புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
~சர்வதேச மன்னிப்பு சபையின்

~~சர்வதேச மன்னிப்பு சபையின்

நம்பகத்தன்மை'' ஒரு நோக்கு

ஒரு நிறுவனத்துக்காக நிதிசேகரித்தல், தொண் டாற்றுதல், சிறப்பேற்பாடு களை மேற்கொள்ளல், தன்னார்வ நட வடிக்கைகளில் ஈடுபடுதல் அனைத்துமே ஏற்புடமை கொண்ட நடவடிக்கைகளே! குறித்த நிறுவனம்- பலராலும் ஏற்றுக் கொள் ளத்தக்கதான பொதுவானது ராஜதந்திரம் மிக்கதுமான நடவடிக்கைகள் மேற் கொள்ளத்தக்கதானதாக இருக்குமிடத்து அதன் நம்பகத்தன்மை கட்டுக்குலையாததாக இருத்தல் வேண்டும் என்பது பலராலும் ஒத்துக் கொள்ளத்தக்கதே! அந்தவகையில் அத்தகைய ஸ்தாபனம் தனது நடுநிலைப் போக்கைத் தக்கவைத்துக் கொள்வதும், அதற்கேற்றவாறு பணியாற்றுவதும் அத்தியாவசியமானதாகும்.

சர்வதேச மன்னிப்புச் சபை

சர்வதேச மன்னிப்பபுச்சபையானது- சர்வதேச அரச சார்பற்ற ஒரு நிறுவனமாகும். சமகாலத்தில் இலங்கையை குற்றம் பிடி க்கும் நிறுவனங்களில் ஒன்று. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள்’ அமுலாக்கம், பொறுப்புக்கூறல், வெளிப்படைத் தன்மை, நியாய விசாரணை என்றெல்லாம் இல ங்கை மீது நிறைவேற்றுப் பொறுப்புகளை சுமத்தி வருகின்ற சர்வதேச மன்னிப்புச் சபையும் இலங்கைக்குப் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு உண்டு என இலங்கை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு கின்றனர்.

தார்மீகமென்ன?

இலங்கையினதும் இலங்கை அரசாங் கத்தினதும் பரம விரோதிகளாக இருந்தவர்கள் புலிகள். எச்சசொச்சமானவர்கள் அல்லது எச்சசொச்சமான நடவடிக்கைகள் தொடர் பாகவும் அரசாங்கம் அவ்வப்போது கூறிவருவதையும் அறிந்து கொண்டிருக்கி றோம். இந்த நிலையில் நாடு கடந்த தமிbழ அரசாங்கம் என்ற போர்வையில் கனடாத் தமிழர் இணையம்- சர்வதேச மன்னிப்புச் சபைக்காக நிதி சேர் நடை பயின்று நிதி சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை படங்கள் மூலமும், செய்திகள் மூலமும் தெரியவந்துள்ளது. இங்கு நிதிசேர்த்ததும், சேர்த்துக் கொடுத்தமையுமல்ல பிரச் சினை- சர்வதேச ரீதியாக, மனித உரிமைகளுக்காக போராடும் சர்வதேச நிறு வனமொன்று குறித்த தமிழர் இயக்கத்திடம் பணம் பெற்றுக் கொண்டு மனித உரிமை சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள இலங்கையில்- குறிப்பாக தமிழர் தொடர்பாக மனித உரிமை மீறல் குற்றச்சாட் டுக்காக இலங்கையை கேள் விக்குட்படுத்தும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தார்மீகம் என்ன என்பதே இலங்கைப் பெரும்பான்மைச் சமூகத்தின் கேள்வியாகவுள்ளது.

அடைக்கலம்

பதங்களை விட படங்கள் கூடுதலாக பேசும் என்பது போல நிதிசேர் நடைப வனியுடன் கூடியதான படங்களும் வெளியாகியுள்ளன. மனித உரிமைகளுக்காக பிரசாரம் பண்ணுகின்றதேவேளை, அதன் மர்மமான பங்கையும் சர்வதேச மன்னிப்புச் சபையாற்றியுள்ளதை காணமுடிவதாக கூறப்படுகிறது. நியூயோர்க்கை தளமாகக் கொண்ட சட்டத்தரணி விஷ்வநாதன் ருத்திரகுமாரன் என்பவரால் தலைமை தாங்கப்படும் ருத்ரகுமாரன் பிரிவு எனத் தெரியவரும் நாடு கடந்த தமிbழ அரசுடன் சர்வதேச மன்னிப்புச் சபையின் தொடர்புபற்றிய புலனாய்வு வட்டாரங்களின் தகவல்களுடன் மீதி, மிச்சமாக உள்ள புலிகளுக்கு சர்வதேச மன்னிப்புச் சபையும் ஒரு அடைக்கலமாக உள்ளமை வெளிப்படையாகிறது.

ஆதாரம்

கனடாவில் புலிகளின் ஆதரவுக்குழு வுடன் மன்னிப்புச் சபைக்குள்ள தொடர் புகளுக்கு பணம் சேகரிப்பையும் விட மேலதிக சான்று தேவையில்லை. கனேடிய தமிழ் காங்கிரஸ் தங்களது இணையத்தளம் மூலமாக வெளியாக்கிய நிதிதிரட்டல் படங்களை காண்கையில்- பயங்கரவாத தேவைகளுக்காக பணம் திரட்டும் பிரபல்ய குழு ஊடாக நிதி சேகரிப்பதன் மூலம் மக்களின் உரிமைகளை எவ்வாறு மனித உரிமைகள் காப்பாளரான மன்னிப்புச் சபை மீறியுள்ளது என்பதை அவதானிக்க முடிகிறதாம்.

ரூபணம்

தங்களது வழியைப் பின்பற்றாத அல்லது எதிர்த்தவர்களையும், சொந்த இனத்தைச் சேர்ந்தவர்களையும் துவம்சம் செய்ததன் மூலம் மனித உரிமைகளை மீறிய புலிகளுடன் தோழமை பூண்டு சார்புப் போக்கை - மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து அர்ப்பணிப்புடன் பணி யாற்றுவதாக கூறும் மன்னிப்புச் சபை கடைப்பிடித்துள்ளமை கவலையளிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அந்த வகையில் இந்த மனித உரிமைகள் பாதுகாப்பாளராக சுய பிரகடனம் செய்து கொண்டவரான மன்னிப்புச் சபை எல்.ரி.ரி.ஈ. யினால் புரியப்பட்டதான வெறுக்கத்தக்க குற்றங் களை எவ்வாறு மறந்திருக்க முடியும் என கேள்வி எழுப்பப்படுகிறது.

விடை தேடல்

தங்களது அபிலாஷைகளை நிறை வேற்றிக் கொடுக்கும் ஒரு நிறுவனத்தின் சார்பிலான உரிமைக் கோரிக்கைக்கு தலைசாய்க்கும் வகையிலான இலங்கையில் பொறுப்புக்கூறல் கடப்பாட்டுக்காக சர்வதேச விசாரணை கோரி கூக்குரலிட எந்தடிப்படையில் சர்வதேச மன்னிபுச் சபையால் முடியும் என்ற கேள்விக்கு இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் விடை தேடுகிறார்கள். பொறுப்புக் கூறல் கடப்பாடு தொடர்பில் ஜெனீவாவில் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு கனடாவில் தமிழ் இணையம் ஆதரவு தேடுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை கனடாவால் பல்வேறுதரப்பட்ட விசா ரணைகளுக்குட்படுத்தப்பட்டு தற்சமயம் அமெரிக்கத் தடுப்புக்காவலில் உள்ள ஆயுதக் கொள்வனவு தொடர்பான முக் கிய நபர் ஒருவரின் சகபாடியாக சர்வதேச மன்னிப்புச் சபைக்கு நன்கொடை வழங் கிய தமிழ் இணையத்தளத் தலைவர் திகழ் வதாக புலனாய்வு விட்டாரங்கள் தெரி விக்கின்றன. கனடாவிலுள்ள புலிச்சார்பு இயக்கம் வெளிப்படையாகவே எலர்.ரி.ரி.ஈ. கோட்பாடுகளை விருத்தி செய்து நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், முன்னணி புலி சார்பு இயக்கத்தின் குறி க்கோளுக்கு துணை நிற்பதன் மூலம் தங் களது மடத்தனத்தை சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச ஸ்தாபனம் காட்சிப்படுத்த முனையக்கூடாது என்று காட்சிகளை கண்ணுற்றோர் கூறுகின்றனர்.

மனித உரிமைகள் காப்பகம்

முன்னர் ஒருதடவை மனித உரிமைகள் காப்பகம், வருடாந்தம் கனடாவில் வாழும் 250,000 க்கு மேற்பட்ட தமி ழர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய் வதாக புலிகளை குற்றஞ்சாட்டியிருந்தது. அதேநேரம் கனடாவிலுள்ள தமிழ் இயக்கமொன்றின் தீவிர அங்கத்தவராக இருந்த ஒருவர்- இலங்கையிலுள்ள தற் போதைய அமைதியை சீர்குலைக்குமாதலால், கனேடிய தமிழ் இணைய பிரசாரத்தால் பிழையான வழிகாட்டலுக்கு உள்ளாக வேண்டாம் என்று அங்குள்ள தமிழர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய பங்காற்றுகை

பயங்கரவாதிகளே படு மோசமான மனித உரிமை மீறல்காரர்கள். அதற்கு புலிகள் விதி விலக்கான வர்களல்ல. அவர்களும் முதன்மை உதாரணத்துக்கு கொண்டுவரப்படலாம். புலிகளின் முன்னணி நிறுவனங்கள் நிதியளித்து மனித உரிமை நிறுவனங் களுக்கு ஆதரவளித்துள்ள தாக அந்த முக்கிய நபர் கூறினார். இலங்கையில் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பிறகு வெளிநாடுகளிலுள்ள முன்னணி அலுவலகங்கள் மனித உரிமைகள் தொடர்பான செம்பியன்கள் என்ற புதிய பங்காற்று கையை ஆரம் பித்தது. ஒரு கட்டத்தில் மோசமான மனித உரிமை மீறல்களைப் புரிந்த எல்.ரி.ரி.ஈ., ஒரு புறமிருக்க இன்றைய அவர்களுடைய சகபாடிகள், பிரசாரகர்கள், நிதியிடுவோர், ஆயுதகொள்வனவு உத்தியோகத்தர்கள் போன்றோர் மனித உரிமைப் பேரவையை நோக்கி கவனம் செலுத்தியுள்ளனராம்.

அவசியம்

சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் மேற்குலகுள்ளும் தங்களது கால்களை நீட்டியுள்ள பயங்கரவாத சார்புக் குழுக்களின் நிதிநிலைமைகளை அறியாமலல்ல. இத்தகைய பணம் படைத்த பயங்கரவாத குழுக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தங்களது இருப்புக்காகவும், கூட்டு நடவடிக்கைகளுக்காகவும் பணம் தேவையே, அதேநேரம் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் பேரவை போன்ற ஒவ்வொரு அமர்வுகளின் போதும் பயங்கராவத குழுக்களின் நிகழ்ச்சி நிரலை உயிரோட்டமுள்ளவையாக வைத்திருக்க வேண்டிய தேவை அத்தகைய குழுக்களுக்கு அவசியமாக உள்ளது.

அர்த்தமற்ற அக்கறை

இப்பேற்பட்ட குழுக்கள் தொடர்பில் அக்கறை கொண்டு மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக கவலையை வெளிப்படுத்த முயற்சிப்பது சர்வதேச மன்னிப்பு சபையை பொறுத்தவரை வெட்கப்படக் கூடிய விவகாரமில்லையா என்ற கேள்வியை ஆர்வலர்கள் எழுப்புகின்றனர். எந்த அடிப்படையில் அவர்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கவலை கொண்டு சமாதானத்தையும், அமைதியையும் ஊக்குவிப்பவர்களாக இருக்க முடியும்?

இதேவேளையில், உலகமே கண்வைத்துக் கொண்டிருந்த இலங்கைக்கு எதிரான உத்தேச பிரேரணை அல்லது தீர்மானம் எதிர்பார்த்த காலப்பகுதிக்கு முன்பாகவே பேரவை முன்பாக வைக்கப்பட்டுள்ளது. தோல்வி வெற்றிக்குப் புறம்பாக எடுத்த சபதத்தை நிறைவேற்றியே தீருவது என்பது போன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையின் அற்புதம் யாதெனில்- நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்குங்கள் என்பதாகும். அத்துடன் அது தொடர்பான சட்டக்கடப்பாடுகள் மற்றும் சகல இலங்கையர்களுக்குமாக நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், சமத்துவம், நீதி போன்றவற்றை நிச்சயப்படுத்துவதற்காக நம்பத்தகுந்ததும், சுயாதீனமானதுமான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அர்ப்பணசிந்தையை வெளிப்படுத்துமாறும் பிரேரணை கோருகிறது.

அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை மீறியதான குற்றச்சாட்டுகள் போன்றன தொடர்பில் புரிந்து கொள் ளத்தக்கதான வேலைத்திட்டத்தையும் எதிர்பார்க்கிறது எவ்வாறாயினும் பல நாடுகளது வாதப் பிரதிவாதங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் உள்ளாகக்கூடிய பிரேரணையை வென்றெடுப்பதற்கு கடு மையான பிரயத்தனங்களில் ஈடுபடவேண் டிய தேசியக் கடமை அரசாங்கத்துக் குண்டு ஏனெனில் அமுலாக்கங்களு க்கான பணியை அரசாங்கம் முன் னெடுத்துள்ளதாகவும் பிரேரணை முன் வைக்க வேண்டிய தேவை கிடையாது என்று இலங்கை அமைச்சர்கள் சுட்டிக் காட்டிய பிறகுமே பிரேரணை முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


போகிற போக்கில்...

நினைச்சுப் பார்த்தால் நல்லது!

தம்பப்பா... ஒரு கிழமை சிலமனைக் காணும் என்ன நீங்களும் ஜெனிவாவுக்கு போனனிங்களோ? ஒவ்வொரு நாளும் பேப்பரிலை ஜெனிவாக் கதைதான் அனல் பறக்கிது. உங்களையும் காணக்கிடைக்கியில்லை. கண்டால் 'லோக்கல்' பொலிற்றிகிள் ஆவது கொட்டித் தீப்பியள் உங்கடை அபிப்பிராயம் என்ன தம்பப்பா கொஞ்சம் நிதானமாச் சொல்லுங்கோ பாப்பம்.

தம்பி பொடி நானும்கொஞ்சநாளாப் பார்க்கிறன் நீயும் கொஞ்சம் கொஞ்சமாய் அரசியலை பிடிக்க விரும்புறாய் போல. வந்ததும் வராததுமாய் தம்பப்பாவின்ர சுகதுக்கத்தை விசாரிப்பாய், நல்லது கெட்டதைக் கேப்பாய் என்று பார்த்தால் ஒரே அடியா ஜெனீவாவுக்கு பறக்குறாய். இங்கனேக்க சனங்கள் கதைக்கிறமாதிரி என்ன மகிந்தவுக்கு ஜெனீவாவில் இருந்து பிடிவிறாந்தோ வரப்போகுது அல்லது அரசாங்கத்தை தள்ளி விழுத்திப் போட்டு வேறேயாரையும் கொப்பிலை ஏத்தப் போகினமே சும்மா விடடா? பொடி என்ற கணக்கில பார்த்தால் பெரிசாய் அங்கை எதுவும் நடக்கப் போறதில்லை.

இது சம்பந்தன் ஐயாவுக்கு நல்லாய் விளங்கிப் போச்சு. அவளாரோ ஒருத்தி அரசனோடை வாழ்க்கைப்பட எண்ணி புரிசனைக் கைவிட்ட மாதிரி. யார் யாரையோ நம்பி பெற்ற சலுகைகளை முழுசா தூக்கி எறியமனம் வருமோட தம்பி வசதி, என்ன வாழ்க்கையடாதம்பி, இதை முழுசாய் துறந்து ஏகப்பிரதிநிதிக் கதைக்கு கைகட்டி மறுமொழி கூற மனம் வருமோட இவையள் ஊதிப் பெருப்பிக்க பெருப்பிக்க அரசாங்கமும் மனுத்தான் கொடுத்தால் இவையள் என்ன அமெரிக்காவிலையே இருக்கினம். கணக்கை எல்லாப் பக்கமும் கூட்டிக் கழிச்சுப் பாத்து சம்பந்தன் ஐயாவும் சுமேந்திரன் தம்பியும் தமிழர்களின் நலன் கருதி ஒரு முடிவுக்கு வந்தவையாம். தாங்கள் ஜெனீவாவுக்கு போறதில்லை எண்டு எடை பொடி இப்ப ஐயா எடுத்த முடிவு சரி பிழையைவிட அவன் தமிழ் சனத்தின்னார... நலனுக்காகத்தான் எடுத்தார் எண்டு சொல்லுறதை என்னாலை ஏற்க முடியாது. நாங்கள் முள்ளிவாய்க்கால்லை பட்ட வேதனைகள், இழப்புக்கள் மட்டுமல்ல வீட்டிலும் ஏதாவது ஒரு வரலாற்றுப் பதிவு இல்லாமல் இருக்கோ, அந்த நேரத்தில சரியாய் சிந்தித்து ஒரு பாதையை காட்டி இருக்காமல்லோ. எத்தனை பொடி பொட்டை நாள் குறித்து விருந்துண்டு, ஒரு இனத்தின்ர வாழ்வுக்காக அன்று விதையாய் போனது. சிந்தித்து வழிகாட்டி, தலைவனையும் காப்பாற்றி, மக்களையும் பாதுகாத்திருக்கலாமல்லோ? ஜெனீவாவுக்கு போகாமல் விட்டதுக்கு ஐயாவில இருந்து அடிமட்டத் தொண்டர் வரை காரணங்களை கண்டுபிடிச்சு கூறுவதை பார்த்தால் இது என்ன இயலாமையோ? அல்லது அறியாமையோ?

நடந்த போரில விளைவுகளை சரியாக சிந்தித்து அழிவுகளில் இருந்து மக்களையும், மண்ணையும் காப்பாற்ற எண்ணாது அதுக்கான ஒரு சரியான முயற்சியையும் செய்யாது ஒரு நிதானமான அறிக்கையைக் கூட சர்வதேசத்துக்கு கொடுக்காது எல்லாம் தப்பி விட்ட வழி என்று தாங்கள் தாங்கள் குடும்பங்களும் இந்தியாவிலும் வெளிநாடாலும் சாதகமாக இருந்திட்டு எல்லாம் முடிந்த பிறகாவது தம்பி. கொடுத்த பதவியினையும் பட்டங்களையும் தூக்கி எறிந்துவிட்டு நியாயத்துக்காக வீதிக்கு வந்திருந்தால் வரலாறு வாழ்த்தி இருக்கும். நாங்களும் கம்பி வேலிக்குள்ளும் மீண்டும் ஒரு மிடுக்கும் பெற்றிருப்போம்.

யார் எதை சொன்னாலும் கம்பி வேலிக்குள் இருந்து விடுபட்டு தற்காலிக கொட்டில் வந்து நிரந்தர வீடு வந்து வாழ்வாதாரம் என்னும் பல வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் இந்த அரசு ஓரளவாவது நியாயத்தை காத்துநடக்கின்றது என்பதை மனச்சாட்சி இருந்தால் ஏற்கத்தான் வேணும். இதுக்கு மாவைத்தம்பியும் சம்பந்தன் ஐயாவும் விதிவிலக்காக இருக்க முடியாது. ஆனால் புலம் பேர் தமிழர்களை நாங்கள் இவங்களோடு பார்க்க முடியாது. காணிவித்து, பணம், பொன், சொத்துக்கள், எல்லாம் கொடுத்து ஒழித்துப் பதுங்கித்தான் முக்கால் வாசிப் பேர் கரை சேர்ந்துதுகள். அதுகள் இன்று வந்து வாழ ஏலாது தான் வாழவும் முடியாது. தங்கட வாழ்வை தப்பவைக்க வேணும்தானே. அதுகள் அங்கள கொடி பிடிக்கிறதை யாரும் குறை சொல்ல முடியாது. குறை கொள்ளவும் கூடாது அதுகள் அங்கை போனதால் இங்கையும் சில பேர் வசதி வாய்ப் போடதானே இருக்கினம். அவை அங்கை நல்லாய் கதைக்கட்டும் தங்கட வாழ்வுக்கும் வசதிக்காகவும்.

அவை அங்கை வாழும் பொழுது எங்களையும் வாழவிட வேணும் இதுதான் பொடி முக்கியம்.

இப்ப உது எனக்கு நல்லாய் விளங்கும் அவைக்கு உண்மையான தேசியம் இன விடுதலை வேகம் இருந்தால் வன்னிப் பொடியனோட புலம் பேர்ந்தவையின்ர பொடியழும் நிண்டெல்லோ போராடி இருப்பினம். அப்பிடி யாராவது அங்க கொடி பிடிக்குன்றவையின்ர ஆட்கள் முள்ளிவாய்க்காலில் நின்டவையோ இஞ்ச நின்றவையும் எவ்வாறு செலவானாலும் வாறதுக்கு பாருங்கே. அண்டு சொன்னதை ஏற நினைச்சுப் பார்த்தால் நல்லது. அப்ப ஜெனீவா பிகடனம் என்னவாகும் உங்கட கருத்த சொல்லுங்கோ.

எட பொடி என்ன நடக்கப் போகுதென்டுதான நினைக்கிறன பெரிசாய் ஒண்டும் வெட்டி விழப்போறதில்லை. வெட்டி விழுந்தால் சர்வதேசமே ஒரு பெரிய நெருக்கடிக்குள்ளே விழ வேண்டி வரும். எங்கட அண்டை நாடு மிகவும் பாதிப்புக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால மெளனம் சம்மதம் என்ற நிலையை எடுக்க வேண்டி வரலாம். ஆனால் சர்வதேச வல்லுநர்கள் உள்ள நாடான அண்டை நாடு உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காது. பூகோள நலனுக்காக இலங்கையோட நிற்கவும் சாத்தியம் உண்டு எல்லாத் திற்கும் மேலாலை கற்றுக்கொண்ட பாடங்கள் நடை முறைப்படுத்த ஒரு ஆறு. ஏழு மாதத்தை இலங்கைக்கு கொடுத்து சூட்டை ஆத்தவும் உலகம் யோகிக்கலாம். உலக ஒழுங்கை சிதைக்க முயல்பவர்கள் இப்ப பலமாக வாங்கி கட்டும் நிலையும் காணப்படுவதை அவதானிக்க வேண்டியெல்லோ கிடக்குது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.