புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
செல்வம் எம்.பியின் மைத்துனர் நானுஓயாவில் சடலமாக மீட்பு

செல்வம் எம்.பியின் மைத்துனர் நானுஓயாவில் சடலமாக மீட்பு

கடந்த 30ம் திகதி முதல் காணாமல் போயிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 30ம் திகதி தனது கொட்டாஞ்சேனை வீட்டில் இருந்து கொழும்பு செட்டியார்தெருவில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு வேலைக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி கொட் டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இந்த நிலையில் கடந்த 31ம் திகதி நானுஓயா பங்களா வத்தையில் 111ஆம் இலக்க மைல்கல் அருகில் இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.

இது தொடர்பில் கொழும்பு கோட்டை பொலிஸார் விசாரணை நடத்தி சடலமாக மீட்கப்பட்டவர் சின்னத்துரை இந்திரேஸ் வரன் (53 வயது) என அடையாளம் கண்டனர். சடலத்தை பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதனின் மனைவி அடையாளம் காண்பித்தார்.

இந்தக் கொலை குறித்து விசாரணை நடத்திய கோட்டை பொலிஸார் வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து நேற்று சந்தேகநபரை கைது செய்துள்ளனர். கைதானவர் சின்னத்துறை இந்நிரேஸ் வரனுடன் சேர்ந்து தரகுவேலை பார்ப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வருவதாவது, கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள இரு வர்த்தகர்களிடம் தங்கம் வாங்னவென 33 லட்சம் ரூபா பணத்தை இந்திரேஸ்வரன் பெற்றுக்கொண் டுள்ளார். அந்தப் பணத்தை பறிக்கும் நோக்கில் சின்னத்துரை இந்திரேஸ்வரனை கொலை செய்து கார் ஒன்றில் ஏற்றிச்சென்று நானுஓயா பகுதியில் குறித்த சந்தேகநபர் போட்டுச்சென்றுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 33 லட்சம் ரூபா பணமும் கொலைக்கு பயன்படுத் தப்பட்ட காரும் கைப்பற்றப்பட்டதோடு கொலை செய்யப்பட்டவர் அணிந்திருந்த நான்கு மோதிரங்கள் வேறு ஒரு நபரிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.