புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
இலங்கை-பங்களாதே~; கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

இலங்கை-பங்களாதே~; கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு செயல் வடிவம்

இலங்கை - பங்களாதேஷ் கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் 4 வது கூட்டத் தொடர் பங்களாதேஷ் டாக்கா நகரில் மார்ச் மாதம் 7ம் மற்றும் 8ம் திகதிகளில் நடைபெற்றது. 3 வது கூட்டத் தொடர் 19 ஆண்டுகளுக்கு முன்பு 1993ம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்றது. இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஆண்டு பங்களாதேஷத்திற்கு அரச விஜயத்தை மேற்கொண்ட போது இரு நாடுகளுக்கிடையிலான கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் நடாத்தப்பட வேண்டியதன் முக்கியத்து வத்தை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, 4 வது கூட்டத் தொடர் பங்களாதேஷத்தில் நடாத்தப்பட்டது.

கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையின் கீழ் உயர் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று பங்குபற்றியது. பங்களாதேஷின் சார்பில் பங்களாதேஷ் நிதி அமைச்சர் அப்துல் மால் அப்துல் முஹீத் தலைமையில் பிரதிநிதிகள் குழுவொன்று பங்குபற்றியது.

இந்த ஆணைக்குழுவின் 4 வது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர் ரிசாத் பதியுதீன், 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை ஜனாதிபதி பங்களாதேஷத்திற்கு அரச விஜயத்தை மேற்கொண்டு செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு சிறந்த பொறிமுறை எனக் கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

நீண்ட காலகமாக இலங்கையும் பங்களாதேஷமும் சிறந்த உறவுகளை பேணி வருகிறது. இரு நாடுகளுக்குமிடையே சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் ஒருமைபாடுகள் உள்ளன. பங்களாதேஷமும் இலங்கையும் “சார்க்” நாடுகளின் அமைப்பிலும் உறுப்பினர்களாக உள்ளன. சார்க் நாடுகள் பூகோள ரீதியாக ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய நிலையில் இருக்கின்ற போதிலும் உலக நாடுகளுடனான அந்நாடுகளின் வர்த்தகம் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது 5 வீதத்திற்கு குறைவாகவே உள்ளது.

இலங்கைக்கும் பங்களாதேஸ¤க்கும் இடையிலான வர்த்தகம் கெளரவமானதாகவும் ஸ்திரமானதாகவும் உள்ளது. கடந்த 4-5 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் முன்னேற்றம் காணப்பட்டுள் ளது. இலங்கையிலிருந்து பங்களாதேஷிற் காக ஏற்றுமதியின் பெறுமதி கடந்த 05 ஆண்டுகளில் 150 வீத அதிகரிப்பை காட்டுகிறது. அதே மாதிரி பங்களாதேஷிலிருந்து இலங்கைக்கான இறக்குமதி 100 வீதம் அதிகரித்துள்ளது. இலங்கை பங்களாதேஷ் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு ஒத்துழைப்பின் கீழ் சிறு கைத்தொழில், விமானச் சேவைகள், சுற்றுலா, கப்பல் சேவை மற்றும் கலாசார ஒத்துழைப்புகளை விரிவாக்குவதற்கு இரு நாடுகளும் உடன்பட்டுள்ளன. மிஹின் லங்கா கொழும்புக்கும் டாக்காவிற்கும் இடையில் விமானச் சேவையை நடத்துகிறது. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் வர்த்தக திணைக்களம் விமானச் சேவைகள் உடன்படிக்கையை மீளாய்ந்து தற்போதைய தேவைகளை ஈடுசெய்யக் கூடியதாக விமானம் மூலம் பொருட்களை அனுப்பு வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கருதுகிறது.

இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வளர்ப்பதற்கு இந்த கூட்டாணைக்குழுவை நாங்கள் அதி உச்ச அளவு பயன்படுத்துதல் வேண்டும். இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் ஒரு சில பொருட்களிலேயே தங்கியுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக பரிமாற்றங்களின் பெறுமதி 71 மில்லியன் யு.எஸ். டொலர்களாகும். இது நாங்கள் எதிர்பார்க்கும் வர்த்தக பரிமாற்றங்களிலும் பார்க்க மிக்க குறைந்தளவாகவே உள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை நாங்கள் மேலும் விரிவுபடுத்தலாம். பங்களாதேஷில் பல இலங்கையர்கள் முதலீடு செய்துள்ளார்கள். முக்கியமாக ஆடை உற்பத்தித்துறையில் முதலீடு செய்துள் ளார்கள். அதே போன்று அந்நாட்டில் முதலீட்டார்களை இலங்கையும் வரவேற்க விரும்புகிறது. இலங்கையில் வெளி நாட்டவர்கள் 100 வீதம் முதலீடுகளை செய் வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. 2009ம் ஆண்டு மே மாதத்தில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இலங்கை ஒரு புதிய அத்தியாயத்தில் காலடி எடுத்து வைத்துள் ளது. இலங்கை இன்று நிலையான சமாதானம் நிலவும் நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூரநோக்கின் கீழ் இலங்கையின் அபிவி ருத்தி துரிதமாக நடைபெற்று வருகிறது. உலகத்தின் பொருளாதார வளர்ச்சியில் மந்தம் ஏற்பட்டுள்ள போதிலும் இலங்கை யின் பொருளாதாரம் 8 வீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷிற்கு உத்தியோக பூர்வமாக விஜயம் செய்து இரு நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையை கவனத்திற்கெடுத்து இலங்கை பங்களா தேஷிற்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கை- பங்களாதேஷின் கூட்டு பொருளாதார ஆணைக்குழுவின் அமர் வுகளை ஒவ்வொரு இரு வருடத்திற் கொருமுறை நடத்துவதன் மூலம், மேலும் எமது நாடுகளுக்கிடையிலான உறவினை பலப்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் ரிசாத் பதியுதீன் எதிர்வரும் 2014ம் ஆண்டில் இலங்கையில் இந்த தொடர் இடம்பெறும் என்றும் கூறினார்.

இலங்கை ஈடுபாட்டுடனும் அர்ப்பணத் துடனும் இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்கு செயற்படுமென அமைச்சர் ரிசாத் பதியுதீன் தமது நம்பிக்கையினை வெளியிட்டுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.