புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 

குமார் டி சில்வாவுக்கு பிரெஞ் அரசின் கௌரவ விருது

குமார் டி சில்வாவுக்கு பிரெஞ் அரசின் கௌரவ விருது

பிரெஞ்சு நாட்டு அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான தூதுவர் திருமதி கிறிஸ்டின் றொபிஷோன் Chevalier dans 1 ‘Ordre des Arts et des Lettres (Chevalier in the Order of Art and Letters)  என்ற கெளரவ விருதை குமார் டி சில்வாவிற்கு வழங்கி கெளரவித்தார். கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் அதிகமான காலம் இலங்கையில் பிரெஞ்சு கலாசாரத்தை ஊக்குவிப்பதற்காக குமார் டி சில்வா ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பினை கெளரவிக்கும் விதத்திலேயே இம் மதிப்பிற்குரிய விருதை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

பாரிஸ் நகரில் பயிற்சி பெற்றுள்ள டி சில்வா, இலங்கையில் கடந்த 25 வருட காலமாக ஒளிபரப்பப்பட்டுவந்த பிரெஞ்சு கலாசாரத்தை மேன்மைப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான கிonsoir இன் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர் என்பதற்காக கெளரவிக்கப்படுகின்றார்.

பிரெஞ்சு தூதரக கலாசார பிரிவின் அனுசரணையுடன் ஒளிபரப்பப் பட்ட Bonsoir நிகழ்ச்சியானது, 1985 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிரெஞ்சு நாட்டின் சிறப்பம்சங்களை இலங்கையர்கள் கண்டுகளிப்பதற்கு மிகச் சிறந்ததொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக விளங்கியது. முதலில் சுயாதீன தொலைக்காட்சி சேவையிலும் (ITN) பின்னர் ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையிலும் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.