொடங்கிய நான்கு தனியார் கம்பனிகளுள் செலிங்கோ லைஃப்தான் கடைசியாக வர்த்தகத்தை தொடங்கிய நிறுவனமாகும். ஆனால் இது ஒரு போதும் வலுவிழந்ததாக இருந்ததில்லை. எமது முதல் பத்து வருட வர்த்தகத்தின் பின் இரண்டு பில்லியன் ரூபாவை வருடாந்த சந்தா வருமானமாகப் பெற்ற முதலாவது கம்பனி என்ற நிலையை நாம் அடைந்தோம். அடுத்த 14 வருட காலத்தில் நாம் மேலும் ஐந்து மடங்காக வளர்ச்சி கண்டுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.

2013 ஜனவரி 14இல் செலிங்கோ லைஃப் அதன் 25 வருட நிறைவை கொண்டாடுகின்றது.

மிகச் சிறந்த அடிப்படைகள், மிகச் சிறந்த செயற்பாடுகள், தொழிற்சார் பண்புகள் மற்றும் விழுமியங்கள், சமூகத்தின் தேவைகளை உணர்ந்து செயற்படும் அதன் அணுகுமுறை என்பன தான் தொடர்ந்து இந்த தொழில்துறைப் பிரிவில் கம்பனி தலைமைதாங்க காரணங்களாக அமைந்துள்ளன என்று விளக்கிய ரெங்கநாதன் எமது காப்புறுதிதாரர்களின் நிதி மீதான விவேகமான முகாமைத்துவமும் எமது வளர்ச்சிக்கும் ஸ்திரப்பாட்டுக்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று மேலும் கூறினார்.

2012இல் செலிங்கோ லைஃப்பின் முதலீட்டு வரிசையானது அரசாங்க பிணைகள் (45%) அங்கீகாரமளி க்கப்பட்ட தனியார் வங்கிகள் (21%) அரச வங்கிகள் (15%) காணி சொத்துக்கள் (15) கூட்டாண்மை கடன்கள் (5%), ஏனையவை (4%) என அமைந்துள்ளன.

இந்த எல்லா முதலீடுகளும் 2000ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க காப்புறுதிச் சட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்களில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம் ஆயுள் நிதிகளை முதலீடு செய்வதற்கான நிபந்தனைகளை மிகக் கண்டிப்பாகப் பின்பற்றி செய்யப்பட்டுள்ளன. அத்தோடு இந்தத் தொழில்துறையை கண்கானிப்பதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை காப்புறுதிச் சபையின் (IBSL) தொடர் கண்கானிப்புக்கும் உட்பட்டவையாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.