புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 

ICTA க்கு விருது

ICTA க்கு விருது

இலங்கைத் தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் முகவர் நிலையம் இவ் ஆண்டுக்கான பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்கிழக்காசிய ஒன்றிய நாடுகள் (சாக்) விருதினைப் பெற்றுக்கொண்டது. தெற்காசியாவில் மிகச் சிறந்த அரசசேவையினை வழங்கும் நிறுவனமாகத் தெரிவு செய்யப்பட்டே இவ்விருது வழங்கப்படுகின்றது. அண்மையில் தாய்லாந்தில் இடம்பெற்ற பியுச்சர் கவ் எனும் சர்வதேச உச்சிமாநாட்டின் போதே இவ்விருது வழங்கப்பட்டது.

இவ் ஆண்டின் பியுச்சர் கவ் மாநாடு மற்றும் விருது விழாவில் அவுஸ்திரேலியா, கனடா, சீனா, இந்தியா, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஹொங்கொங், தாய்வான் மற்றும் இலங்கை உட்பட ஏறத்தாழ 20 நாடுகள் பங்குபற்றின. இவ் உச்சிமாநாட்டில் தத்தம் நாடுகளில் மக்களுக்கு அரசாங்கத் துறையினால் வழக்கப்படும் சேவைகள் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ள விதம் பற்றிய ஆக்கங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இறுதி கட்டத்தில் 93 ஆக்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

சிறந்த அரசதுறைக்கான விருது இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்காசிய ஒன்றிய நாடுகளிலுள்ள ஏனைய அரசதுறை அமைப்புகளை விட இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் சிறந்தது என்பது மேற்படி விருது மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஆண்டில் அரசதுறையில் மிகச் சிறந்த நாட்டுக்கான விருதுகள் ஐந்து உப - பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன. (1) பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்கிழக்காசிய ஒன்றிய நாடுகள் (2) வட ஆசிய நாடுகள் (3) ஓசியானியா நாடுகள், (4) மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் (5) தென் கிழக்கு ஆசிய நாடுகளின் ஒன்றிய அல்லது ஆசியான் நாடுகள் ஆகிய ஐந்து உப பூகோள பிரிவுகளுக்குக் கீழ் அரச துறை அமைப்புகள் கவனிக்கப்பட்டன.

இதன்படி ஹொங்கொங் பொலிஸ், மேற்கு அவுஸ்திரேலிய உள்ளூராட்சி திணைக்களம், பாரேன் ஈ-அரசாங்க அதிகார சபை மற்றும் இந்தோனேசியாவின் சுரகர்தா நகர அரசாங்கம் ஆகிய அமைப்பு முறைப்படி (1) பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்கிழக்காசிய ஒன்றிய நாடுகள் (2) வட ஆசிய நாடுகள் (3) ஓசியானியா நாடுகள், (4) மத்திய கிழக்கு நாடுகள் ஆகியன விருதுகளைப் பெற்றுக்கொண்டன.

இக்டாவின் அரசதுறை புத்துருவாக்கம் நிகழ்ச்சித்திட்டத்தின் நிர்வாகம் மற்றும் நடவடிக்கைகள் முதல்வர் டி.சி.திசாநாயக மற்றும் இக்டாவின் பிரதான நிறைவேற்றதிகாரி ரெஷான் தேவபுர பியுச்சர் கவ் சஞ்சிகையின் பொது ஆசிரியராகிய லோரன்ஸ் மிலரிடமிருந்து விருதினைப் பெற்றுக்கொள்கின்றனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.