புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 

Business Today TOP TWENTY FIVE நிகழ்வு  சிறப்பாக செயற்பட்ட கம்பனிகளுக்கு கௌரவம்

Business Today TOP TWENTY FIVE நிகழ்வு  சிறப்பாக செயற்பட்ட கம்பனிகளுக்கு கௌரவம்

Business Today TOP TWENTY FIVE விருது வழங்கும் நிகழ்வில் 2011-2012 வரையான நிதியாண்டுக் காலப்பகுதியில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்ட 25 சிறந்த கம்பனிகள் பாராட்டி கெளரவிக்கப்பட்டன.

அண்மையில் கொழும்பு ஹில்டனில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிதாக சிறப்பாகச் செயற்பட்ட கம்பனிகளை ஊக்குவிப்பதற்காகவும் ஏற்கனவே திறமையாகச் செயற்பட்டுவரும் புளுசிப் கம்பனிகளைப் பாராட்டுவதற்காகவும் தரவரிசை இருபத்தைந்தாக இத்தடவை அதிகரிக்கப்பட்டிருந்தது.

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவும் கெளரவ விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தனர்.

மீண்டும் ஒரு தடவை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் முதல் இடத்தைத் தட்டிக்கொண்டதன் மூலம் இலங்கையின் பலம்பொருந்திய பிரஜைகள் கம்பனி என்ற தகுதியை இது மீளவும் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது. குழுமத்தின் வருமானம் 76.70 பில்லியன் ரூபாயாக அதிகரித்து 27வீத முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

இது போக்குவரத்துத்துறையில் மட்டுமன்றி பொழுதுபோக்கு மற்றும் நுகர்வோர் உற்பத்திகள், சில்லறை வியாபாரம் ஆகியவற்றிலான ஒட்டுமொத்த அதிகரிப்பாகும்.

புகிட் டரா மற்றும் இலங்கை வர்த்தக வங்கி ஆகியன முறையே இரண்டாவது மூன்றாவது இடங்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளன. புகிட் டராவின் வரிக்குப் பிந்திய லாபம் 107பில்லியன் ரூபாயாக ஏழுவீத அதிகரிப்பைக் காட்டிய வேளையில் இலங்கை வர்த்தக வங்கியின் வரிக்குப் பின்னரான லாபம் வரலாற்றில் முதல் தடவையாக 45.71 வீதத்தால் வளர்ச்சி கண்டு 8.048 ரூபாயைப் பதிவு செய்து கொண்டுள்ளது.

Business Today TOP TWENTY FIVE  விருதுப் பட்டியலில் இடம்பெற்ற நிறுவனங்கள் டிசம்பர் 31,2011 அல்லது மார்ச் 31,2012 உடன் முடிவடைந்த நிதியாண்டுக் காலப்பகுதியில் அவற்றின் சிறப்பான நிதிசார் செயற்பாடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யபட்டிருந்தன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.