புத் 64 இல. 10

கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 11

SUNDAY MARCH 04,  2012

 

தாமரை மலரிதழைப் போன்ற சருமம்; ''லக்ஸ்'' பேர்பிள் லோட்டஸ்

தாமரை மலரிதழைப் போன்ற சருமம்; ''லக்ஸ்'' பேர்பிள் லோட்டஸ்

பெண்களின் சருமப் பராமரிப்புத் தயாரிப்புக்களை வழங்குவதில் முன்னணியில் திகழும் லக்ஸ் அண்மையில் தனது மற்றுமொரு புதிய ரகத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ‘லக்ஸ் பேர்பிள் லோட்டஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. அழகு சேர்த்திடும் எண்ணெய் வகைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் இந்த புதிய பேர்பிள் லோட்டஸ் சோப் வகை தற்போது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய ரகம் குறித்து யுனிலீவர் நிறுவனத்தின் சரும பராமரிப்பு தயாரிப்புகளின் சந்தைப்படுத்தல் அதிகாரி சாமிளா பண்டார கருத்துத் தெரிவிக்கையில், “நறுமணத்துடன் திகழ்வதற்கும், நறுமணத்துடனான சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கும் பெருமளவான இளம் பெண்கள் விரும்புகின்றனர். ஆகக்குறைந்தது ஒரு நாளைக்கு சில நிமிடங்களாவது தமது வேலைப்பழுவை குறைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காண்பிக்கின்றனர்.

இந்த புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளதன் நோக்கம், இலங்கையர்களின் சிந்தனைக்கு மிகவும் அண்மித்ததாகக் காணப்படுவதால் நவீன பாணியில் தமது வாழ்க்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பெண்களுக்கு தீர்வாக அமையும் வகையில் உள்ளது” என்றார். தாமரை என்பது கலாசார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மலராகும் இந்த மலர் தூய்மை, சிறந்த ஆரோக்கியம், சாந்தி, செழுமை தெய்வீகம் போன்றவற்றை பண்டைய காலம் தொட்டு பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதுடன் தாமரை மற்றும் தாமரை எண்ணெய் போன்றன பெண்களின் அன்றாட அழகு சாதன மூலமாக உலகளாவிய ரீதியில், எகிப்து, இந்தியா தாய்லாந்து, மற்றும் இலங்கை உள்ளடங்கலாக திகழ்கிறது

 தற்போதய நவீன யுகத்திலும், தாமரை மற்றும் தாமரை எண்ணெய் போன்றன நறுமண சிகிச்சையில் கிருமி நீக்கி சுருக்கம், தூய்மை மற்றும் கலங்களுக்கு புத்துணர்ச்சியளித்தல் போன்ற செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.