புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
UNP காலத்தில் மூன்று தடவைகள் முன்வைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டு

UNP காலத்தில் மூன்று தடவைகள் முன்வைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டு

நீதியரசர் ஒருவருக்கெதிராக குற்றப் பிரேணை ; இது முதற்றடவை அல்ல ;

திஸ்ஸ, ரவி, ஜோஸப் எம்.பி மாரின் கையெழுத்துகள் பதிவு

நீதியரசர் ஒருவருக்கெதிராக குற்றப் பிரேரணைக் கொண்டு வருவது இது முதல் தடவையல்ல என்றும் இதற்கு முன்னர் நீதித்துறையில் முன் வைக்கப்பட்ட மூன்று குற்றப்பிரேரணைகளும் ஐ.தே.கட்சி ஆட்சி காலத்திலேயே முன்வைக்கப் பட்டுள்ளதை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றப் பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த 57 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டிருந்தனர். இதில் முதன்மை கையெ ழுத்தாக கருஜயசூரிய கையொப்பமிட்டிருந்தார். இவரைத் தொடர்ந்து திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணா நாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா போன்றோ ரினதும் கையெழுத்துக்கள் பதிவாகி யிருந்தன.

நாட்டின் ஜனநாயகத்திற் குட்பட்ட சட்டத்திற்கு முரண் பட்ட வகையில் நீதியரசரின் செயற்பாடுகள் இருக்குமாயின் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரு வதற்கு மூன்றிலொரு பெரும் பான்மை யைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் களுக்கு உரித்துண்டு. அந்த வகையில் தற்போதைய பிரதம நீதியரசருக்குகெதிராக சுமத்தப்பட்ட குற்றவியல் பிரேரணையை பெரும்பான்மை யைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத் திட்டு சபாநாயகரிடம் ஒப்ப டைத்துள்ளார்கள். சபாநாயகரால் தெரிவு செய்யப்படும் தெரிவுக் குழு மூலம் இந்தக் குற்றப் பிரேரணை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதன டிப்படையிலேயே பிரதம நீதியரசருக்கெதிராக குற்றப் பிரேரணை சுமத்தப் பட்டுள்ளது என்று பாராளு மன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்துள்ளார்.

இக்குற்றப் பிரேரணை சட்டவிதி அறிமுகப்படுத் தப்பட்ட 25 ஆண்டுகளில் கொண்டுவரப் பட்ட இக்குற்றப்பிரேரணை புதுமை யானதோ அல்லது அறிமுக மில்லாததோர் சட்டமோ அல்லவென்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.