புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
வடக்கு மக்களின் சுபீட்சத்திற்கு வித்திடும் திட்டங்களை தடுத்து நிறுத்த சர்வதேச பயணம்

வடக்கு மக்களின் சுபீட்சத்திற்கு வித்திடும் திட்டங்களை தடுத்து நிறுத்த சர்வதேச பயணம்

நாம் புனரமைத்துவரும் வீதிகளால் சென்று எமக்கு எதிராக ஹினிதி பிரசாரம்;

உலக நாடுகள் முன்னரை விடவும் உதவி என்கிறார் அமைச்சர் பசில்

திவிநெகும சட்ட மூலம் தாமதப் படுத்தப்படுவதால் சமுர்த்தி திட்டத்திலிருந்து ஓய்வு பெறுபவர்கள் ஓய்வூதியத்தை இழக்கின்றார்கள். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பாக்கிய சோதி மற்றும் வெலியமுன போன்றவர்களுமே வகை சொல்ல வேண்டியவர்களாவர். மேலும் நாம் வடபகுதி மக்களின் சுபீட்சத்திற்காக முன்னெடுக்கின்ற வேலைத் திட்டங்களை தடுத்து நிறுத்துவதற்காக அத்திட்டங்களுக்கு உதவியளிக்க வேண்டா மென நாட்டுக்கு நாடு சென்று கூறு கின்றார்கள். இதனடிப்படையில் இந்தியா, சீனா நாடுகளின் பிரதிநிதிகளையும் கூட அவர்கள் சந்தித் துள்ளனர். இவர்கள் சந்தித்தாலும் அந் நாடுகள் எமக்கு தொடர்ந்தும் முன்பைவிட அதிகமாக உதவுகின்றன. என்றாலும் இவர்கள் செய்கின்ற வேலையால் யாருக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மியன்மார் நாட்டு எதிர்க்கட்சி தலைவி வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட போதி லும் கூட தமது நாட்டுக்கு எதிராகத் தடைகளைக் கொண்டு வர வேண்டாமென சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொண்டார். இப்படியானவர்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கருத்தில் கொள்ள வேண்டும். தற்காலிக நலன்புரி நிலையங் களின் கூரைகளுக்கு கிடுகுகளுக்கு பதி லாக தகரமும் நலன்புரி நிலையத்தின் நிலத்திற்கு சீமெந்தும் போடப்படுவதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அந்நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் பருவ பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே நாம் இந்நட வடிக்கை எடுக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

வவுனியா மெனிக் பாம் நலன்புரி நிலையத்திற்கு மின்சார வசதி செய்யப்பட்ட போது அங்கு மக்க ளைப் பல வருடங்களாக வைத்திருக்கப் பார்க்கிறார்கள் என்றும் எம்மீது குற்றம்சாட்டினார்கள். ஏன் இவ்வ ளவு வசதி மிக்கதாக நலன்புரி நிலையங்களை அமைக்கின்றார்கள் என்று அவர்கள் கேட்டார்கள்.

நாம் வடபகுதி மக்களின் மேம்பாட்டுக்காக முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு எதி ராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் காரணமாக சில சர்வதேச அமைப்புகள் நலன்புரி நிலையங்களுக்கு வழங்கவென குப்பை கூடைகளைக் கூட எமக்கு வழங்க மறுத்தன. இதனை எழுத்து மூலம் அந்நிறுவனங்கள் எமக்கு அறிவித்தன. இதேபோல் நாம் கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும், அந்நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்திய போதும் அதற்கு எதிராகவும் அவர்கள் கூச்சலிட்டார்கள்.

ஆனால் இப்பணியில் பாதுகாப்புப் படையினரையும் ஈடுபடுத்தி இராவிட்டால் இம்மக்களைத் துரிதமாக மீளக்குடியேற்றி இருக்க முடியாது.

தமிழ்க் கூட்டமைப்பினரின் எதிர்ப்பிரசார நடவ டிக்கை காரணமாக கண்ணி வெடிகள் அகற்றும் பணிக்கென பாதுகாப்புப் படையினருக்கு அமெரிக்கா முதலில் நிதியுதவி வழங்க முன்வரவில்லை. பின்பே கள நிலவரத்தின் உண்மைத் தன்மையை அறிந்து நிதியுதவி வழங்கி னார்கள். இப்போது உலகில் சிறந்த முறையில் கண்ணிவெடிகள் அகற்றும் பிரிவினராக அமெரிக்காவினால் எமது பாதுகாப்புப் படையின் கண்ணிவெடி அகற்றும் பிரிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மக்களின் போக்குவரத்து வசதிக்காக வீதிகளை அபிவிருத்தி செய்தபோது அது இராணு வத்தினரும் அவர்களது கவச வாகனங்களும் பயணம் செய்வதற்காக மேற்கொள்ளப்படுவதாகக் கூறினர். கவச வாகனங்களைக் கொண்டு செல்ல பாது காப்புப் படையினருக்கு பாதைகளை அபிவிருத்தி செய்யத் தேவை இல்லை.

அவர்கள் உடைக்கப்பட்டிருந்த பாதைகள், பாலங் களையும் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளையும் கடந்து சென்றுதான் புலிகளின் பிடியில் மனிதக் கேடயங்களாகச் சிக்கி இருந்த மக்களை மீட்டெடுத்தனர். புலிகளின் பிடியில் சிக்கி இருந்த தமிழ் மக்கள் தப்பி வந்த போது அவர்கள் மீது புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதனை நாம் தொலைக் காட்சிகளில் பார்த்தோம்.

மக்களின் போக்குவரத்து சிரமங்களை நிவர்த்தி செய்யவே நாம் பாதைகளை அபிவிருத்தி செய்கின் றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட சட்டத்தரணி எம்.பி ஒருவர், தாம் காலை யில் யாழிலிருந்து வவுனியாவுக்கு வந்த நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகி விட்டு பகல் சாப்பாட்டுக்கென மீண்டும் யாழ்ப் பாணம் சென்று விடுவதாகக் கூறியுள்ளார். அதற்கு எமது வீதி அபிவிருத்தியே பெரிதும் உதவி இருக்கின்றது.

மேலும் த.தே.கூ தலைவர் இரா. சம்பந்தன் மாதக்கணக்கில் திருகோணமலைக் குச் செல்லாதவர். இப்போது அடிக்கடி திருமலைக்கும் மட்டக்களப்புக்கும் சென்று வருகின்றார். ஒன்றரை மணித்தியாலங்களில் திருமலையிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்று வர முடியும். நாம் பாதைகளை அபிவிருத்தி செய்ததன் பயன்களை அவர்களும் அனுபவிக்கின்றார்கள். இந்த வீதிகளால் மட்டக்களப்புக்குச் சென்று தான் அவர்கள் மக்களைக் கொதிப்படையச் செய்தார்கள்.

நாம் தொலைத் தொடர்பு வசதியையும், மின்சார வசதியையும் எல்லா இடங் களுக்கும் வழங்கியதால்தான் டயஸ்போரா அனுப்பிய படங்களை அவர்களால் எல்லா இடங்களிலும் காட்சிப்படுத்த முடிந்தது என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.