புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 

கிறவுண் அழகுக் கலை நிலையம் வழங்கும் சர்வதேச தரத்திலான சேவைகள்

கிறவுண் அழகுக் கலை நிலையம் வழங்கும் சர்வதேச தரத்திலான சேவைகள்

கிறவுண் அழகுக்கலை நிலையத்தின் மகத்துவமான சேவை சர்வதேச நடைமுறைகளுக்கும், சர்வதேச எண்ணக்கருக்களுக்கும் ஒப்பான சேவைகளை வழங்கி உள்நாட்டில் பெரும் புகழைச் சம்பாதித்துள்ள பார்க் வீதியிலுள்ள கிறவுண் ஹெயார் அன்ட் பியூட்டி அழகுக்கலை நிலையம் ஆண் மற்றும் பெண் வாடிக்கையாளர்களுக்கென பல்வேறுபட்ட பிரத்தியேகமான அழகுக்கலை சிகிச்சை முறைகளை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் முதன்முதலில் அறிமுகமாகியிருந்த இந்த அழகுக்கலை சிகிச்சை முறைகள் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்புடைய விமர்சனங்களைப் பெற்றுள்ளதுடன், உள்நாட்டிலும் படிப்படியாக பிரபலமடைந்து வருகின்றன.

கிறவுண் ஹெயார் அன்ட் பியூட்டி அழகுக்கலை நிலையத்தில் கிடைக்கப்பெறுகின்ற சேவைகளின் புதிய அறிமுக வரிசைகளை அனுபவித்து அது தொடர்பான தமது கருத்துக்களை வெளியிடும்பொருட்டு நீண்ட கால வாடிக்கையாளர்கள் சிலர் இச்சேவைகளை முதன்முதலாக நேரடியாகப் பெற்றுக்கொண்டனர். முகாமைத்துவப் பணிப்பாளரான ரக்கீல் யkன் இது பற்றி விளக்குகையில்,

கிறவுண் அழகுக்கலை நிலையத்தில் செளகரியமான சேவைகளைப் பெற்றுவருகின்ற வாடிக்கையாளர்கள் இங்கு கிடைக்கப்பெறுகின்ற சேவைகளின் தர ஒப்பீடு தொடர்பில் தமது கருத்துக்களையும், விமர்சனங்களையும் வெளிப்படையாகவே தெரிவிப்பர் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எமது அழகுக்கலை நிலையத்தில் சேவையைப் பெற்றுக்கொண்டுள்ள ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவர்கள் மீதான மிகுந்த அக்கறையுடனான பிரத்தியேகக் கவனிப்பைப் பெற்று, உற்பத்தி மற்றும் சேவை தர நடைமுறைகளை அதியுச்ச அளவில் வழங்கும் ஆற்றலையும் நேரிடையாக அனுபவித்துள்ளனர்.

 வெளிநாடுகளிலுள்ள அழகுக்கலை நிலையங்களிலும் பல்வேறு அழகுக்கலை சிகிச்சைகளைப் பெற்றுள்ள அனுபவங்களை இவர்கள் கொண்டுள்ளதுடன், கிறவுண் அழகுக்கலை நிலையத்தின் தர ஒப்பீடு தொடர்பில் பாரபட்சமற்ற கருத்துக்களை அவர்களால் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் தற்போது தொடர்ச்சியாகப் பிரபலமடைந்துவருகின்ற மிலீlish எனப்படுகின்ற அழகுக்கலை சிகிச்சை முறையானது நகப்பூச்சு மற்றும் களிம்பு ஆகியவற்றின் கூட்டுப் பயன்களைத் தருகின்ற களிம்பு (ஜெல்) அடிப்படையிலான ஒரு வர்ண அலங்காரமாகும். ஒரு முறை மிலீlish செய்யப்பட்ட நகங்கள் 2 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்தும் அதே பளபளப்பான பூச்சுடன் ஜொலிப்பது குறிப்பிடத்தக்கது.

வழமையாக தமது கூந்தல் அலங்காரத்திற்காக பார்க் வீதியில் அமைந்துள்ள எமது கிறவுண் அழகுக்கலை நிலையத்திற்கு வருகை தந்து ரவியின் கைவண்ணத்தை அனுபவிக்கின்ற ஆரம்பகால வாடிக்கையாளர்களுள் ஒருவரான அனி டி சில்வா மிலீlish மூலம் கை நகங்கள் மற்றும் கால் நகங்களுக்கான அழகுக்கலை சிகிச்சையை நேரடியாகப் பெற்று அனுபவித்திருந்தார். தனது அனுபவம் தொடர்பில் அவர் விளக்குகையில்,

எனது நகங்களுக்கான அழகுக்கலை சிகிச்சைகளை நான் இதற்கு முன்னர் பல தடவைகள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பெற்றிருந்தேன் என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.